அருள் நூல் 2251 - 2280 of 2738 அடிகள்

arul-nool

தாரபடி பால்கொடுக்கத் தாயாரும் வாறேன் நான்
பாருலகில் திருச்சம்பதி பண்டாரம் அங்கிருந்து
சோதிடங்கள் சொல்வதற்கு தொடர்ந்துவந்தேன் கண்மணியே
ஊமைபோல் தானிருந்து உருண்டோடிப் போறானே
வெகுநாளாப் பஞ்சவர்தான் ஆவலாதி வைக்கிறாரே
கயிலைக்கு வடபுறத்தில் கனத்ததிட்டுப் பாறையிலே
ஓமக்குழி வளருதப்பா உங்களுக்காய்த் தவசிருந்தேன்
தீயராயப் போகவேண்டாம் தீயதிலே யிறங்கவேண்டாம்
கூட்டோடே கைலாசம் உங்களுக்கு காத்துவைத்தேன்
நின்றால் குடித்தால் தூக்கம்வைக்க நீதியில்லை
தென்னமரம்புன்னைநிழல் தெளிந்திருக்க நீதியில்லை
கண்மணிராசாவே காருமிந்த பிள்ளைகளை
அதிகமுள்ள தெய்வகன்னிமக்களை ஆராய்ந்தெடுநீ
தென்னம்காவுள் சிலஓலை அறியச்சொன்னாள்
தும்படுத்து ஆயாமல்சுமந்து கொண்டுபோகச்சொன்னான்
அத்தனைக்கும் போட்டவனை அடித்தானே ஆனைகாலோடே
ஐவராசன் சீமைதன்னை தாருமென்று அவன்கேட்டான்
கொஞ்சநாள்கூலிக்காக காருமென்று நான்கொடுத்தேன்
நான்கொடுத்து நாட்டையவன் நாள்தோறும் அண்டிருந்தான்
சுருக்கிளனீர் வெட்டச்சொன்னான் கண்மணியேசுமக்கச்சொன்னான்
கொண்டங்கே போட்டாலும்ட கூடதிலே அடைக்கச்சொன்னேன்
அழுதுமுறையிட்டேன் ஆனாலும் கேட்கவில்லை
பாக்குவெற்றிலை கொண்டுவா பயலே உன்னைவிடுவேன்
தம்பிபடும் பாட்டைத் தாயாரே பார்க்கலையோ
கம்புகொண்டுதானளந்து கண்மணியேவெட்டச் சொன்னேன்
பறிக்கநான் வந்தேனடா பத்தினியும் கூடவந்தாள்
உடலழிந்து விழுகுதடா ஊட்டோடே வேகுதடா
கூட்டோடே வேகுதடா குருநிதி ஆற்றலாலே
பொறுதியென்ற தீயாலே பூலோகம் அழக்கிறேனடா
பதினெட்டு துர்க்கையாலே பாரழகு லோகமெல்லாம்

விளக்கவுரை :


அருள் நூல் 2221 - 2250 of 2738 அடிகள்

arul-nool

நான்பெற்ற பிள்ளைகள்தான் ஆலிலைபோல் வாடுதப்பா
பொல்லாதபாவிகள்தான் துயரப்படுத்துகிறார்
கண்மணியே ராசாவே கலியழிக்க வாருமப்பா
வலிமையில்லை பெலனுமில்லை வரிசையுள்ள பிள்ளைகட்கு
அய்யோ தாயாரே ஔவையாரே கிழவியம்மா
கஞ்சனை அறுப்பதற்கு கனவரிசை கொண்டுவந்தேன்
முத்தலத்தோர்கூடிருந்து தெப்பகுளம்காட்டுவேன்நான்
பொன்மலை ஆளலாமே முத்துப்பதித்த
வைகுண்டம் அங்கேயுண்டு
ஊசிகள்தான் போட்டப்பவளக் கோட்டை அங்கேயுண்டு
எப்படியும்கற்பனையால்; இங்கேவந் தெடுக்கலாம்
உருள்வண்டி போட்டதரும் வெண்சாமரை வீசலாமே
முத்துப்பதித்தத்தோரும் பவளத்தால்சாவடியும் மண்டபமும்
கல்பதித்தவிளக்குகளும் கண்ணடங்கா செல்வமுண்டு
நடனமாடும் சாலையெலாம் நல்லதெய்வார் கூட்டமப்பா
தஙகக்குதிரையுண்டுதர்மராசர் அரசாட்சிக்கொடிகள்கட்டி
பால்கொடுத்து தாராட்டி பஞ்சணைமேல் கிடத்திடுவான்
பஞ்சணைமெத்தையில் படுத்துறங்கும் நாளாச்சு
காலுக்கு வீரகண்டை கைரண்டுக்கும் தங்கமுண்டு
குகையாள பிறந்தவளே யென்குழந்தாய் எழுந்திருடா
அதிகமுள்ள நீசனும்தர்ன மற்பிடித்து அடிக்கிறானே
படையெடுக்க வாமகனே மானமறுக்கம் பொறுக்கலையோ
மண்டைமயிர் பறியசுமந்து ஒருகாசு கொண்டுவந்தான்
வாடாப்பயலேயென்று ஒருகாசும் பறித்துக்கொண்டான்
இந்தராசன் சீமையாள வந்துபிறந்தீர்களா
கூட்டோடேதாயெழுப்பி கோகுலமே தாயாரே
வேலாயுதம்எடுத்து வேடமகன் அளுகிறான்
கலியுகத்தை முடிப்பதற்குக் காரணமாய்தவசியிருந்தேன்
கண்ணிரெண்டும் இரத்தமாகக் காச்சல்வந்து பிடிக்குதப்பா
கட்டுவேன் நான்சுருட்டி காட்டித்தாறேன் கண்மணியே

விளக்கவுரை :


அருள் நூல் 2191 - 2220 of 2738 அடிகள்

arul-nool

கழுத்திலே கல்லேற்றிக் கைதாப்பாள் போடுகிறானே
பழிக்கோ நாங்கள் பெற்றபிள்ளை படும்பாடுகேட்கலையோ
கம்புவெட்டி அடிக்கிறானே கல்லேற்றி அடிக்கிறானே
அரியரசன் தவசுபண்ணி தெய்வகன்னி பெற்றமக்கள்
பொறுத்திருங் கோமக்காள் பூலோகம் ஆள்வீர்களே
குடுக்கவட்டைச் சிரட்டைகொண்டு வந்துயிருந்தேனடா
சூதாடிப்படைபொருது திறம்பார்க்க வரவில்லையப்பா
அரியரசன் தவசுபண்ணி அவர்பெற்ற பிள்ளையுண்டு
பொன்னரசி ராச்சியத்தில் அரசாளப் பிள்ளையுண்டு
மன்மதன்சீமையிலே வாள்வீச்சுக் காரருண்டு
கூலிக்காரர் மக்களில்லை கோடிவரிசை பெற்றமக்கள்
வற்றிய குளத்துக்குள்ளே முத்துக்
கெண்டைப் பிடிக்க பிள்ளையில்லை
அம்மா அம்மா தாய்க்கிழவி அதிமுள்ள பிள்ளையுண்டு
நாட்டுச்சீமையிலே வகையெடுக்கப் பிள்ளையில்லை
என்னுடைய தம்பிமாரே இலங்காபுரி ஆள்வாயோ
ஊசிமுனையதிலே உங்களுக்காய்த் தவமிருந்தேன்
காசியிலே ராசர்மகன் வாழும்தேசம் தாறேன்நான்
நட்டமா நான்இட்டவேலி நாள்தோறும் வாழ்ந்திருக்கும்
பால்வருணன் என்மகன்தான் பஞ்சவரும் என்மகன்தான்
நான்பெற்ற என்மகன்தான் ராச்சியத்தை ஆள்வானே
வாசமுடையபெருஞ்சுனையில் தெய்வஉயிர்மீன்பிடிக்கவந்தேன்
ஊற்றால்தான் போட்டதுண்டால் உயிர்த்தேர்ந்து மீன்பிடிப்பேன்
பழிபாவம் செய்திடுவேன் பார்த்திருங்கோ கொஞ்சநேரத்திலே
செடிகலைத்துவேட்டையாடி தெளிந்தமுயல்பிடிக்கவந்தேன்
அதிகமுள்ள வெடிகள்கொண்டு அமைத்துவைத்து கட்டிடுவேன்
இளங்கொடிகால் வைத்து எடுத்துக்காட்டவந்தேனப்பா
என்னுடைய பிள்ளைகளே இரக்கமுண்டு பத்தனமாரே
கடுவாய்ப்புலிகள்சிங்கம் கடக்கநின்று சிரிக்குதப்பா
ஒளித்திருந்தேன் வெகுநாளாய் ஓடிவந்தேன் எடுப்பதற்கு

விளக்கவுரை :

அருள் நூல் 2161 - 2190 of 2738 அடிகள்

arul-nool

தாசியாட்டமுண்டு சான்றோர்பார்க்கத் தம்பிரான்கற்பித்தேன்
ஆனைமேல் ஏறிநீங்கள் அற்றகுற்றம் பார்ப்பதுண்டு
சீதனம் விட்டுத்தாறேன் தெய்வேந்திரன் அங்குண்டு
கலியுகத்தில் வேலையில்லை கண்மணியே உங்களுக்கு
ஆலங்காய்நெல்லிவிளையும் அரிசிசிறு தானியமுண்டு
அமுததேற்றங்கொள்ளாலேமே ஆசாரம் அங்கேயுண்
கோவங்காய் பாகற்காய் கொழுந்துவரை அங்கேயுண்டு
சத்தியவாக்காய்ச்சொல்லுகிறேன் தம்பிரான்கற்பனையாய்
தலைவாசலானதிலே தலைதூக்கி மயிர்பிடித்து
கற்புடையராசன்வந்து கண்ணாடி வைத்துபப் பார்த்தான்
என்பேரில் குற்றமில்லை இழுத்துப்புதைக்க பிள்ளையில்லை
அப்படியேபிள்ளகைளே அணைத்தார்பால்கோட்டையிலே
இரண்டாம்முடிதரிக்க நீராவிக்கரைகளுண்டு
சங்குசக்கரமுண்டு தம்பிமாரே உங்களக்குக்
கன்னியிலேவந்திருந்து மேல்நோக்க நாமந்தருவேன்
சித்திரத்தாலதிகமுள்ள தோழருமங்கேவுண்டு
பஞ்சவரே உங்களுக்கு வஞ்சகமாய் சொல்லவில்லை
மாயவலைக்குள்ளிருந்து நடுஞாயம்தீர்த்துவாறேன்
திட்டித்தநாள்முதலாய்ச் சிலகாலம் தவசிபண்ணி
பால்காவடிவேண்டாமென்று பண்டார மிங்குவந்தேன்
ஒன்றுநான்கேட்கவில்லை உனக்குத்தெரியும்தாயே
சின்னம்சிறு மதலையாகத் தோப்பதிலே தவசிருந்தேன்
பிச்சிப்பூ அச்சுமாலை பொரியவல் கேட்கவில்லை
நல்லெண்ணெய் பிண்ணாக்கு ராசாவும் கேட்கவில்லை
தெய்வகன்னி பெற்றபிள்ளை செடிதோறும் அலைகிறாரே
பேய் எச்சி தின்றுஅவர் பேய்போல் அலைகிறாரே
நானானேன் தானானேன் தந்தேநன்னம் தந்தேநன்னம்
நாகம்போலே உள்ளபேயை நல்லதீயாலெரித்தேன்
மந்திரம் மாற்றிவைத்தேன் மாறானதைச் சாபமிட்டேன்
கருத்துள்ள ஈசுவரியேக் கண்டுகொண்டு பார்க்கவேணும்

விளக்கவுரை :


அருள் நூல் 2131 - 2160 of 2738 அடிகள்

arul-nool

என்னையொன்றுசொல்லதே இறையவனும் அறியலையோ
வெகுநாளாய்வந்திருந்து வேண்டும்புத்தி சொன்னேன்நான்
ஒன்றும் அறியாமல் விழுகிறானே தீயதிலே
சொல்லிவிட்டேன் கேட்கவில்லை என்னுடைய நம்பிமாரே
அறட்டி மடக்கிக்கொண்டு முடுக்கிகொண்டிருக்கிறானே
தவமிருக்கும் இடமதிலே வலமிடமா றாட்டம்வைத்தான்
பொய்ரதத்தை ஓட்டிவைத்தான் பூலோகம் தான்நடுங்க
பஞ்சவரே வெகுநாளாய் வருத்திநான் தீர்த்துவிட்டேன்
குட்டம்குறைநோவு கொடியதீனம் தீர்த்துவிட்டேன்
கண்குருடு கால்நொண்டி கர்மமுதல் தீர்த்துவிட்டேன்
தெச்சணா பூமியிலே தென்குமரி நன்னாட்டில்
வெகுநாளாய் வந்திருந்து மக்களுக்கு புத்திசொன்னேன்ங்
எத்தனையோ வெகுநாளா யியருந்துபுத்தி சொன்னேன்
அப்பனில்லா பிள்ளையது அதிகபிள்ளை யானதுதான்
செப்பரிய தாய்க்கிழவி சேர்ந்தாளே யெடுப்பதற்கு
இடுக்கமில்லை யினிமேலும் வெண்ணெயுண்டு நீளுதடா
தெப்பக்குள மிங்கமுண்டு திருமால் கற்பிச்சியிருக்கு
பிராமண வேசம்பாட பத்தன்மாரே நீங்களுண்டு
பொன்னாலே பூனூலும் தங்கத்தாலே சாலுவையும்
கடுக்கண்திருக் காணியில்லை கலியுகத்தில் வேலையில்லை
பொன்னரும்பு வேலைசெய்யப் பூமியில்தட்டானுமில்லை
பொன்னரிய கன்னபெற்ற பிள்ளைகள் வந்ததுண்டால்
குறுணிப்பொன்னிடுவதற்கு கொடுத்துவைத்திருக்குதப்பா
பட்டமர சாளக்கோடிமக்க ளுண்டு பாவனையாய்நான்  கொடுப்பேன்
எல்லார்க்கு மொருப்போல ஈசன்நான் யிருக்கிறேன்
சொற்பெரிய ராச்சியத்தில் சீமைகாட்டி ஆளலாமே
குதிரைகட்ட லாயமுண்டு கோடிச்சீமைகட்டலாமே
அதிகமுள்ள ராச்சியத்தில் அமுதேற்றுத்கொள்ளலாமே
கண்ணாடி பார்த்தப்பட்டு கடியதுகியில் ஆடையுண்டு
குளிர்கால ஓட்டமுண்டு கொடிவிருதுக் கட்டமுண்டு

விளக்கவுரை :


அருள் நூல் 2101 - 2130 of 2738 அடிகள்

arul-nool

இத்தனைக்கு கலிமுறுகி அநியாயம் அதிகமாச்சே
பலவிதமாய்க்பக்தன்மாரேபாடி ஆடிபரத்திவிடவந்தேனடா
சொற்பெரியபத்திரத்தாள் கற்பனையாய் வளர்த்தபிள்ளை
இதுவரைநான்பொறுத்தேன் இனிபொறுக்கமாட்டேனடா
உங்கள்வருத்தம்கண்டு ஒருமருந்துகொண்டுவந்தேன்
தெய்வீரேஉங்களுக்காய் சிறுபிள்ளையாய் நானிருந்தேன்
அப்பனொருபண்டாரம் அதிகசுகம் கொண்டுவந்தார்
ஏடுயெறிந்துவிட்டேன் கையெழுந்திருந்து போவென்
கல்மடமும்திருப்பதியும் கடலதிலேஅங்கிருக்க
எப்படியும்நானிருப்பேன் யென்னுடையதம்பிமாரே
ஒருசாமநேரத்திலே ஊழியென்றகாற்றுவரும்
மற்புடையபிள்ளைகளே வருவேன் நான்எழுப்புதற்கு
என்னை அறியாதவன் உன்னால் தவம்வேணுமென்பான்
எப்படியும்கும்பிடுவான் புளுக்குழியில்தள்ளிடுவேன்
கோத்திரத்தில் உள்ளவர்க்கு கூடுமட்டும்புத்திசொன்னேன்
கேளாதபேர்களுக்கு நானென்செய்வேன்ப்பா
மஞ்சள்நீர் பாலாறாய் வருகுதப்பா என்மகனே
கஞ்சனையறுத்தமுனி கடல்நீர்குடித்துவிட்டேன்
அப்படியே குடித்தவர்க்கு ஆண்டிவந்துகுடியிருப்பேன்
தெத்தெடுத்த பிள்ளையில்லைதிட்டிக்காமல் பெற்றபிள்ளை
அப்போநீயரசாள அதிகபிள்ளை யீன்றெத்தேன்
விருதுக்கோடி பெற்றபிள்ளைவிருப்பமுள்ளபிள்ளைதான்
என்னுடைய மந்திரியெல்லோருமொரு முகமாய்
அலைவாய் கடலதிலே வருவதற் காயழைக்கிறாரே
ஆடுகிடாக் கோழிபன்றி அறுத்துபலி கேட்கவில்லை
பொங்கரிசி கோழிமுட்டை பொறித்தகறிகேட்கவில்லை
உருகச்சுட்ட பணியாரம் அவலருண்டை கேட்கவில்லை
கருகச்சுட்டமுருக்குகளும் கடையல்பால் கேட்கவில்லை
உருக்கெடுத்த மடப்பதியில் திரிக்கொழுத்திவைக்கவில்லை
ஒருகாசும்கேட்கவில்லை உமையவளே அறிவாயோ

விளக்கவுரை :


அருள் நூல் 2071 - 2100 of 2738 அடிகள்

arul-nool

மாப்புக்கேட்க மக்களுண்டு மகாதேவன் அருளாலே
ஆயிரத்தெட்டு மாசியிலே அதிகப்பேறு பெற்றுவந்தேன்
என்னாலேஒருஞாயம் எண்ணாமல்செய்யவில்லை
எண்ணாமல்மாப்பு செய்து இரணியணைச் சங்கரித்தேன்
பின்குடுமி முடிந்தவர்கள் பூமியில்இருக்கமாட்டார்
அய்யோ பிள்ளைகளே அறிவுள்ள என்மகனே
சொல்லரிய வெயலதிலே சுடுமணலில் தானிருத்தி
சொல்லரிய கல்லேற்றி வேறுபொடியில தள்ளிவைத்தான்
இந்த அநியாயம் கேட்க ஈசுரனார் விடையும்பெற்று
பள்ளியிலேசென்றிருந்து பாடிவரும் பிள்ளைகளே
அன்றுசிரிப்பீர்களோ அதிகத்தலம் காட்டித்தாறேன்
நட்சத்திரமுதிரும் நல்வானமிடிந்துவிழும்
என்னயைறியாதபேர்கள் எரிந்துசரிந்துபோவார்
பத்தினிதான் பெற்றபிள்ளை படும்பாடு கேட்கவில்லை
கற்பித்துபெற்ற கந்தன்படும்பாடு அறியவில்லை
சொற்பெரிய திருமாலைச் சோதனைக்கு அனுப்பிவைத்தேன்
கந்தனைஅடித்தவரைப் புழுங்கிடங்கில் தள்ளிடுவேன்
ஊருணி கிடங்கெல்லாம் ஊற்றுமிகப் பெருகுதடா
சிறீலங்கை மாறியது செந்நெல் விளையுதடா
தீமெழுகநாளேச்சு சொல்லித்தாரேன் தெரியும்படி
ஆண்டிபெற்ற பிள்ளைகள்தான் அரசாட்சி ஆகுதடா
பசுவின்பால் குடித்ததுவும் பத்தினிவயிற்றில் பிறந்ததும்
பன்றிவயிறு தானொரிந்து பன்றிநெய்யாய்ப் போகுதடா
சொற்பெரிய கவுந்தலத்தில் சிலவாழ்வு யிடிந்துவிழும்
நீபெரிது நான்பொதுவடிவெடுப்பேன் பழிக்குலத்தில்
பலவேசம்போட்டதுண்டால் பத்தன்மார் அறியமாட்டான்
எடுத்தான் ஒருகோலம் இறங்கிவந்தேன் கைலாசம்
முப்புரக்கோட்டையிலே மூன்றுவேசம் போட்டுவந்தேன்
அப்பாவியென்னை யுந்தான் அறியாமல் அடித்தானே
இந்தக்கலியுகமதிலே இருக்கவொட்டான் என்னையுந்தான்

விளக்கவுரை :

அருள் நூல் 2041 - 2070 of 2738 அடிகள்

arul-nool

செப்பரியதோப்பதிலே சீதைவென்றுநிற்பிச்சியிருக்க
எப்பநான்புறப்படுவேன்யென்னுடையபத்தன்மாரே
செப்பறியதிருமாலும் அங்கிருக்க
தென்பரியதோப்பதிலே செப்பமுடன்வைகுண்டம்
ஆனைப்படிதிட்டிச்சிருந்த அறிவுள்ளபண்டாரம்
பத்தன்மாரேவெகுநாளாய் வேலைசெய்யும்பிள்ளைகளே
முன்னிருந்தயுகமதிலே தன்னியத்தால்பால்தந்தேன்
என்னையறியாதபேர்கள் இருப்பாரேகலியுகத்தில்
வங்காள அரண்மனையார் வாறாரேகலியழிக்க
என்மகளே திருநெல்வேலி எல்லாரும் ஒருமுகமாய்
சொல்லரியபுத்தினைத் தெரியும்படி சொல்லிவிடு
வெகுநாள் கலியழிக்கவிரும்புகிறேன் கருவூலமே
சொற்பெரிய தோப்பதிலே சீதையுங்கள்  அம்மையவள்
மற்பெரிய ராசனிடம் மற்பிடித்து நிற்கிறாளே
மகிழ்ந்திருந்து விளையாட வாறீரோ யென்மக்களே
திரும்பிநீங்கள் வரவேண்டாம் தெய்வசுனை அங்குவுண்டு
செங்கமாரி நோயுமில்லை தீனமில்லை பத்தன்மாரே
கவிழ்ந்திருந்து பதியரசன் கட்டிலின் மேலிருக்க
பாற்கடலில் பள்ளிகொண்டு பகுத்துவிடைவாங்கி
பஞ்சவேர உங்களுக்குப் பழிபாவம் செய்யவில்லை
திரும்பிநீங்கள் சிரித்தாக்கால் தீனமுண்டு உங்களுக்கு
கடலதிலே கெரடிமரமும் கல்லறையும் பொன்கணமும்
பொக்கணமும் புலித்தோலும் வாழைக்காய் கேட்கவில்லை
கற்பனையாய் பெற்றிருந்தபடியாலே வீற்றிருந்தேன்
சொற்பெரிய கற்பனையாய் பத்திரத்தாள்பெற்றபிள்ளை
கைலாச பணிவிடையுண்டு கலியுகத்தில் வேலையில்லை
நிறைவேலை செய்தாலும் நீதங்கேட்க மனிதரில்லை
கடலதிலே ஒருகிழவி அவதாரக்கிழவி தானும்
அமைத்துவந்தார் உங்களுக்காய் அம்மையென்ற லட்சுமியைக்
கண்டுதணிந்தவர்க்குக் கைலாசம் இங்கேயுண்டு

விளக்கவுரை :

அருள் நூல் 2011 - 2040 of 2738 அடிகள்

arul-nool

ஆதவா அரிநாராயணா போற்றி ஆதியே உந்தன் போற்றி போற்றியே
மூவர்தேடியும் முற்றாதமுதலின் திருத்தாள் பதம்போற்றி
தேவர்க்கரியதிரவியமே தெய்வமுதல் வேதச்சுடரே
காவகரியவனமதிலே கற்பை அழத்துக் கைவிட்டகன்ற
தாவாதுணையேயென்கணவா தயவேஉததுபதம் போற்றி
தீர்த்தோமெங்களைத்தானும் திரும்பக்கயிலைகழையாமலவர்
சார்ந்தோரெமது கணவரையும் தந்தேதரணி அரசான
தேர்ந்தேபயின்ற சிறுவர்களின் சிறப்புஏதும் குறையாமல்
வாழ்ந்தேயிருக்கு வரமருளும் மாயாதிருக்கும் மறைமுதலே
மாட்டி லேறும் மகாபரனே மாது உமையார் பங்காளா
காட்டிலடியா ரேழ்பேம் கற்றா விழந்த பசுவது போல்
ஊட்டி உறக்க மில்லாமல் ஊமை கண்டக் கனாவது போல்
வாட்ட மறிந்து மனமிரங்கி வந்தாய் கவரை தீர்ந்தோமே

நடை

நாரணரேநீரும் நல்லபெண்கள் யேழுபேர்க்கும்
சீரான வரங்கள்செப்பி அனுப்புமென்றார்
உடனே நாராயணரும் உள்ளம்மிகக்கழித்து
மடமாதேபெண்ணே மக்களுடதன்வழியில்
சான்றோரிடமேதான் பிறந்து கன்னியர்களாய்
இருக்கும்சமயம் யான்வருவேன் தெச்சணத்தில்
தெச்சணத்தில்வந்து சிறந்த தவம்புரிந்து
தவத்தைநிறைவேற்றி தானிருக்கும் வேளையில்
உங்களையும் வருத்தி உற்றமணம் புரிவேன்
இருபேரும்மக்களை எடுத்துபுவி ஆண்;டிடலாம்
தந்தோம் வரங்கள்தான் பிறங்கோ பெண்ணோயென்றார்

விருத்தம்


தந்தார் வரத்தை வாங்கித் தார்குழலேழுபேரும்
முந்திநாமீன்ற பிள்ளை மெய்க்குலம் தன்னில்தோன்ற
மைக்கழல் மார்களெல்லாம் மானிடர்வழியே வந்தார்
மேற்குலம் தன்னில் மாதர்விருப்பமாய் வாழ்ந்தாரன்றே.

திங்கள் பதம்

அஞ்சுதலைபோல்முகமும் ஆயிரங்கை காலுமாகப்
பிஞ்சுமலைபோல்கூட்டி பிறப்பித்துநானுமிங்கே

விளக்கவுரை :

அருள் நூல் 1981 - 2010 of 2738 அடிகள்

arul-nool

நாடுபதி னாலறிய நாமமதுவிட்டு
காணாத கற்பகப்பால் வையதிலே கொடுத்து
காளியென்ற தேவியுடைய கையில்மிக வீந்து
வளர்த்துத்தரு வாயெனவே வாக்குமிக வாங்கி
மாமுனியும் ஓர்மலையில் மானாகச் சென்றார்
இளைத்துத்தளர்ந்து கூட்டையதில் போடவென்று
எண்ணிவிட யெம்பொருமாள் எய்துவிட்டான்வேடன்
வேடனுக்குப் புத்திசொல்லி பஞ்சவரை வருத்தி
வீரத்தனமெல்லாம் தண்டாலே யவர்வாங்கி
சூரமுள்ள கூட்டையதில் தான்கிடத்திப் போட்டுச்
சூத்திர மாயவரும் ஸ்ரீரங்கம் மேவிச் சென்றார்
இப்படியே யுள்ளவரலாறான தெல்லாம்
ஆதிகருட ஆழ்வாரும் அம்மையுடன்சொல்லி
இப்போது கூட்டி வாறேனம்மா எனக்குவிடைதந்தால்
என்னடி பணிந்துசருட ஆழ்வாரும்நிற்க
நல்லதுதான் அண்ணருடைய அதிகத் திறங்கேட்டோம்
நாலுமணி நேர மாதிநாராயணரைக் கூட்டிக்கொண்டு
மாதுபார் வதிகயிலை வாழ்ந்திருந்தாளே
கயிலையில் மாதுதானும் கட்டுடனிருக்கும்போது
ஒயிலுடன் கருடனும்; ஒருதொடி தன்னில்சென்று
அகிலமும் அளந்தநாதன் அவரையும் கூட்டிவாறேன்
கயிலையில் வந்துஞாயம் கட்டுடன் உரைக்கின்றாரே
பரிதனக் குதவுமாயப் பாவைய ரேழுபேரும்
திறமையாய் தவசிபார்க்க சீர்தனைச் செய்யுமென்றார்
தவம்தன்னையேற்றாம் வாருங்கோ வெளியிலென்றார்
வெளியே வந்துமாது விளக்கமே தீர்த்தோமென்று
தெளிவுடன் வெற்றியோங்கி வாழ்வைநீதருவாய்போற்றி

விருத்தம்

சீதமாங்குணச்செல்வனே போற்றி சிவசிவாசிவனே போற்றி
நீதவாநனிநடப் பெய்துவாய் போற்றி நீ சிவசிவராகவா போற்றி
மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரி செல்வனே போற்றி

விளக்கவுரை :


Powered by Blogger.