அகிலத்திரட்டு அம்மானை 9781 - 9810 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9781 - 9810 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆதி சர்வேஸ்வரனாகிய அவனியைம்பத்தாறு
சீமையும் அடக்கி அரசாளவும் ஆதிசர்வ காலமும்
அழியாத் திருவுளமாயிருந்து அரசாள்வாரெனவும்
ஆதிராமச் சந்திர சூரிய நாராயணர்க்கு ஆதியாகமத்தின்
படியாகவே ஆதிவைகுண்டம் பிறந்தாரெனவே,
அண்டர்களும் முனிவர்களும் தேவர்களும்
அதிக சகல மாமுனிவர்களும் எல்லோருங் கூடியிருந்தாராய்ந்து
தொண்டர்தமக் கென்றுவளர் கொன்றையணி கயிலையில்
மண்டலம் புகழச் சிவனாருடைய கிருபையினாலே
இன்றவர் கைலையங்கிரியில் எழுதினார்.

வைகுண்டர் முருகனுக்கு அருளல்

நடை

அன்றந்தத் தேவர்முனி எல்லோருந் தாங்கூடி
சென்றந்தக் கயிலை செகத்தூணி லேதரித்து
வைகுண்டர் பாதமதை வாழ்த்திக் குவித்துவர
மெய்கொண்ட நாதன் வேலவன்செந் தூரணுகி
நடக்க அறுமுகனும் நடுங்கி மிகப்பதறி
வடக்குமுக மாய்விழுந்து வைகுண்ட ரைப்போற்றி
அப்போது வேலவனை ஆதிவைகுண் டர்பார்த்துச்
செப்புகிறார் குண்ட சிவநாத கண்மணியும்
நாடுகேட் கப்போறேன் நாரணன் நான்தானும்
கேடு வருமுனக்குக் கேள்விகே ளாதிருந்தால்
இத்தனை நாளும் என்னைக் கெணியாமல்
புத்தியறி யாதவர்போல் புலம்பினீ ரித்தனைநாள்
இனிவைகுண் டம்பிறந்து ஏகமொரு குடைக்குள்
மனுவொரு சொல்லாள மகாதர்ம மேநினைத்து
மாய்கை யறுத்து மாற்றான் கருவறுத்துத்
தோயக் குழிமூடி தொல்புவியைத் தானாள
நல்லோர்க ளெடுக்க நான்போறேன் கண்டாயே
கல்லார் தமக்குக் கசப்பினிமேல் கண்டாயே
தர்மவை குண்டம் தான்பிறந்தேன் இப்போது
தர்மச் சிறப்புத் தானினிமேல் கண்டாயே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi