அகிலத்திரட்டு அம்மானை 8161 - 8190 of 16200 அடிகள்
செப்புகிறோ மென்று தெண்டனிட்டுச் சொல்லலுற்றார்
வேதவியாசர் முன்னாகமம் கூறல்
விருத்தம்
குறோணி முதலாய்க் கூறுகெட்ட நீசன்வரை
தரணியுக மாறுஞ் சாற்றியே-சத்தியுடன்
தர்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து
தர்மயுகம் ஆளுவதும் தான்சாற்றினார்
நடை
குறோணியொடு நீசன் கோள்பிறவி ஏழ்பிறந்து
தரணியுக மாறோடு தன்னால ழிந்ததுவும்
சொல்லி விரித்துச் சுத்த வியாகரரும்
நல்லியல்பு கொண்ட நாரணரோ டேதுரைப்பார்
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற நசுறாணி உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் ஆனவை குண்டராசர்
உற்றொருவர் வந்து உலகாள வேணுமென்றும்
முன்னே பரந்தான் மொழிந் ததின்படியே
தர்ம புவியாள சுவாமிநீ ராகவென்றும்
துர்மக் கடன்கழித்தோர் சுகமாக வாழ்வரென்றும்
ஆகமத்தைப் பார்த்து ஆதிவி யாசுரரும்
நாகத்தணை கிடந்தோன் நாட்டம தாயுரைத்தார்
விருத்தம்
உரைத்திட வியாசர் தானும் உண்மையாய் மொழிந்த தெல்லாம்
கரைத்திடாக் கயிலை மீது கல்லிலே எழுதி வையும்
நரைத்திடா முனிவன் சொல்லும் நாள்வழி தோறு முற்ற
உரைத்திட முனிக்கு மேலும் உதவிகள் செய்ய வென்றார்
திருமால் கைலை விட்டு திருச்செந்தூர் ஏகல்
நடை
என்று சொல்லிவேத வியாசர் இசைந்ததெல்லாம்
அன்றுகயி லயங்கிரியில் கறைக்கண்டர் நாட்டிவைத்தார்
மாமுனியை யுமனுப்பி மாயத் திருமாலும்
தாமுனிந் தீசுரரைத் தழுவியுறத் தானணைத்துக்
கேதாரம் விட்டுக் கிரிகோவில் வந்திருந்து
கோதார மாயன் கூறுவார் சங்கமதில்
செந்தூர்க் கடலில் சென்றுபள்ளி கொண்டிருந்து
விந்து வழிசெய்து வித்தகனை ஈன்றெடுத்துத்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 8161 - 8190 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi