அகிலத்திரட்டு அம்மானை 631 - 660 of 16200 அடிகள்
உன்னை யறுக்க ஓரம்பா யுருவெடுத்துப்
பங்கயக் கண்மாயன் பக்கமதில் நான்சேர்ந்து
உங்க ளிருபேரை ஊடுருவ நானறுத்து
இந்தக் கடலில் எடுத்துங்களை யெறிந்து
உந்தனி னூரை ஒக்கக்கரிக் காடாக்கி
நானும் வைகுண்டம் நற்பேறு பெற்றிருப்பேன்
வானுதிரு வாணையென்று மாமுனியுஞ் சாபமிட்டான்
உடனே முனியை உயர்த்தியெடுத் தேசூரர்
கடல்மே லெறிந்தார் கர்ம விதிப்படியால்
அந்த முனியும் அரனா ரருளாலே
மந்திரபுரக் கணையாய் வாரியலைக் குள்ளிருந்தான்
சுருதி முனிதனையும் தோயமதில் விட்டெறிந்து
உருதிக் குடிசூரர் ஓடிவந் தேகயிலை
மோச முடன்வந்த முழுநீசப் பாவியர்கள்
ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிநின்றா ரம்மானை
சுருதி முனியுட நிஷ்டை தொலைத்தவர்
கருதிய சூரர் கயிலை மேவியே
பருதி சூடும் பரமனைப் போற்றியே
வருதி கேட்டு வருந்தினர் சூரரே
சுருதி முனிதவத்தைத் தொலைத்தே யவன்தனையும்
பொருதி கடல்மீதில் போட்டெறிந்து வந்தவர்கள்
ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிவரங் கேட்டனராம்
வாசமுள்ள ஈசன் மாதுமையைத் தானோக்கித்
தூயவளே மாயவளே சூர ரிருவருக்கும்
நேயமுள்ள தோர்வரங்கள் நீகொடுக்க வேணுமென்றார்
வரங்கொடுக்க வென்று மறையோ னதிசயித்துச்
சிரசன் பதுடைய சீர்சூரனை நோக்கி
ஏதுவர முங்களுக்கு இப்போது வேணுமென்றார்
தீது குடிகொண்ட சிரசன்ப தோனுரைப்பான்
மாதவரே தேவர்களே மறையவரே மூவர்களே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 631 - 660 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi