அகிலத்திரட்டு அம்மானை 121 - 150 of 16200 அடிகள்


அகிலத்திரட்டு அம்மானை 121 - 150 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்தபிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவே னென்றதொக்கும்
எம்பிரா னான இறையோ னருள்புரிய
தம்பிரான் சொல்லத் தமியே னெழுதுகிறேன்
எழுதுவே னென்றதெல்லாம் ஈசனருள் செயலால்
பழுதுமிக வாராமல் பரமே ஸ்வரிகாக்க

தெய்வம் பராவல்

ஈசன் மகனே இயல்வாய்வா இக்கதைக்குத்
தோச மகலச் சூழாமல் வல்வினைகள்
காலக் கிரகம் காமசஞ்சல மானதுவும்
வாலைக் குருவே வாரா மலேகாரும்
காரு மடியேன் கௌவை வினைதீர
வாரு மடியேன் மனதுள் குடிகொள்ளவே
தர்ம யுகமாக்கித் தாரணியை யாளுதற்குக்
கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை
சாகா திருக்கும் தர்மஅன் புள்ளோர்முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்.

அடியெடுத்தருளல்

வகுத்த பிரம்மனுக்கும் மாதா பிதாவதுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரந் தோத்திரமே
தோத்திர மென்று சுவாமி தனைத்தொழுது
ராத்திரி தூக்கம் நான்வைத் திருக்கையிலே
ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்
கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தியிரு பத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே
கதிரவன் உதிக்கும்முன்னே கன்னிகாலக்கனத்தில்
சுருதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்
நாதனென் னருகில் நலமாக வந்திருந்து
சீதமுட னெழுப்பிச் செப்பினார் காரணத்தை
காப்பி லொருசீரு கனிவாய் மிகத்திறந்து
தாப்பிரிய மாகச் சாற்றினா ரெம்பெருமாள்
மகனேயிவ் வாய்மொழியை வகுக்குங் காண்டமதுக்கு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi