அய்யா வைகுண்டர் ஒரு அறிமுகம்
அய்யா வைகுண்டர், இறைவன்
கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் என அய்யாவழி
புராண வரலாறு கூறுகிறது. அய்யாவழி புராணத்தின் மூலமாக அகிலத்திரட்டு அம்மானை
விளங்குகிறது. அகிலம் கூறும் ஒருமைக் கோட்பாட்டின் அடிப்படையாக விளங்கும் ஏகம், வைகுண்டராக
அவதரிப்பதால் அவரை மையமாகக் கொண்ட ஓரிறைக் கோட்பாட்டை அய்யாவழி வலியுறுத்துகிறது.
அய்யாவழி புராண வரலற்றின்படி அய்யா வைகுண்டரின் தூல உடலையும், சூட்சும உடலையும்
தாங்கி சம்பூரணத்தேவன் என்னும் தெய்வ லோகவாசி தாமரைகுளம் என்னும் ஊரில்
பிறக்கிறார். வைகுண்ட அவதாரம் வரை அவதாரச்சடலத்தை சுமக்கும் பொறுப்பு
சம்பூரணதேவனுக்கு கொடுக்கப்படுகிறது. இவர் 'முடிசூடும் பெருமாள்' என்று வரலாற்றில்
அறியப்படுகிறார்.
கோட்பாடுகள்
- ஏகம்- அடிப்படை ஒருமை
- வேதன்-படைப்பாளர்
- திருமால்-காப்பாளர்
- சிவன்-அழிப்பவர்
- வைகுண்டர்-அவதாரம்
புனித நூல்கள்
- அகிலத்திரட்டு அம்மானை
- விஞ்சையருளல்
- திருக்கல்யாண இகனை
- அருள் நூல்
வழிபாட்டுத்தலங்கள்
- சுவாமிதோப்பு பதி
- பதிகள்
- நிழல் தாங்கல்கள்
சமயவியல்
- அய்யாவழி புத்தகங்கள்
- அய்யாவழி அமைப்புகள்
சமயச்சடங்குகள்
- முதன்மை போதனைகள்
சார்ந்த நம்பிக்கைகள்
- அத்வைதம்
- சுமார்த்தம்