அகிலத்திரட்டு அம்மானை 7921 - 7950 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7921 - 7950 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாளான நாள்வழியாய் நம்பிநம்பேரில் வைத்தார்
அல்லாமல் நம்முடைய அரிதன்மகா நாமமதை
இல்லாம லேமறைத்தான் இயல்புகெட்ட மாநீசன்
ஆனாலும் பாரமில்லை அன்னீதம் பொறுக்கரிது
மானாபர ஞாயமதை வரம்பழித்தான் மாநீசன்
ஆகமத்தைக் கூறழித்தான் அன்னீத மாபாவி
தாக மடைந்தார்கள் தவசுமுனி மார்களெல்லாம்
நீசப் பாசாசு நீணிலத்தைக் கொள்ளைகொண்டு
தோசப் பயலோடு துணையாய் மிகக்கூடிக்
கெடுக்குதுகாண் பசாசு கேட்பார்க ளில்லாமல்
கொடுக்கவொன் றில்லா நருட்பார்த்துக் கொல்லுதுகாண்
அதுவே யொருகொடுமை அநேகம் பொறுக்கரிது
எதுவும் வரம்புதம்பி இருக்குதுகாண் வையகத்தில்
ஆனதால் நாங்கள் அவனிதனிற் போயிருந்து
மானமுறை சோதித்து மனுவிடுக்கந் தான்தீர்த்து
நாட்டிலுள்ள குற்றம் நாங்கள்பார்த் துத்தீர்த்து
ஓட்டுவதை யோட்டி உறைப்பதை யுறைப்பித்து
நாடையொரு சொல்லதுக்குள் நலமாக வாழ்விக்கவே      
பேடையன்ன மாமயிலே பெண்ணரசே இப்போது
நாங்கள் நடப்பதற்கு நாளான நாளிதுவே
தாங்கள்வைகுண்டம் விட்டுதாம் போகும்முன்னதாக
ஆனதால் பாவி அவனிழுக்குச் சொல்லாமல்
மானமுள்ள புத்தியைப்போல் வாசகமொன் றேயெழுதி
வருவோமென அயச்சால் மாபாவி தானறிந்து
கருவி குழறி கற்பினைக்குள் ளாகுவதும்
என்னவோ வென்று இடும்புசெய்வ துமறிய
அவனறிய விட்டதுபோல் அவனிபதி னாலறிய
எவரும்புற் பூண்டுவரை எவ்வகையுந் தானறிய
சித்தன் கிருபையினால் சிவசங்கந்தான்கூடி
புத்திபோல் நீசொல்ல பூவறிய நானெழுதி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi