அகிலத்திரட்டு அம்மானை 8971 - 9000 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8971 - 9000 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அச்சமயம் நான்வருவேன் அனல்மாற்ற என்மகனே
உகமீதே தர்மம் உனக்கெனக்கென் றேகுதிக்கும்
மகனே வுனது மாதவத்தோர் காலம்நன்று
கால மிதுமகனே கண்மணியே கேட்டிடுநீ
தூல முரையாதே துலங்கும்நா ளாகுமட்டும்
எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே
தாழக் கிடப்பாரைத் தற்காப்ப தேதருமம்
மாளக் கிடப்பார் மதத்தோர்க ளென்மகனே
இவ்வகைக ளெல்லாம் என்மகனே யுன்காலம்
அவ்வகைக ளெல்லாம் ஆராய்ந்து பார்த்திருநீ
இனத்துக் கினங்கள் இருப்பேனான் சுவாமியென்று
மனதில் வேறெனவே வையாதே யென்மகனே
நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே
தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ
தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே
மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே
அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து
எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே
லிங்கமொன் றேதிக்கும் இணையாக ஓர்சோடாய்
தங்கநவ ரெத்தினங்கள் சமுத்திரத்தி லேகாணும்
ஆனையொரு கன்றீனும் அதினா லுலகமெல்லாம்
தானாக ஆளும் தலைவனும்நீ யல்லாது
மலையடி வாரம் வளருமொரு விருச்சம்
அலையதி லும்பெரிதாய் அதுதழையுங் கண்டாயே
சிலையுள்ளே தோன்றி சிவதோத்தி ரமாக
நிலையொன்றா யாகி நீயாள்வா யுன்காலம்
வாரிக் கரையில் மண்டபமொன் றேவளர்ந்து
நாரியர்கள் கூட நாடெங்கும் வாசமிட்டு
ஒருகுடைக்குள் ளாள்வாய் உன்கால மென்மகனே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi