அகிலத்திரட்டு அம்மானை 11041 - 11070 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 11041 - 11070 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

துரோக மடைந்து தீநரகில் மாள்வீர்கள்
என்று சபித்தார் எம்பெருமா ளானவரும்
அன்று அவர்கேட்டு அப்படியே வந்ததென்றால்
சொன்ன நரகில் செத்திறந்து போவோமென
அன்னப் பெருமாள்முன் ஆணையிட் டுப்போனார்
போனா ருலகில் பிச்சைவேண் டிக்குடித்து
வானோ ரறிய மந்திரமா ஞாலமற்று
மந்திர வித்தை மாமுனிவன் சாஸ்திரமும்
தந்திரமும் போச்சுதென்று சகலோருங் கொண்டாடி
வைகுண்ட சுவாமி வாய்த்த கணக்கதிலே
மெய்கொண்ட வானோர் மிகஅறியத் தானெழுதி
மேலோக மான வைகுண்ட ராச்சியமும்
பூலோக முமறியப் பெரியோ னெழுதினரே

விருத்தம்


மாந்திரங் கழிவு சூன்யம் மாரணக் கருவு கோளும்
உபாந்திரக் கேடு தீதோ(டு) ஊறியப் பொய்பொல் லாங்கு
ஏந்திய நினைவு பாசம் இதுமுதல் வினைக ளெல்லாம்
சாந்தியி லெரித்து நீற்றித் தர்மத்தை வளர்க்க லுற்றார்

அய்யா தர்மம் கூறல்

நடை

நல்லநா ராயணரும் நாமமணி வைகுண்டராய்ச்
செல்லத் திருவுளமாய்ச் சீமைக் குறுதியுமாய்
மனிதவதா ரமெடுத்து வைகுண்ட வாசவனும்
பனிதவழும் பத்தினியாள் பாலருட வங்கிசத்தில்
தனுவையடக்கி தவசு இருந்துகொண்டு
ஒன்றாக்கி வாழ உலகமதிலிருந்து
உண்டாகி வளர்ந்து உலக மறிவதற்கு
குண்டணிப்பேய் பொய்யும் குறளிக்கரு வைத்தியமும்
ஆகா தெனஎரித்து அப்பிறப் புமறுத்து
வாகாகத் தர்மபதி வாழுங்கோ மானிடரே
என்றுசொல்லித் தர்மம் எம்பெரு மாள்நினைத்து
மன்றுபதி னாலறிய வாய்த்ததர்மங் கூறினரே
இன்றுமுத லெல்லோரும் இகபரா தஞ்சமென்று

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi