அகிலத்திரட்டு அம்மானை 7711 - 7740 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7711 - 7740 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சேனைச் செகம்படைத்த செல்வமோ - மானத்த
மாகலிய னேதுவினால் வாழ்விழந் திவ்வுகமும்
போகத்தருணம் வந்து பூட்டினதோ

நல்லாறு சாஸ்திரமும் நாலுமறை வேதமதும்
பொல்லாக் கலியினால் பொய்ச்சூடி - பொல்லாப்
பொடியக் கலியோடு பொன்றியடி வேரறவே
இடியத்தான் வந்தொத்த தின்று

பக்கம் பதினைந்தும் பார்மேடம் பன்னிரண்டும்
வக்கணைக் கோளொன்பதுவு மங்கி - அக்கிகொண்(டு)
அழிந்த கலியோ டலமாந் தழிந்திடவே
சுழிந்தகன லாறுவந்து சுற்றிச்சோ

மாந்திர தந்திரத்தை வைத்திய வாகடத்தைச்
சூழ்ந்திருந்த அட்சரத்தைச் சோதித்து - ஏய்ந்திருந்த
இழகு கலியோ டிம்முறையெல் லாமொடுக்கிக்
களவறுக்கச் சோதியொன்று காணுதோ

அய்யமிட் டுண்ணாத அரும்பாவி யாவரையும்
பொய்யரையும் வெட்டிப் பெலியாக்கி - மெய்யிழந்து
நையுங் கலியோடு அனலாவிக் கொண்டெரிக்க
வெய்யவன்போல் சோதியொன்று மேவுதோ

பத்திசோ தித்தே பலநாளுங் காத்திருந்த
வித்தகனை வந்து வேண்டார்மேல் - வீடிழந்து
செத்திறந்து தீநரகச் சீக்கூட்டி லேயடையக்
கொத்தியருந் தப்புழுக்கள் கொஞ்சுதோ

பாங்கலிய னேதுவினால் பண்டுண்டு செய்ததெல்லாம்
மூங்கிக் கலியதனுள் மூடி - மூச்சுவிட்டு
ஓங்குவ தோங்கி உறங்குவது தானுறங்கி
மூங்கிக் குளிப்பதுநாள் முற்றுதோ

இலச்சைகெட்ட பாவி யென்றுவந்தா னன்றுமுதல்
நற்சடலங்கள் நல்வகைகள் நாடிழந்து - நாணமுற்றுப்
பட்சிமுதல் மாமிருகம் பால்நரிகள் கற்றாவும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi