அகிலத்திரட்டு அம்மானை 301 - 330 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 301 - 330 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

குருபூசை செய்யும் கூட்டமதிற் சிவமாய்
திருவீற் றிருக்கச் செய்திடுநீ கோலமது
நித்திரா தேவி நித்தமந்தப் பூமியிலே
மத்திபமாய்க் காக்க வையென்றா ரீசுரரும்
நினைத்தோர்க் குறுதி நினைவிலறி வுதோன்ற
எனைத்தோத் திரங்கள் இகழாமல் வையுமென்றார்
பன்றியோ டேகடுவாய் பண்புற் றிருந்திடவும்
அன்றிலோ டேகுயிலும் அன்புற் றிருந்திடவும்
கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும்
வாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும்
இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும்
பட்டியும் முயலும் பண்புற் றிருந்திடவும்
பசுவும் புலியுமொரு பக்கம்நீ ருண்டிடவும்
கசுவுங் கரைபுரளக் கரும்புமுத் தீன்றிடவும்
சாத்திர வேதம் சமயம் வழுகாமல்
சூத்திர மாகத் துல்வப் படுத்திடவும்
மனுவோர் தழைத்து மக்களொரு கோடிபெற்று
இனிதாக நாளும் இறவா திருந்திடவும்
சந்திர சூரியர்கள் தட்டுமிக மாறாமல்
இந்திரரும் தேவர் இருஷிநிலை மாறாமல்
தான தவங்கள் தப்பிமிகப் போகாமல்
வானவர்கள் தேவர் வளமாக நின்றிடவும்
ஈன மில்லாமல் இதுதெய்வ நீதமெல்லாம்
மானம் நிறுத்தி வையென்றா ரீசுரரும்
இப்படித் தெய்வ நீதம் ஈசுர ரிதுவே கூற
சொற்படி மறவா வண்ணம் திருமரு கோனுஞ் செய்தார்
அப்படித் தவறா நீதம் அம்புவி தனிலே வாழ
மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே

பெண்கள் நிலைமை

தெய்வத்திரு நிலைமை செப்பியபின் தேசமதில்
நெய்நிதியப் பெண்கள் நிலைமைகே ளம்மானை

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi