அகிலத்திரட்டு அம்மானை 9001 - 9030 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9001 - 9030 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தர்மத்தை வளர்த்திருநீ தன்னாலே அதுவளரும்
தருமமதாய்த் தாரணியில் தன்னந்தன் னால்வாழ்ந்து
பொறுமைப் பெரியோராய்ப் பூதலமெல் லாம்வாழ்வார்
எப்போதும்போல என்னை நினைத்தே இருநீ
அப்போது நீயரசு ஆளுவாய் யென்மகனே
வாரிமூன்று கோதி வளைந்திருக்கு மோர்தீவை
சாதியொரு நிரப்பாய்த் தானாள்வா யென்மகனே
கோடுபல வாதும் கோள்நீசப் பாவிகளும்
கேடு வருங்காலம் கிருஷ்ணா வுன்நற்காலம்
வானமது வெள்ளி மாறிவெறும் வானமதாய்
மேன் முகிலற்று வெறுவான மாய்த்தோன்றும்
நல்ல மகனே உனக்குவரும் நற்காலம்
சொல்லத் தொலையாது சூல்மகனே என்கணக்கு
ஒக்க அடக்கி உரைத்திருக்கு வுன்னிடத்தில்
நிற்க நிலைக்க நினைத்ததெல்லா மங்காகும்
பொறுமை பெரிது பெரிய திருமகனே
தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே
எல்லா முனது இச்சையது போல்நடக்கும்
நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி
எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே
பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே
தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே
வந்தா ரறிவார் வராதார் நீறாவார்
இன்ன முன்காலம் இயம்புவேன் கேள்மகனே
தன்னந் தன்னாலே சாதிக்குச் சாதிமாளும்
நல்ல நினைவோர்க்கு நாளெத்தனை யானாலும்
பொல்லாது வாராமல் புவிமீதில் வாழ்ந்திருப்பார்
நாட்டி லொருஅனுமன் நல்லவனை நானயச்சு
கோட்டிசெய் யென்றுரைப்பேன் கோமகனே வுன்காலம்
முறைதப்பி யாண்ட முகடன் வெறும்நீசன்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi