அகிலத்திரட்டு அம்மானை 8071 - 8100 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8071 - 8100 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சொல்லுகிற வெயிலாள் மடக்கொடியாள்
வயிற்றிலே நாடுமொரு மதலை பிறந்து
பத்து வருசமாச்சுது. நாங்களும் மகா அருணா சலத்திலே
நாங்களும் வாலிபப் பிள்ளையா   யிருக்கிறோம்.
அந்த வாலிபப் பிள்ளை என்ன சொல்கிறா ரென்றால்
வீர புரந்தர தர்மராசா வழியிலே விகிநாராயணர்
இங்கே வந்து மூன்று மாதத்துக்குத் தவசுபண்ணி  
இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார்.
வந்தவுடனே அந்நியோன் னியக் கலகமாகும். 
அந்தக் கலகத்திலே ஒருவருக்கொருவர்
சத்தியமாய்ப் போவார்கள்.போன பேர்கள் போக
இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். 
அவர்களுக்கு வேண்டிய  பாக்கியத்தைக் கொடுப்போம்.

விருத்தம்

பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழு வோர்க்கு
நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்து வாழ்வார்   
தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே

விருத்தம்

தினமொரு நேர மெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்
துணிவுடன் கேட்டோ ருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே

விருத்தம்

வாசித்தோர் கேட்டோ ருற்றோர் மனதினி லுணர்ந்து கற்றோர்
ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார்

விருத்தம்


திருமொழி வாசகந் தன்னைத் தேசத்தில் வருமுன் னாக
வருவது திடனா மென்று வழுத்தினோம் தொளாயிருத்து 98ல்
ஒருதிருக் கூட்ட மாக ஓராயிரத் தெட்டா மாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே

விருத்தம்

வருத்தினோ மம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கிக்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi