அகிலத்திரட்டு அம்மானை 7831 - 7860 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7831 - 7860 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நீங்கள் நடப்பதென்றால் எனக்குவெகு சந்தோசம்
தாங்கள் மனதிரங்கி சாற்றிமிகப் போவுமென்றார்
அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தானோக்கி
மைப்போடுங் கண்ணினிய மைத்துனரே யென்றாவி
சொல்லுச் சொல்லாதபடி சொல்லுதற்கு உம்மையல்லால்
அல்லும் பகலும் அலைந்தாலுங் கிட்டாது
போங்களென்று சொல்லாமல் புத்திசொன்னாப் போலேநீர்
தாங்கி யுரைத்தீரோ சத்தியுள்ள மைத்துனரே
புத்தியிது நன்று புண்ணியநா ராயணரே
தத்தியுட னடக்க தருணமெப்போ தென்றுரைத்தார்
நடக்கக் கருமமிது நல்லதுதா னென்றுசொல்லி
அடக்க முடனே அய்யாநா ராயணரும்
ஒத்திருந்து தங்கள் உற்பனமா யாராய்ந்து
புத்திபோல் வாசகங்கள் பூத்தான மாயெழுதி
நாட்டு நருளறிய நடைசீவ செந்தறிய
காட்டு மரமறிய கல்லப்பு தானறிய
புற்பூ டறிய பூமிதெய் வாரறிய
நற்பறிந்து பேய்கள் நடுங்கி மிகஅறிய
சேட னறிய சிறுவாய்வு தானறிய
மேக மறிய மேலோர்கள் தாமறிய
பூக மறிய பொழுதுசந் திரனறிய
நட்சேத் திரமறிய நமனறிய கொளறிய
பொய்ச்சரியை கிரியை பேர்நா லுந்தானறிய
வேத மறிய விளங்கு மறையறிய
வாதை யறிய மன்றுபதி னாலறிய
சங்கறிய முத்தறிய சகலமச்ச முமறிய
அங்கறிய நாம்படைத்த எல்லோருந் தானறிய
எழுதி விடுவோங்காண் ஏற்றரிய புத்திவைத்து
பழுதுவைத்தா ரென்று பார்பலதுஞ் சொல்லாமல்
நம்பேரில் குற்றம் நகத்தளவு மில்லாமல்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi