அகிலத்திரட்டு அம்மானை 8611 - 8640 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8611 - 8640 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஒப்புரவாய் நீயெரித்த உவமைசொல்லக் கூடாது
அனலே வுனக்கபயம் ஆதி யுனக்கபயம்
கனலே யமருமையா காந்தல்தனை மாற்றுமையா
மன்னரரி நாரணர்க்காய் மாறுவீ ரக்கினியே
இந்நியல்பை யெல்லாம் என்மன்ன ரிங்குவந்தால்
சொல்லி யுனக்குச் சொக்கம்வேண் டித்தருவேன்
வில்லிக்கு வல்லவனே விலகி யமருமையா
என்னையென் மன்னவர்தான் இந்தக் கடலதிலே
பொன்னனைய நன்மகரம் ஆகவே போகவிட்டார்
வருவோ மென்றநாளும் வந்ததுகா ணக்கினியே
தருவே னுனக்குவரம் தாட்டீகன் வந்ததுண்டால்
அமர்ந்துநீ போனால் அதிகப்பல னுண்டாகும்
சுமந்த பறுவதத்தின் சுகம்பெற்று நீவாழ்வாய்
ஏலமுனி சாபமதால் என்னினிய மன்னவர்தான்
சீலமுள்ள தங்கமலை செடத்தைவைத்து போயிருக்கார்
தங்கமலை பொன்கூட்டில் தருமாதியை நிறுத்தி
வங்கன் அனந்தனையும் வதைக்கவதம் இருந்தேன்என்றாள்
என்றுமக ரமாது எரியைமிகக் கண்டுளறி
நின்று மயங்குவதை நெடியதிரு மாலறிந்து
அனலைமிக வுள்ளடக்கி ஆதி யுருக்காட்டி
மனைவியேநீ வாவெனவே மாய னருகழைத்தார்
உடனே பொன்மாது உள்ளம் மிகநாணி
தடதடென வந்து சுவாமியடி யில்வீழ்ந்து
எந்தன் பெருமானோ இப்படித்தா னின்றதுவோ
சிந்தை மயக்குதற்கோ தீப்போலே வந்ததுதான்
என்றுமிகப் பொன்மகர இளமாது ஸ்தோத்தரித்து
மன்று தனையளந்தோர் வாநீ யென அழைத்து
அருகில் மிகநிறுத்தி அங்குள்ள தேர்பதியும்
கருதி யிருபேரும் கண்கொண் டுறப்பார்த்து
வச்சிர மேடை மரகதப் பொன்மேடை

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi