அருள் நூல் 2551 - 2580 of 2738 அடிகள்

arul-nool

ஏழைமதியாகப் பேசும் இல்லாதெளியோரை
எங்கேயென்று தேடி அடிப்பாரே
இப்படி கலியருக்கு தானதால் யென்னால் என்ன ஆகுங்கண்டீர்
வைகுண்டாpடம் போங்கோ வலதுபக்கம் வாழ்வீர்கள்

விருத்தம்

எட்டெட்டு அறுபத்தி னாலுவைகுண்டமாச்சு
பட்டுபட்டுழன்று கலிதன்னால்சாகும்
மட்டுப்படமூன்று பத்திரண்டு அதுவும் திராசியாச்சே
கட்டடங்காப் பதினாறும் அவர்க்குள்ளே ஆச்சு

நடுத்தீர்வை உலா

பூமிதனில் நாரணர்தான் பொதுத்தீர்வை கேட்கிறநாள்
நேசமுடன் சீசரக்குச் சொன்னகுறி நேமமுடன்
புத்தியுள்ளமானிடர்கள் பொங்கமுதுடன்கேட்க
பந்தமுள்ள எம்பிரான் பாதமதுகாப்போம்
ஆதியிலேயேPசுரர்தான் அம்புவியெல்லாமொpக்க
நீதியுடன்நேராகச்செத்தசனத்தையெல்லாம்சீக்கிரத்திலேயெழுப்பி
நற்
குற்றமுள்ளபாவிகட்குக் கூர்நாகங்கொடுத்து
மேத்தமிகச்சபித்து பேயாலேதான் வதைத்து
தள்ளிவிட்டு நல்லோருக்கமோட்சம் கொடுக்கவள்ளலுடன்
நாரணர்தான் வந்தவகை விள்ளுகிறேன்கேள்
பாவிகட்காய் மானிடர்போல் சமுத்திரத்தில் பிறந்து
மூன்று நாளாயிருந்த தெழும்பிப்பூவுலகில் வந்தவுடன்
நாற்பதுநாளிருந்து ஞாயவழிகாட்டி
அற்புதமாய்ச்சீசருக்கு சொன்னகுறி பொன்னுலகில்
நாம்போறோம் பூவுலகோரே கேளும்
மண்ணில் நடுத்தீர்க்க வாருமென்று சொன்னவுடன்
சீசர், எத்தனை நாளிருக்குதென்று வினவப்பின்
அதற்கே அரனுரைக்கும் வகையானதுநித்தம்
நளடக்கும்குறிகள் தன்னைநான் சொல்லுகிறேன்
என்றும்அடக்கமறச் சொல்லுகிறேன்அதுகேளும்
பஞ்சம்வரும்செழிக்கும் பாவத்தால்பகையாம்

விளக்கவுரை :


சொல்வாய் ஞாயவழி காட்டி

அருள் நூல் 2521 - 2550 of 2738 அடிகள்

arul-nool

பேருலகில் சொல்லாமல்; பேர்மாறி நிற்போம்
அம்மாவுந்தனக்கு நாங்கள் அடிமையானதல்லால்
ஆருமெங்கள் தனைவெல்லும் பேர்களில்லை அம்மா
இப்படியே பெருவரங்கள் ஈசரன்று தந்தார்
என்னமாயமோ வறியோம் இப்போவந்த கூத்து
தப்பாமல் வந்தெமக்குத் தற்காக்கவேணும்
சந்தனந்தான் தேர்நின்று தெந்தனங்களோடும்
தெருவோட்டி வைப்பதற்குச் சீர்செய்யவேணும்
தேன்மொழியே பத்திரமா காளியெனத்தொழுதார்

விருத்தம்

கொழுததோர் வீரர்தம்மைத் தோகை மாகாளிபார்த்து
பாழாகும் இந்தசீமைப் பாதகக் கொடுமையாலே
அழியவும்நாள்வந்தாச்சு அண்ணரும் பிறந்துமாச்சு
வழியதேய்தற்கு யானும்வகுத்துரை செய்யவேனென்றாள்
காலமும்கடைநாள் ஆச்சுக்கலியுகம் அழியப்போகு
ஏலவேகொடுத்ததெல்லா மித்துடன் பிறக்கலாச்சு
மாலவன் தவசதாக மாசிறை யிருக்கலாச்சு
ஞாலமேயிதற்கு வேறுநானென்ன செய்வேனென்றாள்

நடை

கட்டுடனே உங்களுக்குக் காரணங்களின்னதென்று
காரியமாய் சொல்லுகின்றேன் கேளீர்
மட்டடங்கா கலிவந்து பிறந்ததன்றுமுதல்
மான வரம்பில்லை யப்பாகண்டீர்
ஈனமுள்ளதேவருக்கும் ஈசர்பிறமாதனக்கும்
ஏற்கநடப்பொன்றில்லை கண்டீர்
மானமுறை நீதியில்லை வழக்குசாயலுடனே
வம்புசெய்யும் பேர்கள் தினம் கூட்டம்
ஐயமிறைக்கூலி தெண்டம்
அட்டிஅநியாயம் மெத்த
ஆண்களைத் தீண்டி வேலைகொள்வார்
மானமாகவாழும் எளியோர்கள் சொத்தையெல்லாம்
வாரிவம்பர் சேரக்கைக் கொள்ளை கொள்வார்

விளக்கவுரை :

அருள் நூல் 2491 - 2520 of 2738 அடிகள்

arul-nool

மகாமேரு போறைந்து வாசமாக்கொண்டார்
எந்தபேரும் வந்திழுத்து சந்துபொந்துபோக
எட்டுதிசைதோறும் கிடாய்வெட்டிப் பலியிட்டார்
இட்டகிடா ரெத்தமெல்லாம் துட்டவீரருண்டு
இனும்போதாதென்றுபலி பின்னுங்கொள்ளைகொண்டார்
முட்டடங்கா கயிலைபையன் மாயன்மகாலிங்கம்
வாழும் பலவேசக் கயிலாசவீரனோடு
சட்டமாக இட்டபலி உண்டுத்தேரைத்தொட்டு
தங்களாலே ஆகாதென்று சங்கடங்கள் கொண்டார்
வட்டமிட்டவீரருட பொட்டுமிகப்போச்சு
வாரமுள்ளவீரமெல்லாம் சொரம்போச்சுதங்கே
என்னகேடு ஆச்சுதென்று யேங்கி அஞ்சுபேரும்
ஏழையான பத்திரமாகாளியிடம் சொல்வோம்
பொன்னழகி எங்களையும் பெற்றவளேயம்மா
புட்டாரநாயகியே கட்டழியம்மா
இத்தனைநாள் யெங்களாலே யோலாதொன்றுமில்லை
ஏழுகடல்தாண்டி யுலகாண்டிருந்தோம் அம்மா
முத்திபெறும் அக்கினித்தூண்முழுவதும் கையிலெடுத்தோம்
மூன்றுலோகம் சுற்றிபின்னும் மீண்டுகொண்டு வந்தோம்
வெள்ளிமலை மீதிலுறை அரசனுடையமகளே
அஞ்சிரண்டு மாசத்திலே பிஞ்சியீரல் உண்டோம்
மாடனருள் அண்ணாவி மாமலையில்சென்று
மாய்மாலமாய்மாய மந்திரத்தைப் பொய்த்தோம்
சுட்டுசுருக்கான பலதுட்டமா கணத்தை
கண்ணில்காணாமலரைக் காற்றாய் பறக்க வைத்தோம்
பூமிகயிலாசம்வரை எங்கள் பேரல்லால்
பின்னுமொரு துட்டவீரர் கண்ணில்காணோமம்மா
மாயனுக்கும் ஆயனுக்கும் மாமறைக்கும் தாங்கள்
மற்றும்பல தேவதைக்கும் யேற்றுக்கொண்டோம் அம்மா
பேய்கள்பல பேர்களுக்கும் பெருமாளாக வாழ்ந்தோம்

விளக்கவுரை :

அருள் நூல் 2461 - 2490 of 2738 அடிகள்

arul-nool

உபாயமாய் வீரர்தம்மை வரவழைத் திங்கேகொண்டு
ஞாயமாய்ப் பிறவிசெய்து நாரணர் கைக்குள்ளாகக்
நோயமாய் மனதிலலெண்ணி நினைத்தனர் ஈசர்தானும்

நடை

அட்டதிசையெங்கும் கீர்த்திபெற்ற அஞ்சுபேரையும் இங்கழைக்க
அருமையானஇங்கழைத்து உரிமையாக இப்போது
மெட்டித்தனமாக முன்னீந்த வரம் வேண்டி
மேலுந் தா;மாரிக்கு ஏற்றவிடை ஈயவென்று
மாலுரைத்தமொழி தவறாவண்ணம் செய்யவென்று
மனமகிழ்ந்து தானும்வெகு உபாயம் எடுத்தார்
மேலும், கந்தசாமி யவர்க்கு மாசியெட்டாந்திருநாள்
மேனமைதனைப் பார்ப்பதற்கு நாமும் போவென்றே
போகவேணுமென்றுசொல்லி பொக்கணங்களிட்டு
பொpயபுலித் தோலுடனே வரிவேலை யுமெடுத்தார்
கையில் மழுசூலம் காப்பறைகளேந்தி
கண்டந்தனில் பண்டமாலை கொண்டுபூண்டு சென்றார்
மெய்யில் வெண்ணீறணித்து உத்தராட்சம்பூண்டு
மேன்மைபொற்கரத்தில் செம்புமுந்திரிதூக்கி
தாவடமும்மேவிடத்தில் தாவண்ட சங்காரன்
சண்முகம் திருநாள்வேளைதன்னில் போவென்றே
கோவிடத்தில் வாழுகின்ற குருவசிட்டரானார்
கூண்டபல தேவர்களும் கொடியாகச்சூழ
பூவுலகில் உள்ளதேவர் போதவந்துசூழ
பேய்பிடாரி பூதகணம் புட்டாரக்காளி
நாவுலகில் உள்ளதே நான்முகனும்சூழ
நாட்டில்வரம்பெற்ற வெகுதாட்டிமையோர்
ஏவல்பொpயோர் களெல்லாம் யீசுரரைப்போற்ற
ரிடபவாகனமேறி யீசர்சென்றாரங்கே
செல்லும்வேளை கந்தனுக்கு தீபரணைகாட்டி
தேருவடந்தனைப்பிடித்துத் தெருவீதிவந்தார்
வந்ததேர் உச்சிதனில் மாயனிருந்தாண்டார்

விளக்கவுரை :


அருள் நூல் 2431 - 2460 of 2738 அடிகள்

arul-nool

எந்தஞாயமாய் நான்தவம் செய்குவேன்
சீமையெங்கும் அநியாயம் கண்டதால்
சொல்லுமுபாயம் இறைகூடி கண்டமும்
வன்மையாக நிறுத்தியே தா;மமாய்
மக்கள்தன்னையும் வைத்தாள வென்றுதான்
பேய்கள் செய்யும் கொடுமை அகற்றியே
பலிகள் தீபஒலிகளடக்கியே
ஞாயமாக நான் சீமையாளவும்
நாரணர்சுவாமி வைகுண்டமாகவும்
தேசமாகிய தெச்சணமீதினில்
செல்வச் சான்றோரிடமே பிறந்துநான்
வாசமானபுமை நடத்தவே
மாயனேமிதம் கொண்டிருக்கவே
திட்டமாயிந்ததுட்டவீராpன்
செய்திகேட்ட சிணப்பொழுதன்
வட்டமாகிய நெஞ்சம் குளிருதுமனம்
வாழ்கயிலைக் கதியதியாக
சூழஇந்தத் துடிவீரர் தங்களை
சூச்சமாகச் சுருக்காய் அழைத்துநீர்
முன்னிருந்த வரத்தின் முறைமையை
உபாயமாக அடக்கி மறுவரம்
பின்னும் தங்கப் பிறவியாக்கிப்
பேரும்மாற்றி புதுவர மீந்துநீர்
எந்தனோடு இதமா அனுப்பினால்
ஏற்றகாரியம் பார்த்து முடிப்பேன்நான்
சிந்தையது செய்யாதே பானாக்கால்
தெச்சனாபுரி சென்றேறப் போகாது
என்று மாயோனிதுவுரை கூறிட
இருந்தபேர்களும் உள்ளதென் றார்களே

விருத்தம்

ஆயனார் உரைத்தபோது அரனுமே மனதுமெச்சி

விளக்கவுரை :


அருள் நூல் 2401 - 2430 of 2738 அடிகள்

arul-nool

சொல்லும்மாயங்கள் யிங்கவர் கண்டிடும்
மார்க்கமாகவே நாலுவேதத்திலும்
மாறாட்டியே வெகுபூசையுண்டவர்
பன்றிகோழி பலிபல தானதும்
பார்த்துச்செய்வோரை காத்துக்கொள்ளுவார்
அன்றிநித்தம் அவரை தொழாது
அதட்டுவோரை உருட்டியே கொல்லுவார்
மூடும்கண்கள் விழிப்பதற்குள்ளாக
உலகம்ஈரேழும் உலாவித்திரிபவர்
வாசமான வடவா முகத்திலே
வன்னிசெந்தழல் ஆவிகுளிப்பவர்
தேசமெங்கு மவரல்லால் வேறில்லை
கொல்லும் வரிசைக்க வாள்வல்லவர்
வேசமானால் பலது கொண்டாடுவார்
வெற்றிவீரர் வெகுபுத்திக் காரராம்
ஆனதாலவர் அருகில்வந்தாக்கால்
அட்டதுட்டிக்கு இடமல்லோ ஆக்குவார்
ஈனம்சற்றும் இரக்கம் கிடையாது
ஏற்றமாலோனே யோதுதான்சொல்கிறீர்
ஆகுமோ அந்த பேர்களமக்கென்றார்
ஐந்துபேரையுமிங்கே அழைக்கிறேன்
பாகுசெநாpந்தஈசர் உரைத்திட
பண்டுமாலும் பகுத்துரை செய்வார்
நல்லமாமறை மைத்துணரானவர்
நாட்டிலிப்படி கோட்டிகளாக்கிடில்
செல்வமாகிய தெச்சணம் மீதினில்
சென்றுநான்தவன் செய்துநிறைவேற்றி
அன்பரானமனுக்கள் தொpந்துநான்
அரசேயாள வரம்பெற்றதெப்படி
இந்தமாஞாலா பேர்களிருந்தக்கால்

விளக்கவுரை :

அருள் நூல் 2371 - 2400 of 2738 அடிகள்

arul-nool

கன்னி யீஸ்வரி சரசுவதியே
சிந்தை மகிழ்ந்திருந்த செந்தமிழுக்;கு
தெய்வமடவாரும் காப்பாமே

விருத்தம்

ஆதியாம் கடவுளான அச்சுதன்பச்சைமாலும்
சாதிகள் தமக்குவேண்டிச் சந்தனச் செந்தூர்தன்னில்
வாரிமயில்மனுவாய்த்தோன்றி வளா;கன்னி நகாpல்மாயன்
நீதியைமனதிலெண்ணி நெடியவன் வருகவென்றே

வருகிறபோதே மாயன்மனமது மகிழ்ந்துகொண்டு
கருதியேயீசர் தம்மைக்கட்டுடன் வணங்கிச்செல்வார்
சுருதியாய் நமதுகைக்குள் சீவாயியேவலாக
பருதிபோல் ஐந்துவீரர்படைத்துநீர் அனுப்புமென்றார்

அனுப்புமென்றிந்த மாலுரைகேட்க
ஐயன் மெத்த மனம்மகிழ்ந்து
என்னமாய்ச் செய்து அனுப்பமாலோனே
நீகேட்ட சட்டமாயிக வீரர்கள் யாரென்ன
சன்னபின்னம் போலுள்ள வீரர்கள்
தா;மபுரி நன்மைக்குமாதே
என்னமாயிது நான்செய்வதெப்படி
என்றுயென்மனம் யெண்ணுதே மாலோனே
ஆடுகோழி யிலைப்பட்டை தீபங்கள்
ஆகாதென்றல்லோ ஆகமம் பூரித்தீர்
நாடுமட்டும் அடக்கி உண்டிடும்
நல்லவீரர்கள் சம்மதிப்பார்களோ
கடியசேவகன் கயிலையில் பையனும்
அக்கினியேறி மாயப்பலவேசம்
அத்திவாக்கனும் காத்தவராயனும்
அந்துபேருமே தீர்க்கமுள்ளவர்
தீர்க்கமுள்ளவர்கள் ஐந்துபேர்கள்தான்
தேசத்திலும்பல வேசங்கள்கொண்டவர்
கோலமாம்பல தூலங்கள் கற்றவர்

விளக்கவுரை :


அருள் நூல் 2341 - 2370 of 2738 அடிகள்

arul-nool

கதைப்பாடத் திருமால் காப்பாம்
அண்ணன் தம்பியோடைந்து பேரும்
அருளால் சிவவேடமுந்தாpத்து
ஒண்ணு போலொரு சொல்லதுவாய்
உடைய அன்பவரைத் திறமாய்க்காக்க

வண்டத்தனம் பேசும்வன்பர்களே
வாணன் வதைத்திந்த கலியுகத்தில்
கொண்டே யிருட்கலி தனையறுத்து
கூண்டபதிக்கோட்டைக் கொத்தளமும்

துலங்கா பதிகளும் துலங்கவைத்துத்
தொணும் சிவாலயம் காத்தாண்டு
பெருமைமிகு ஆடை பால்பழமும்
பொpய மணிமேடை அம்பலமும்

நன்மை பலதான வரிசையுடன்
நாரணர் சட்டம் மீறாமலே
ஒழுங்காய் உலகினில் ஒருசொல்லாக
உண்மை பலசெய்தாரதை

முழுதும் காவியமாய் படிப்வர்க்கு
முதலோன் அருள்தந்து முன்நிற்கவே
கருரெனும் வீரர் கருடராசன்
கடியகமண்டல சிமளராசன்

துட்டரெனும்வீரர்; தேர்த்தகனும்
குட்டிவீரனும் தேர்க்குடையோன்
அன்பர்க்கனுகூல மாவீரன்
அஞ்சுபேர்க்கதை அன்பாய்கூற

வாரபிழையொன்றும் வாராமலே
வாயில்வந்திங்கே வகுத்துரைப்பார்
சீராய்ச் சரவணம் மேல்துயிலும்
செந்தில் வேற்குரு கந்தப்பரே
கந்தக்கருங்குhல் தெய்வமாது

விளக்கவுரை :


அருள் நூல் 2311 - 2340 of 2738 அடிகள்

arul-nool

நன்மையாய்த்தென்னாளும் நமதுசொற்படி போல்வாழ
தின்மைகள் பலதும்செய்யும் திருடரைக் கருவாய் செய்ய
செம்மையாய் நமக்குள்ளைந்து சீவாயி வேண்டுமென்றார்

என்றவர்நினைத்தபோது ஈஸ்வரனார் மகிழ்ந்துமுன்னாள்
தண்டமிழ்ப் பதத்தாலிந்த தாட்டிக வீரரான
மன்றமிழ் சுடலைநாதன் மாநிலம் காத்தவீரன்
என்றிவர்முதலாய் ஐந்துவீரர்கள்இசைவால்வந்தார்

வந்திடும் பேரைக்கண்டு மாயவர் மனதுள்மெச்சி
புந்தியில் மகிழ்ச்சி கூர்ந்து புதுவரம் அவர்க்க ஈந்து
மந்திரித்தலைவா யெந்தன் மக்களே பாpசையேந்தும்
தந்திரத் தோழன்மாரே சாற்றுவழி கேளென்றார்

மொழியிது வென்று நாமம்உலகினில் மறவார்நம்மை
தெளிவுடன்பார்த்தேன் நாளும்திறமாய்க் காக்கவேணும்
பழிகொலை களவுபேயாட்டம் பழநீசக்குலங்கள் தன்னை
குளிர்சுளிர் நோயைத்தாக்கி கொன்றிடு உலகில்தானே

வேறு

சிவனே சிவஞானத் தேசிகனே
தேவர் தேவர்க்கும்தாயகமே
தவமே தவஞான தவக்கொழுந்தே
சர்வதயாபர சங்கரனே

சங்கம் நிறைந்தருள்தற்பரனே
தமியேன் உனதுட வருளாலிந்த
மங்கைபதிநாட்டில் தாமரையூர்
வளரும் தவம்செய்யும் மாயன் கைக்குள்

ஏவல் சீவாயிமாரெனவும்
ஏகனருள் கொண்ட ஒழுங்குடனே
காவல்காரராய் வரங்கள் வேண்டிக்
கருடரெனப்போர் தழைக்தோங்க

மூவுலோகம் தளைத்தோங்க
முதலோன் மகவெனகீர்த்திபெற்ற
காவபுகழ்கொண்ட கருடராசன்

விளக்கவுரை :

அருள் நூல் 2281 - 2310 of 2738 அடிகள்

arul-nool

வடகடலும் அழக்கிறதே வானம் இடியுதடா
பூமிவெடிக்கிறதே மலைகள் இளகுதடா
சுழல்காற்றுவருகதப்பா தேசம்விட்டு ஜனம்ஓடுதடா
மண்ணறைக் குள்ளிருக்கும் மாயாண்டி வெளிவருவேன்
அப்புவியை அரசாளவரும் போது சம்பூர்ணத்
தேவரைத்தானெழுப்ப அய்யாவும்
உம்பர்தனைவதைத்த வையகத்தில் வரும்போது
அன்பான மக்கள் தனை
அருள்புரிந்து அய்யாவும்
மாரிபொழயவைத்து மக்கள் பஞ்சம்தீர்த்து
ஆழிபெருகி அவனியெங்கும் அய்யாவும்
தரணியில்வந்து  தயவுசெய்து என்னசொல்வார்
வள்ளியாற்றுக்கு மேற்கு வாரியால் தானழியும்
கோட்டாறு அங்கே கொள்ளையினாலழீப்போம்
சுசீந்திரம்ட ஆறுடைந்து சுத்தகதி ஆகுதங்கே
ஆறுடைத்துத்தேரும் அன்புடனே தெற்குதர
தாமரைகுளம்பதியும் தண்ணீராய் போகுமங்கே
கழிக்கரையைத் தானழித்துக் கடற்கரையில்முழித்து
கன்னபெற்ற பிள்ளையுழும் கருத்தாகவேகூடி
கூடிஅய்யா குரபரா றாயணமுனியும்
தெற்குவடக்காய் திருப்பதியும் தோணுமென்றார்
ஈரேழுகாதம் இருக்கதுகாண் துவாரகையும்
வடக்குவாசல் துலங்குதுகாண் அம்பலமும் அம்பலத்தில்
நாரணரும் அரசிருக்க வாறோங்காண் வாறோமென்று
வாக்குரைத்தார் மக்களுக்கு அய்யா.

பஞ்சதேவர் உற்பத்தி

காப்பு

விருத்தம்

சீரணிகொன்றை சூடும் சிவனுடைய பாதம்போற்றி
நாரணர் மனுப்போலிந்த நகா;க்கலியுகத்தில் வந்து
போரணிமனுக்கள் யாவும் பேணியோர் தலத்துள்ளாகி
காரணமகிமை காட்டிக் கருத்துள்ளம் தற்காத்தாரன்றே

பொறுதியாய்த் தர்மநீதி புலனுள்ள மனுக்கள்யாவும்

விளக்கவுரை :

Powered by Blogger.