அகிலத்திரட்டு அம்மானை 9271 - 9300 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9271 - 9300 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆண்டார் மகனே அதிகத் திருமகனே
நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம்
செல்ல மகனேவுன் சிந்தையிலே பற்றினதோ
போதுமோ விஞ்சை புகலணுமோ என்மகனே
சாருமொரு விஞ்சை தான்சொல்வேன் கேள்மகனே
முவ்விஞ்சை வைத்தேன் உலகமறி யாதவிஞ்சை
இவ்விஞ்சை மாத்திரமே இனம்பிரித்துச் சொல்லாதே
பெற்றோர்கள் கண்டுகொள்வார் பேசரிய என்மகனே
கற்றோர்கள் கண்டுகொள்வார் கண்ணே திருமகனே

விருத்தம்

கண்ணே மகனே திருமகனே கமலப் பூமா கரிமகனே
எண்ணே யெழுத்தே என்மகனே இறையோர் தொழவே வருமகனே
ஒண்ணே மகனே உயர்மகனே உடைய மகனே கண்மணியே
தண்ணே மகனே தவமகனே சாகா திருக்குஞ் சலமகனே

விருத்தம்


மகனே தவமே மரகதமே மாதவம் பெரிய மலரோனே
தவமே யுனதுள் வைத்தவிஞ்சை தானே போது மோமகனே
எகமேழ் மகிழ வந்தவனே என்றன் மகனே வளர்வையென
உகமே ழளந்தோ ருரைத்திடவே உயர்ந்த மறையோர் வாழ்த்தினரே

நடை


அய்யாநா ராயணரும் ஆதிவை குண்டமென
மெய்யா யுரைத்து விளங்கவே வாழ்த்தலுற்றார்
மகனே வுன்தேகமதில் வைத்த நிறங்களெல்லாம்
உகமழியு முன்னே ஒருவர்கண் காணாதென
அகமே வைத்து அகமகிழு என்மகனே
வைகுண்ட மென்றுமிக வாழ்த்தக் குருநாதன்
மெய்குண்டத் தோர்கள் மேலோர்கள் வாழ்த்தலுற்றார்
மகரவுந்தி விட்டு வைகுண்டந் தான்பிறந்து
சிகரமுனி தேவருட சிறப்பதிலே வந்தவுடன்
தேவர் திருவானோர் சென்றெடுத்து வைகுண்டரை
மூவர்தே வர்மகிழ்ந்து முதலோனைக் கைகுவித்து
ஏந்தி யெடுத்து இளந்தொட்டில் மீதில்வைத்துச்
சாந்தி கழித்துத் தவலோகச் சட்டையிட்டுச்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi