அகிலத்திரட்டு அம்மானை 7801 - 7830 of 16200 அடிகள்
என்றனக்கு நல்ல இளங்குறத்தி வட்டிதந்து
மைந்தன் சரவணற்கு மறிப்பு மிகக்கொடுத்துப்
பிரமனுக்குக் கோலமிட்டுப் பிசாசுத னைவிரட்டி
வரமுள்ள தேவதைக்கு மாற்றி யுருக்கொடுத்து
லோகமதில் நம்மையும் உகக்கோலங் களிட்டி
வேகத்துடனே மேதினியெல் லாந்திரிந்து
கலிக ளகலக் காண்டங் கழிக்கவென்று
பலிகாண வைப்பார் பரசோ தனைக்கனுப்பி
உலகதிலே நாமள் உவரியிலே தவமிருந்து
செகமதிலே ஓர்பாலன் சிறப்பாய் மிகவெடுத்து
கலிமுடிக்க போவார்காண் கர்த்தனரி வைகுண்டரும்
பெலிகொடுத்து கலிதனையும் பெரும்புவி ஆள்வார்காண்
இப்படியே தோணுதுகாண் என்னுடைய சிந்தையிலே
எப்படியும் வந்து இதுசமையு மீசுரரே
என்று உமையாள் ஈசர்தனை வணங்கி
அன்று மொழிந்து அவள்நிற்கும் வேளையிலே
நாரா யணரும் நல்ல சிவனிடத்தில்
சீராக வந்து தெண்டனிட்டுத் தானிருந்தார்
இருந்து மாலோனும் இருதயத்தி னுள்மகிழ்ந்து
பொருந்துவிழி தங்கையோடு புகலுவா ரம்மானை
என்னுடைய தங்கையரே எனைமேனி யாக்குவளே
உன்னுடைய தன்பொருட்டால் உலகளந்தோ னானாகி
நாட்டி லென்பேரு நடத்திவைத்த நன்னுதலே
கோட்டு வரையாளே கோவே யென்தங்கையரே
நீயும் நம்மீசுரரும் நீணிலத்தில் போகவென்று
நானும் நினைத்திருந்தேன் என்று நவின்றாயே
ஈஸ்வரிக்கு மீசுரர்க்கும் இந்த நினைவானால்
தேசமதில் போக வேண்டாமென்று சொல்வாரோ
நானுங் களைவலிய நாட்டிற்போ மென்றிலனே
தானுங்கள் தம்நினைவில் தரித்ததுபோ லேபோவும்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 7801 - 7830 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi