அகிலத்திரட்டு அம்மானை 11521 - 11550 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 11521 - 11550 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

புரிந்தவன் கோட்டி செய்து பிடிக்கவே வந்தா னங்கே

விருத்தம்

வருமுன்னே யருகில் நின்ற மக்களை வைந்த ராசர்
கருதின மாக நோக்கிக் கடக்கவே நில்லும் நீங்கள்
பொருதிட நீசன் வாறான் பொறுத்துநாம் வந்த போது
அருகிலே உங்கள் தம்மை அழைத்துநாம் கொள்வோ மென்றார்

சுவாமி பொறுமை உரைத்தல்


நடை


முப்படியே யுள்ள முறைநூற் படியாலே
இப்போது நீசன் இங்கோடி வாறான்காண்
மெய்ப்பான மக்களெல்லாம் விலகிநின்று வந்திடுங்கோ
செய்கிறதைப் பார்த்துத் திரும்பியிங்கே வந்தவுடன்
கையருகி லுங்களையும் கட்டாய் வரவழைப்போம்
என்று மக்களுக்கு இயம்ப அவர்விலக
முன்றுசெய்யாப்பாவி முடுகுங்கௌடனுமே
கூட்டப் படையோடு கொக்கரித் தேதுடிப்பாய்ச்
சாட்டை வெறிபோலே சாடிவந் தான்கௌடன்
சூழப் படையைச் சூதான மாய்நிறுத்தி
வேழம் பலரேவி வெடியா யுதத்துடனே
வந்து வளைந்தான் வைகுண்டர் வாழ்பதியில்
சிந்துக் குயிரான ஸ்ரீபல்ப நாபருமே
கவிழ்ந்துபதி வாசலிலே கட்டிலின் மேலிருக்க
அவிழ்ந்த துணியோடே அவரிருக்கு முபாயமதை
அறியாமல் நீசன் அணிவகுத்துத் தன்படையைக்
குறியாய்ப் பிடிக்கக் கூட்ட மதில்நுழைந்து
சாணா ரினங்கள் சதாகோடி கண்டுளைந்து
வாணாள் வதைப்பானோ என்று மனதுளைந்து
குதிரை மேலேறிக் கொடுஞ்சாட்டை யால்வீசி
சதிரு சதிராய்ச் சாணாரைத் தானடித்து
அடிபட்ட போது அவர்கள்மிகக் கொக்கரித்து
முடிபடவே யிந்த முழுநீச வங்கிசத்தை
இப்போ தொருநொடியில் இவரையெல் லாமடித்து
மெய்ப்பாகக் கொன்று விடுமோ மெனச்சினத்தார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi