அகிலத்திரட்டு அம்மானை 7891 - 7920 of 16200 அடிகள்
வளையல் முறுக்குமிட்டு மாதுசந் தோசமுடன்
பச்சைநிறக் காப்பணிந்து பவளமணித் தண்டையிட்டு
மச்சமதில் மையெழுதி மகிழ்ந்து மூக்குத்தியிட்டுக்
தண்டரளமீதில்த் தங்கத்தகடணிந்து
கொண்டைதனில் தேமலரைக் குவிய மிகச்சூடி
பொற்சரிகைச் சேலை பெரியயேத் தாப்புமிட்டு
அச்சரக்கைத் தோழி அரம்பையர்முன் னாடிவர
அன்ன நடைநடந்து அனல்கொழுந் திட்டாப்போல்
வன்ன அழகுடனே வந்தாள்திரு முன்பதிலே
மாது வரவே மறையோனும் மாயோனும்
ஏதுகோ லமெனவே எண்ணமதி லுன்னினராம்
உன்னித் திடமாய் உளமகிழ்ந்து மாயவனும்
கன்னி தனைப்பார்த்துக் கறைக்கண்டர் தானுரைப்பார்
வன்னத் திருவடிவே மறையோனி னோவியமே
அன்ன மடமாதே அரசுக் குகந்தவளே
கருத்துடைய சோதி கவியுடையீ ருந்தனையும்
வருத்தின காரியந்தான் வகுக்கக்கே ளொண்ணுதலே
நாட்டிலொரு நீசன் நன்றியறியாப் பிறந்து
மேட்டிமையாய் லோகமெல்லாம் மெய்யழித்தான் கண்டாயே
கோட்டிப் பவம்பிறந்து குருநீதி யைக்கெடுத்தான்
கேட்டிருக்கக் கூடாது கெடுநீசன் பொல்லாங்கு
நம்மை நினையாததுதான் நமக்குசற் றெண்ணமில்லை
செம்மையுள்ள சான்றோரைச் செய்தபங்க மேற்கலையே
தெய்வப் பிறவியல்லொ திசைவென்ற சான்றோர்கள்
மெய்வரம்பை யெல்லாம் மிகக்கெடுத்தான்மாபாவி
கற்பகலாப் பெண்களுட கற்புக்கிரங் காதிருந்தால்
உற்பனமோ நாமள் உடையபர னென்றாமோ
எளியவனை வம்பால் இடுக்கஞ்செய் தேயடித்தால்
விளியிட் டழுதாலும் மேதினியிற் கேட்பதில்லை
கேளாத காரணத்தால் கீர்த்திகொண்ட பேரெளியோர்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 7891 - 7920 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi