அய்யா வைகுண்டர் குற்றப்பத்திரிகை மற்றும் சிறைவாசம்
அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும்
கண்டு பொறையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன்
சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது.
இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல
அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்றோர் மக்களால் வாகனம்
மூலம் தெச்சணம் கொண்டுவரப்பட்டார். பின்னார் சான்றோர் மக்களை பக்குவப்படுத்த புற
மற்றும் அகத்தூய்மையை அளிக்கும் துவையல் தவசு எனப்படும் தவமுறையை செயல் படுத்த 700 குடும்ப மக்களை வாகைப்பதிக்கு
அனுப்பிவைத்தார். மேலும் பல அவதார இகனைகளை நிறைவேற்றினார். மும்மையின் தொகுதியான
வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும், பரப்பிரம்மம் எனப்படும் ஏகமாக இருந்து ஏழு தெய்வ
கன்னியரையும் திருமணம் செய்தார். மேலும் திருநாள் இகனையையும் நடத்த உத்தரவிட்டார்.