அகிலத்திரட்டு அம்மானை 8821 - 8850 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8821 - 8850 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும்
உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய்
சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே

நடை

மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால்
அகமே வைத்திருநீ அருளிதருவதெல்லாம்
சிவசக்திநானும் உன்சிந்தைக்குள்ளிருப்போம்
தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால்
அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம்
எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே
முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்
மூன்றாந் தவசு தர்மிமுனி தேவரிக்ஷிகளுக்கும்
நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்
இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்
எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனே
ஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்து
பாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ
வஸ்த்துவகை சொத்து மனைவீடு வாசல்முதல்
சற்றுமன தெண்ணாமல் தானிருந் தென்மகனே
நன்மையோடு தண்மை ஒன்றுமிகப் பாராமல்
உண்மையோடுதன்மை யொன்றுமிக பாராமல்
கந்தைத் துணியுடுத்து கைநிமிர்ந்து காட்டாமல்
எந்தப் பேரோடும் இனிப்புமொழி பேசாமல்
பாலல்லால் வேறு பண்டமிக ஏராமல்
காலல்லால் சுத்தம் கழுவ நினையாமல்
மூக்கு நடுவே மும்முதலு முத்திமுத்தி
நாக்குச் சுழிதாங்கி நாரணன் நானெனவே
எகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஓரிருப்பாய்
மகாபரனை நெஞ்சில் மறவாம லெப்போதும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi