அகிலத்திரட்டு அம்மானை 151 - 180 of 16200 அடிகள்



அகிலத்திரட்டு அம்மானை 151 - 180 of 16200 அடிகள்
akilathirattu-ammanai

அதின்மேல் நடப்புன் உள்ளே யகமிருந்து
உகமோ ரறிய உரைநீ முதற்காப்பாய்
சரிசமனாய் நான்வகுப்பேன் தானெழுது காண்டமதை
நானுரைக்க நீயெழுதி நாடுபதி னாலறிய
யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள்முன்னே

நூற்பயன்

வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா
பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரி யாய்ப்பறைந்தோர்
கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார்
மலடியு மிக்கதையை மாவிருப்பத் தோடிளகி
தலமளந்தோ னைநாடி தான்கேட்பா ளாமாகில்
என்னாணை பார்வதியாள் எகாபரத்தின் தன்னாணை
உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா
குட்டமது கொண்டோர் குணம்வைத்துக் கேட்பாரேல்
திட்டமது சொன்னோம் தீருந் திருவாணை

தெச்சணா புதுமை

நாரா யணரும் நல்லதிருச் செந்தூரில்
பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண் டங்கிருந்து
ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில்
நன்றான மாசி நாளான நாளையிலே
தென்னினிய வெள்ளி தியதிபத்தொன்பதிலே
கன்னிகா லக்கணத்தில் கடல்மகரத்துள் வளர்ந்து
சான்றோர் வளரும் தாமரையூர் நற்பதியில்
மூன்றான சோதி உறைந்திருக்குந் தெச்சணத்தில்
வந்திருந்த நற்பதியின் வளமைகே ளம்மானை
மூவாதி மூவர் உறைந்திருக்குந் தெச்சணமே
தேவாதி தேவர் திருக்கூட்டந் தெச்சணமே
வேதாபுரோகி விளங்கிருந்த தெச்சணமே
மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே
நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே
அகத்தீ சுவரரும் அமர்ந்திருக்குந் தெச்சணமே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi