அகிலத்திரட்டு அம்மானை 10621 - 10650 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10621 - 10650 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சீமையைம்பத் தாறும் சொல்லொன்றுக் குள்ளாக்கி
மேன்மைச் சான்றோர்க்கு முத்திரிசெங் கோல்கொடுத்துத்
தாழ்வில்லாச் சான்றோரைத் தர்மபதி மீதில்வைத்து
ஆள்வதுவும் நிசமே ஆதியா கமப்படியே
நாரா யணர்க்கு நாள்பகையாய் வந்தவர்க்குப்
போரா தெனக்காலம் புராண முரைக்கிதுகாண்
சொல்லி யுலகோர் தொல்புவியில் கொண்டாடிப்
பல்லுயிரு மறிந்து பண்பாய் மகிழ்ந்திருந்தார்
மகிழ்ந்து சிலநாள் வைகுண்டர் பாதமதில்
மிகுந்துபல சாதிமுதல் மிகவந் துரைகேட்டார்
வந்த நருளறிய வைகுண்டர் வாய்திறந்து
சொந்தமுடன் வசனம் சொல்லிமிகக் கூறலுற்றார்

திருவாசகம் - 4

1008 ஆம் ஆண்டு மாசியில் கடற்கரையாண்டி
நாராயணம் பண்டாரம் தெச்சணம் பள்ளிகொண்டு
காணிக்கை கைக்கூலி காவடி முதல் என்றனக்கு
அவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு,
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகத்தோன்றி,
உற்ற துலுக்கன் உடன் வந்துடனோடி,
மற்றொரு பத்தாமாண்டில் வைகுண்டம் வருவோ மென்ற
ஆகமத்தின்படி வந்து வைகுண்டம் பிறந்து கொண்டிருக்கும்
நச்சேத்திரத்தில் குதிச்சிக் கொள்ளுந்தன்னே,
மாளுவது மாண்டு கொள்ளுந் தன்னே,
முழிக்கப்பட்டது முழிச்சி கொள்ளுந்தன்னே,
முழிக்கப்பட்டது கண்டு கொள்ளுந்தன்னே,
ஒரு நெல் எடுத்துடைக்க நாடு கேட்டுக் கொள்ளுந்தன்னே,
இரு நெல் எடுத்துடைக்க நாடு தாங்காது தன்னே,
வானமும் பூமியும் கிடுகிடென்றாடிடுந் தன்னே,
வானத்திலிருக்கிற வெள்ளிகளெல்லாம் ஆலங்காய்போல்
உதிர்ந்திடுந்தன்னே, மலைகள் இளகிடும் தன்னே,
பதி எழும்பிடும் தன்னே, முழிக்கப்பட்டது கண்டுகொள்ளுந்தன்னே.

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi