அருள் நூல் 391 - 420 of 2738 அடிகள்

arul-nool

வடிவுகொள்வதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
மாயன் திருப்பதிக்குள் யிருந்து புக்கு
எங்கள் அய்யா வைகுண்டராசர்  யெழுந்தருளி
தெருச்சுற்றி தேசத்தில் பவனிவருவது
யெங்கள் அய்யா சிவசிவா அரகரா அரகரா
கொந்தளத்துடன் வந்து எங்கள் அய்யா
கூண்டபெரும்  படையுடனே
கூடவரும்  காளாஞ்சியோடே கோட்டைசுற்றி
விளையாடி வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
இருபத்தி நாலிலொன்று ஏற்பதும் எங்கள் அய்யா
வைகுண்டராசர்  வந்து ஈரேழு உலகமெல்லாம்
ஒருகுடைக்குள் அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
கொந்தளப்ப ராசாவும் கோனாண்டி ராசனுட
கோட்டையெல்லாம் எங்கள் அய்யா அழித்து
வைகுண்டராசர்  வந்து தர்மபதியுதித்து
தர்மயுகம் அரசாள வருவது எங்கள அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
வாடாத பூவதுவாம் எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்துதிருப்பதிக்குள் புகுவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
முடிசூடும் பெருமாளாக எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து மறுமன்னர் யெதிரில்லாமல்
அரசாள வருவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சரணம்சரணமென்று தாழ்ந்துநடந்த அன்பருக்கு
வைகுண்டபதிதனிலே வைகுண்ட ராசராக
அரசாள வருவது எங்கள் அய்யா

விளக்கவுரை :

அருள் நூல் 361 - 390 of 2738 அடிகள்

arul-nool

மோட்ச உயிர்க்கும் நரகஉயிர்க்கும்
தீ நரகப்பாவி உயிர்க்கும்
ராச உயிர்க்கும் பள்ளிவாசல் உயிர்க்கும்

வைகுண்ட பதவி உயிர்க்கும்
எவ்வுயிர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா

முன்னுள்ள ராமர் உயிர்க்கும்
மோகவடி வானஉயிர்க்கும்
முகச்சையுள்ள ராமர் உயிர்க்கும்
இப்போ வந்த நாராயணர்
எங்கும் நிறைந்தவர் ஏகமயமானவன்
நமக்கு உதவிசெய்ய வந்த
நாராயணர் இவர்தான்
எவ்வுயிவர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
கறடு முறடு தட்டுவது எங்கள் அய்யா
கன்னியா குமரி க்கு வடக்கே
பதயேறுவதும் யெங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
நாடாள்வார் அப்பதியில் கூட்டுவதும் எங்கள் அய்யா
நல்லதொரு சிங்காசனம் இருந்து
அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
வானம் உள்ள தேவரெல்லாம்
பூமியுள்ள  நாள்வரைக்கும்
மற்றமுள்ள தேசமெல்லாம் எங்கள் அய்யா
வைகுண்டராசராக அரசாள வருவதும்
எங்கள் அய்யா சிவசிவா அரகரா அரகரா
நாகவடமதிலே எங்கள் அய்யா
வைகுண்டராசர்  வந்து நாலுவிதமாய்

விளக்கவுரை :

அருள் நூல் 331 - 360 of 2738 அடிகள்

arul-nool

சிவசிவா தெந்திநன்னாய் தென்னானாய் தெந்தி நன்னாய் தென்னானாய்!

சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய தன்னானாய்
சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோ
சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம்
சிவசிவா தந்தேநன்னம் தந்தேநன்னம் தந்தேநன்னம் தந்தேநன்னம்

மகாலிங்கம்           அரிலிங்கம்
சிவலிங்கம்           லிங்காலிங்கம்
குருலிங்கம்           சொக்கலிங்கம்
திருலிங்கம்           சுகலிங்கம்
ஏக்காலிங்கம்             ஆதிலிங்கம்
ஏகலிங்கம்            அருள்லிங்கம்

அடங்காலிங்கம்

உகப்படிப்பு

அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா

சிவசிவா குருவுக்கும் குருபண்டாரத்திக்கும்
சிவசிவா முறையாம் முறையோம் முறையோம்

சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும்
சிவசிவா முறையோம் முறையோம் முறையோம்

சிவசிவா அய்யா நாராயணர்க்கும்
நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும்
சிவசிவா கட்டியம் கட்டியம் கட்டியம்
சிவசிவா அய்யா நாராயணசுவாமி செயம் செயம் செயம்
சிவசிவா அரகரா செயம் செயம் செயம்

தேசமயம் யேகம் திட்டித்த இந்திர நாராயணர்
நிச்சயித்தபடி யல்லாது மனிதன்
நிச்சயித்த படியிலலை அய்யாவே
இங்கும் யெங்கும் யெவ்வுயிர்க்கும் யெங்கள்
அய்யா சிவசிவா அரகர அரகரா

அய்யா நாராயணர்க்கும் அம்மை உமையாளுக்கும்
தெய்வோர் இடுவது முறையோம் முறையோம் முறையோம்

விளக்கவுரை :

அருள் நூல் 301 - 330 of 2738 அடிகள்

arul-nool

மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்
அல்லா இல்லா இறைசூல் மகிலல்லா சிவசிவா மண்டலம்

அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம்
நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம்
பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம்

திருவுக்கும் சடைகுரு  சிவசிவா சிவமண்டலம்
செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம்
சன்னியாசிகுரு சிவசிவா சிவமண்டலம்

மகாகுரு சிவசிவா சிவமண்டலம்
அரி சங்கராகுரு சிவசிவா சிவமண்டலம்

மகாகுரு சிவசிவா சிவகுருமண்டலம்
மண்டலம் குருமண்டலம் மாயன் குருமண்டலம்

குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருமண்டலம்
சங்கம்நிதி குண்டலம் தரணி குருகுண்டலம்

தரணியது குண்டலம் தரணிபுகழ் குண்டலம்
சிவசிவா எங்கும் நிறைந்தவர் ஏகமயமாய் நின்றவர் சிவசிவா
ஏககுருவாகப் படைத்தது நிறைந்தவர் சிவசிவா
படைத்து நிறைந்தவர் பாலன்வடிவு கொண்டவர்
பங்காளர் பங்காளர் பாருலோகம் அளந்தவர்
அளந்தவர் திருமால் ஆதிகுரு சன்னியாசி
சிவசிவா சன்னியாசி செந்தில்வேல் வடிவுமவர்
செந்தில்வேல் சன்னியாசி செந்தி வேலவர்
வடிவும் புகழ்படைத்தவர் மாயநிற மானவரவர் சிவசிவா
கங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர்
நிறைந்து நிறைந்தவர் ஏகமெல்லாம் நிறைந்தவர்
எங்கும் நிறைந்தவர் ஏகமாய் நின்றவர்
மண்டலம் புகழ்படைத்த மாயன்குரு சன்னியாசி
சிவசிவா தந்தேனன்னாய்
தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய்

சிவசிவா த..ம்…அ…சி அரி  நன்றாகக் குருவே துணை

விளக்கவுரை :

அருள் நூல் 271 - 300 of 2738 அடிகள்

arul-nool

விதிதனைப்பார்த்து வேதன் விளம்புவார் வைந்தரோடு
துதியொடுயெழுத்தும் உந்தன் சுருதியும்கேள்மோ அய்யா
ஆதி நாராயணர் தானிந்த அழிகலி யுகத்தில்தானே
பதிகுண்டர் வந்தவன்றே பசாசுகள் ஒழிந்துபோனார்

பேயோடு பசாசுகூளி புரட்டொடு கலிகள்நீசம்
மாயொடுகபடு கள்ளம் மனக்கருப்பு யுகங்கள் தீர்ப்பு
பொய்யொடு புரட்டு வஞ்சப்பிழை பொல்லாப்பென்றதெல்லாம்   
வாயொடு வாயால் கெட்டு மறுப்பில்லாப்போனார்

நாரணர் வைகுண்டமாகி நாட்டினில் வந்தவன்றே
காரண மெல்லா மாச்சு கலியுகமழிந்து போச்சு
பூரண வேதநூலும் புராணமுன் ஆகமங்கள்
சாரமுங் கெட்டுப்போச்சு சதாசிவம் குண்டராச்சே

அழிவகை அழித்துத்தள்ளி அவரொரு சொல்லுக்குள்ளாய்
கழிவரை யெழுத்தை யூன்றிதோகைமா தவரும் ஆகி
வழிதன்னில் வன்னியாகி வகுத்திடும் மகவோராகி
அழிவில்லாப்பதியை ஆள ஆகமத்துரை தானேயென்றார்.

ஆனதால் ஆகாதென்ற அவ்வகையிதுநாள் சாக
ஏனமு விது தானென் றியம்பிட்ட வேதன்தானும்
மானமாய்க்கேட்டு வைந்தர் வானவர் சாட்சியென்று
தானவர் கணக்கில் ஊன்றிசத்தியாய்ப் பதித்தார் அன்றே

கணக்கினில்யெழுதி கொண்டு கருத்தினில் அடக்கிவைத்து
இணக்கியே இவரையெல்லாம் இலக்குலக்கதிலே கொல்வோம்
பிணக்கியே கோலம்தானும் பிசகில்லா வழியே செய்வோம்
குணக்கிலா கயிலையாளி கொடுகலி யுகத்தோரெல்லாம்.

உகசவ வானோர் தேவர் ஒருவரும் போகவேண்டாம்
வகையுடன் நானே செய்யும் வழிதனைப்பாருமென்று
இகபரம் முதலாயிங்கே யிருமென சாட்சிவைத்து
பகைசெய்த கழிவையெல்லாம் பார்த்தெரித்திட வுற்றாரே.

உச்சிப்படிப்பு

சிவசிவா அரிகுரு சிவசிவா
சிவசிவா ஆதிகுரு சிவசிவா

விளக்கவுரை :

அருள் நூல் 241 - 270 of 2738 அடிகள்

arul-nool

பின்னும் நாராயண வைகுண்டசாமி தானே
பேய் பலசீவசந்து ஊர்வன புல்பூண்டுகல்கா வேரியறிய,
எப்படியென்றால் வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து
காணிக்கை கைக்கூலி காவடி ஆடுகிடாய் கோழி பன்றி
யிரத்தவெறி தீபம் இலை பட்டையிதுமுதல்
யெந்தனக்கு வாங்க அவசியமில்லையென்று
தர்மம் நிச்சயித்து நாடும் குற்றம்கேட்க
நாராயணம் சிறையிருக்கும்போது,
இனி ஆரேக்கார் என்று அதை அறிந்து
ஓங்கியிருங்கோவென்று உபதேசித்தார்.
உடனே அவையெல்லாம்
‘அய்யாவாணை நாங்கள் ஒன்றும் யேற்கமாட்டோம்’
என்று சொல்லி போனார்கள்.
உடனே நாராயணவைகுண்டசாமி
தானே ஓராண்டு ஒன்றரை ஆண்டு கழித்து
யுகம் சோதித்துவருகிறபோது பேய்செய்கிற அநியாயத்தால்
வைகுண்டசுவாமியி
டம் வந்து ஆவலாதிவைத்தார்கள்
உடனே வைகுண்டராசரும் திட்டித்துப்பார்க்கிறபோது
பேய், செய்கிறது அநியாயம்தான் என அறிந்து
பேய்களுக்கு உள்ள ஆகமக்கணக்கை சோதித்து
பேயையெரிக்க வேண்டுமென்று மனதில் உத்தரித்தார்.

விருத்தம்


பேய்கள்தான் பிறந்தவாறும் பெருவரம் பெற்றவாறும்
மாய்கையாய் புவியில் பேய்கள் வந்ததோர் நாளும்பார்த்து
ஞாயமாய் நடுக்கள் கேட்டு நாமதை யெரிக்கவென்றே
ஆயர்முன் னெழுத்தும்கொண்டு அருள்முனிவருகவென்றார்

வரவென்று உரைத்தபோது மறைமுதல் வேதன்வானோர்
துராதனமீதோடே ஆவி துரிதமாய் வந்தாரங்கே
பரமருள் வைந்தராசர் பார்த்தவர் தன்னை நோக்கி
விரைவுடன்பேய்க்கு முன்னாள் விதிதனைப்பாருமென்றார்

விளக்கவுரை :

அருள் நூல் 211 - 240 of 2738 அடிகள்

arul-nool

ஒப்பார் ஒருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாதன் எழுதிவைத்த அகிலத் திரட்ட மானையிதே

என்றே யிந்த திருவாசம் இயம்ப சரசு பதிமாதும்
கன்றே மெய்த்தோன் யெழுதிமிக கலியுக மதிலே விட்டிடவே
நன்றோர் மறையோனிடமேகி நாட்டில் அறியச் செய்திடவே
அன்றே அவனிதானறிய அனுப்பி மகிழ்ந்து அங்கிருந்தார்.

ஆயிரத்து எட்டாம் ஆண்டு மாசியிலே
திருச்சம்பதி கடற்கரையாண்டி
நாராயணம் பண்டாரம் தெச்சணம் பள்ளிகொண்டு
காணிக்கை கைக்கூலி காவடிமுதல்
டியந்தனக்கு அவசியமில்லையென்று தர்மம் நிச்சயித்துக்
கொற்றவர் தானும்மாண்டு குறும்புகள் மிகவேதோன்றி
உற்றதோர் துலுக்கன்வந்து உடனவன் விழுந்தோடி
மற்றதேர்பத்தாமாண்டில் வருவோம் வைகுண்டமென்றே
முன் ஆகமத்தின் படியே
வைகுண்டம் பிறந்து இருக்கும் நட்சத்திரத்தில்
குதித்துக் கொள்ளும் தன்னே,
மாளுவது மாண்டுகொள்ளும் தன்னே,
முளிக்கப்பட்டது கண்டுகொள்ளும் தன்னே,
ஒரு நெல்லெடுத்து உடைக்க நாடு கேட்டுக்கொள்ளும்தன்னே,
இருநெல்லெடுத்து உடைக்கநாடு தாங்காதுதன்னே,
வானமும் பூமியும் கிடுகிடு வென்றிடும் தன்னே,
வானத்திலிருக்கிற வௌ;ளிக ளெல்லாம்
ஆலங்காய்போல் உதிர்ந்துவிடும் தன்னே,
மலைகள் யிளகிவிடும் தன்னே, பதியெழும்பி விடும்தன்னே,
முளிக்கப்பட்டது கண்டுகொள்ளும்தன்னே
என்று நருட்கள் அறியும்படி உபதேசித்துக் கொண்டு சிறந்தால்
இதைமனுவோர் அறிந்தும் கேட்டும் கண்டும்
இதுமுன்னுள்ள ஆகமும் சரி, இவர்சொல்வது சரியென்று,
இவர்தலத்தில் தானே போவோமென்று வந்தார்கள்.

விளக்கவுரை :

அருள் நூல் 181 - 210 of 2738 அடிகள்

arul-nool

ஆதித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் மனமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் மனமே கண்டு கோமலர்ப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத் தோடு சிறப்புட னிருந்து வாழ்வார்

திருமொர் வாசகந் தன்னை சீமையில் வரு முன்னாக வருவது திடனா மென்று   
வழுத்தினோம் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டாண்டில்
ஒருதிருக் கூட்டமாக ஓராயிரத்தெட்டாமாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே.   

வருத்தினோம் அம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாகக்
கருத்தினுள் ளகமே கொண்டு கவனித்தோர் அவர்க்கே தக்கும்
உருத்தில்லா கேட்போ ராகில் ஒருவரை வெளியே காணார்
சிரித்துரை கேட்போ ரெல்லாம் சிவப்பொருள் வெளியே காண்பார்

உலகில் மனுக்கள் தமிழாலே உவமை உரைத்து விட்டதுபோல்
கலக முடனே யென் மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை
அலகை துளைத்து நரகத்தில் ஆணி அறைந்து அவனிதனில்
குலய குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே.

எந்தன் மொழியும் யென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்கு தெரியத் திடமாய் எழுதிவைத்தேன்
எந்தப் பேரும் என்மொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும்
சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியும் காண்பாரே.   

காண்பார் தர்மக் கண்காட்சி கண்டே மரணமில்லாமல்
காண்பா ரென்றும் களிகூர்ந்து கண்ணோன்பதத்தைக் கண்ணாடி
காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராயக் கவ்வையுற்றுக்
காண்பா ரென்றுங் கைலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே

இந்த மொழியைத் தூசணித்த யிடும்பர் படும்பா டதுகேளு
கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணும் உருகிக் காலுழன்று
குந்தக் குடலும் பிரம்பூர கொப்புள் சிலந்தி உண்டாகி
எந்த விடமும் திரிந்தழிவார் என்னாணை யிதுவே தப்பாதே.   

தப்பா தெனவே ஆணையிட்டேன் சத்திபேரில் உண்மை யதாம்
எப்பா ரெல்லாம் மறிந்திடவே இந்தமொழியை யெழுதி வைத்தேன்

விளக்கவுரை :

அருள் நூல் 151 - 180 of 2738 அடிகள்

arul-nool

உள்வாங்கிப் போய்விடும்.
ஒரு சேர்வை விபூதி ஆறுசக்கரத்துக்கு விற்கவும்
ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும்,
ஒருகளஞ்சிசல மெடுக்கவும்,
இரண்டு நாளிகை வழிக்கு ஒரு தர்மசாலைமடமும் முடியும்.
தர்மம் கொடுக்கிற பேர்கள் உண்டு,
தர்மம் வாங்கிற பேர்கள் இல்லையென்று
சொல்லப்பட்;ட வெயிலாள் மடக்கொயாள்
வயிற்றிலே ஒரு பிற்ளை பிறந்து பத்துவயசாச்சு.
நாங்களும் மகா அருணாசலத்திலே
வாலிபப் பிள்ளையாயிருக்கிறோம்
அந்த வாலிபப்பிள்ளை என்ன சொல்கிறாரென்றால்,
வீரபுரந் தர்மராசா வழியிலே வீரநாராணர் இங்குவந்து
மூன்றுமாசம் தவசிபண்ணி
இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார்.
வந்தவுடன் அன்னியோன்னியக் கலகங்கள் உண்டாகும்
அந்த கலகத்திலே
ஒருவருக்கொருவர் அசுத்தியமாய்ப் போய்விடுவார்கள்
போனபேர்கள் போக இருக்கிறபேர்கள்
புண்ணிய புருஷராய் இருப்பார்கள்
அவர்களுக்கு வேண்டிய பாக்கியத்தைக் கொடுப்போம்.

விருத்தம்

பாக்கியமும் கொடுப்போம் நாமும் பலமுடன் வாழுவோர்க்கு
நோக்கிய கருணை யுண்டாம் நோவில்லா திருந்து வாழ்வார்
தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே.

தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடம் நிசமே சொன்னோம்
கனிமொழிச் சோதி வாக்கு கையெழுத் தாதி னோக்கும்
துணிவுடன் கேட்டோர் உற்றோர் தொலைந்தனர் பிறவி தானே,

வாசித்தோர் கேட்டோர் உற்றோர் மனதினில் உணர்ந்து கற்றேர்

விளக்கவுரை :

அருள் நூல் 121 - 150 of 2738 அடிகள்

arul-nool

ஓரேழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை
அடர்ந்து பிடிப்பார்க ளென்றும்
அறுத்த மங்கலியம் மிகுத்துக் கட்டுவார்களென்றும்
இன்றும் சிறிது நாளையிலே
கேள்விகேளாமல் இருக்கின்ற பேர்களும்
துர்ச்சனராய் இருக்கின்ற பேர்களும்
வர்த்தகராய் இருக்கின்ற பேர்களும்
தம்மில் ஒருவருக்கொருவர்
சண்டை போட்டு மாண்டுபோவார்கள் என்றும்
போனவர்கள் போக இருக்கிறபேர்கள்
புண்ணிய புருசரைத் தரிசனம்பண்ணி
சர்வ பாக்கியத்தை அடைவார்கள் என்றும்
மூன்று லோகத்துக்கு ஒரு வால்வெள்ளி உண்டாக்கி
நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம்
அதனாலே
மானிடரெல்லாம் மறந்து உட்கொள்ளை
பிறகொள்ளை அடிப்பார்க ளென்றும்
நமக்கு நன்றாகத் தெரியும்
நாம் அதற்குமேல் பூலோக பஞ்சாமிர்த ராச்சியத்திலே
பண்டார வேசமாய் வருகிறோம்
வருகிறபோது,
மண்ணெல்லாம் கிடுகிடுவென்று ஆடும்.
வானமும் மலையும் முழங்கி திடுக்கிடும் அப்போது
அதிலே சிலதுர்ச்சனரெல்லாம் மாண்டு போவார்கள்
போனபேர்கள் போக இருக்கிறபேர்கள்
புண்ணிய புருசராய் இருப்பார்கள்;.
மந்திர தந்திர வைத்திய
வாகடங்களெல்லாம் வடவாசலிலே போய்
சட்டுத்தீர்ந்து போய்விடுவார்கள்.
ஏழுசமுத்திரத்திலே மூன்றுசமுத்திரம் நீர்

விளக்கவுரை :

Powered by Blogger.