அகிலத்திரட்டு அம்மானை 1 - 30 of 16200 அடிகள்
காப்பு
ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்
பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத் தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுத லுற்றேன்
சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ் செய்த பவம றுத்துன் அருள்தந்து
அகமேவைத் தெங்களை யாட்கொள்ளுவாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா
அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே
திருமொழி சீதை யாட்குச் சிவதலம்
புகழ எங்கும் ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச் சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட உவமையை உரைக்க லுற்றார்.
சிவமே சிவமே சிவமே சிவமணியே
தவமே தவமே தவமே தவப்பொருளே
சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 1 - 30 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi