அகிலத்திரட்டு அம்மானை 8011 - 8040 of 16200 அடிகள்
உயிர்நிலையில்லாதவர் அழிந்து போவார்கள். அதில்மேல் பதினெட்டுத்
துர்க்கையம்மாள் பிறந்து அந்தக் கலியுகப் பஞ்சமிர்த
ராச்சியத்திலே வருகிறார்கள். வந்தவுடனே மூன்று
நாள் இருள்மூடி ஆனைத் துதிக்கைபோல் மழைபெய்யும்.
அதிலே சில துர்ச்சனர்களெல்லாம் மாண்டு போவார்கள்.
அதின்மேல் பக்தியாயிருக்கிற பேர்களுக்கும்
பிள்ளை யில்லாமலிருக்கிற பேர்களுக்கும்
கண்ணில்லாமலிருக்கிற பேர்களுக்கும்
தனமில்லாமலிருக்கிற பேர்களுக்கும்
பராபர மூர்த்தியும் சாம்பசிவ மூர்த்தியும் ஸ்ரீராமச்சேயரும்
தீட்சையாகித் திருமனதிரங்கிப் பக்திகாரணங்களைச்
சோதித்துப் பகிர்ந்து அவரவர் கேட்ட வரங்களைக் கொடுப்பார்கள்.
இன்னுஞ்சிறிது நாளையிலே சிலபேர்கள் தெய்வீகமாய்ப் போவார்கள்.
முன்னுக்கு மழைதட்டும்
உலகிற்பல பல வஸ்துவும் பலிக்குமென வகுத்தார்.
சிலநீசர் மிகக் கறுப்பை நினைவில்லாத்தொட்டு
மிகப் பாசமடைந்து அலைந்து அழிந்து போவார்கள்.
வாலி சுக்ரீபனும் பண்டாரமாகிப் போவார்கள்.
வாச்சி கொழு கலப்பையெல்லாம் நாசமாகிப் போய்விடும்.
முன்னாலே துலுக்கர் தம்மை நாசம் பண்ணுகிறதற்காகவே
துர்க்கையம்மாளைப் பிறவி செய்தனுப்புகிறோம்.
பிராமணர் நன்றாய் சுகத்துடன் வாழ்வார்கள்.
புவியில் முகத்துலிங்க மில்லாத பேர்க்குப் பிரமதேவரை யனுப்புகிறோம்.
பிரமதேவர் புவிமீதில் வந்து பக்தி காரணங்களைச் சோதித்துப்
பொல்லாத பேரைத் தெரிந்து பிடித்துப் புதுக்கிராம தேசத்தில் வாழுந்
தேவதைக்குப் பூசைப்பண்ணிப் போடுவாரெனப் புகட்டினார்.
காவேரியாற்றுக்குள்ளே மூன்று பொதி மங்கிலியம்
கவிழ்ந்து அடையவேணுமென்றும் காசினியில் ஒரு
ஏழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை
அடர்ந்து பிடிப்பார் களென்றும், அறுத்த மங்கிலியத்தை
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 8011 - 8040 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi