அகிலத்திரட்டு அம்மானை 10351 - 10380 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10351 - 10380 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உத்தரித்து மாமுனிவன் ஒருநொடியி லேயிறங்கித்
திர்ப்தியுட னேகித் தெச்சணா பூமிவந்தான்
வந்து இரந்து வருசமொன் றானதின்பின்
முந்துநின்ற காவில் உவந்து தவசுநின்று
பரமன் பாதாரப் பவிசு மிகவடைந்து
வரமருளப் பேறுபெற்று வாழ்ந்திருந் தானம்மானை
அப்படியே தோசம் அகன்று அறம்வளரும்
உற்பனம்போ லொத்த உகந்ததெச்ச ணாபதியே

விருத்தம்

தெச்சணா புரியி னீதம் செப்பிடத் தொலையா தையா
மிச்சமாம் புவியி தாகும் மேவலர்க் குகந்த நாடு
பச்சமால் மகனே நீரும் பண்ணுறத் தவசு ஏறும்
அச்சமும் வாரா தையா என்றடிமிசைப் பணிந்து நின்றான்

விருத்தம்

நல்லது தானே யென்று நாரணர் தயவு கூர்ந்து
வெல்லமர் மணவை வாரி மேன்முக மதிலே நின்று
அல்லல்நோய் பிணிகட் கெல்லாம் அறமதால் தண்ணீர் தன்னால்
தொல்லைநோய்த் தீர்ப்போ மென்று தெச்சணா புவியில் வந்தார்

விருத்தம்

வந்தவர் தலமும் பார்த்து வழியி னற்குலமும் பார்த்துச்
சந்தமாய் மகிழ்ச்சை கூர்ந்து சாமியும் முனியைப் பார்த்து
இந்தமா நகரில் வாழும் இராசனு மறிய வென்றே
விந்தையா யறிவு வொன்று விதித்தெழுதி யனுப்பு மென்றார்

திருவாசகம் - 3


வாலராமச்சந்திர சூரிய நாராயணர் தாமே
வைகுண்டமாய்த் தோன்றி, தர்மம் நித்திச்சு,
காணிக்கை கைக்கூலி காவடி என்றே
திருச்சம்பதி முதல் வேண்ட அவசியமில்லையென்று
நிறுத்தலாக்கியே, உகஞ்சோதித்து ஒரு குடைக்குள்ளான
ஆயிரத்தெட் டாமாண்டு மாசியில்
கடற்கரையாண்டி நாராயணம் பண்டாரமென நாமமுங்கூறி,
எளிய கோலமெனப் பாவிச்சு தெச்சணம்
பள்ளிகொண்டிருந்து, தர்மமாகத் தாரணி யாபேர்க்கும்
தண்ணீ ரினாலே சஞ்சலநோய் கர்மம் வற்மம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi