அகிலத்திரட்டு அம்மானை 7261 - 7290 of 16200 அடிகள்
கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து
உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த்
கெதியோவிதியென்று கேட்டுஇருக்கையிலே
தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால்
கானகமேநடக்க களைப்பா இருக்கயிலே
வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய்
நாட்டையும் போட்டுக் குலபதவியுன் தனக்கே
என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து
அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார்
அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க
எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம்
மாது புவியில் வளரப் பிறந்தபின்பு
தாது கரமணிந்த சங்கு சரத்தாமன்
தேவன் தனைப்பார்த்துச் செப்புவா ரெம்பெருமாள்
பூவுலகி லுன்றனுட பெண்பிறக்கப் போனதல்லோ
ஏதுநீ தேவா இனியுனது செய்தியென்ன
சீரொத்தத் தேவன் திருப்பாட்டு ஓதலுற்றான்
விருத்தம்
ஆறுசெஞ்சடை சூடிய ஐயனே அலையிலேதுயி லாதி வராகவா
நீறுமேனி நிரந்தரம் பூசிவா நீசிவாசிவ மைத்துன ராகவா
வீறுசத்தி மணவாள ரானவா வீரலட்சுமி மன்னரரி ராகவா
ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா எமையாட்கொள் ளும்நாரணா போற்றியே
விருத்தம்
சீதமாங்குணச் செல்வனே போற்றி சிவசிவா சிவனே போற்றி
நீதவா நட்பெய்துவா போற்றி நீசிவா சிவராகவா போற்றி
மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரிசெல்லனே போற்றி
ஆதவா அரிநாரணா போற்றி அனாதியேயுன் றன்போற்றிப் போற்றியே
விருத்தம்
அய்யனேதவம் யானிற்கும் போதிலே அந்திராணி மன்னனிந்திர னானவன்
பொய்யின் மாய்கைநினை வதினாலவன் பொற்பக்கிரீடமீ துற்பனத் தாசையால்
மெய்யின்ஞா னத்தவம் விட்டுவாடினேன் வித்தகாவுன் சித்த மிரங்கியே
செய்யும் பாவவினை தவிர்த்தாண்டருள் சிவசிவா சிவசிவா சிவாபோற்றியே
விருத்தம்
போற்றியென் றேத்தித் தேவன் பொற்பதம் வணங்கி நிற்க
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 7261 - 7290 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi