அருள் நூல் 1171 - 1200 of 2738 அடிகள்

arul-nool

சீதனமாய் உங்களுக்குநான் தந்தேனடாமகனே
சித்திரை மாதத்திலே செழித்தமழை பெய்யுமடா
பத்திரமாயிருந்து பணிவிடைகள் செய்திடுங்கோ
புத்திரன் நானொருவன் புத்திசொல்ல வந்தேனடா
வற்றாத பொய்கையிலே வாழுமந்தகுரு நாட்டில்
புத்திசொல்ல வந்திருந்து புலம்புகிறேன் நான்சுவாமி
கண்டகுறி சொல்லுதற்காய் கண்ணுறக்கம் நானுமில்லை
இந்தவிதிப்படியே வந்தேனடா நான்மகனே
எல்லோர்க்குங்கிட்டாது சொன்னேன் என்மகனே
பேய்செடிக்கு கொடுத்தவனை பிரம்பெடுத்துநானடிப்பேன்
ஆயிரத்தெட்டாம் மாசியில் வந்தங்கேபுத்தி சொன்னேன்
இதுவரைக்கும் புத்திசொல்லி என்வாயும் சடைந்துபோச்சு
இனி, சட்டங்களும் கூட்டங்களும் சமயங்களும் வருகுதடா
பெட்டகத்துத் திரவியமும் போய்விடுமோ என்மகனே
கட்டில்களும் நாருகளும் சட்டங்களும் போகுமடா
ஏரும்சீரும் ஆடுமாடும் போகுமடா என்மகனே
தெச்சணாப்பதியில் நான் தேரேற வந்தேனடா
காரணத்தைக்கேட்டமட்டும் கண்ணுறக்கம் தானுமில்லை
பூரணக்கேற்றபடி பூமிசெழிக்குமடா என்மகனே
வாதாடிவந்தவர்க்கு வழக்கறுத்து வைப்பேன் சுவாமி
நீராடிப்போகவேண்டாம் நெடுமால் திருக்கடலில்
ஓரடியாயளந்தமாயன் உலகமாள நாம்வருவோம்
பாதியடிகேட்டதற்குப் பங்கில்லையென்று சொன்னான்
சீறியவனைப்பார்த்ச் சினந்துவிட்டேன் மாவலியை
மாலயன் இடத்தில்வந்து மயங்குகிறான்மாமுனியும்
ஓரோலையெழுதுமட்டும் ஒளித்திருந்தேன் மாமுனியும்
கந்தல்துணி கழுத்திலிட்டும் காத்திருந்தேன் மாமுனியும்
சொந்தகிளை நானுனக்குச் சோறுதரவந்தேனடா
அட்டமந்திரமும் சாத்திரமும்மறைந்துபோகும் என்மகனே
இந்தவிதியுனக்கு இருத்திவைத்தேன் கலியுகத்தில்

விளக்கவுரை :



அருள் நூல் 1141 - 1170 of 2738 அடிகள்

arul-nool

என்னுடைய ஊழியக்காரர்களே ஒழுங்காய் நடந்திடுங்கோ
கள்ளக்கணக்கெழுதும் பேர்களைத்தான்
முள்ளளியில் போட்டிடுவேன்
முதுகிலடித்திடுவேன் முனிபரனும் சொன்னேன்நான்
நான்சொன்னபடி கேட்காவிட்டால் விடுவேனோ நான்சுவாமி
ஒரு அன்னவூஞ்சல் போட்டிருக்கு அந்தபயல்களுக்கு
கழுகடையம் காட்டுக்குள்ளே காட்டித்தாரேன்சுவாமி
அவன் இட்டதெல்லாம் சட்டமென்று இருக்கிறான்மகனே
அவன், பெட்டகமும் பொன்பணமும்
பறிப்பேனடா நான்சுவாமி
பொல்லாப்பு இல்லையடா புலம்புகிறேன் நான்சுவாமி
வாழையிரண்டு குலையீன்றதுபோல்
வாறேனடா வையகத்தில் என்மகனே
இனிபள்ளிக்கூடம் சோதிக்கபையனையும் கொண்டுவாறேன்
அடே, நாமெழுதும் கணக்குகளை நடுத்தீர்த்துநாமெழுதி
ஆண்டிமகன் ஆண்டியடா ஆருக்கும் அஞ்சுவனோ
பாண்டிமகன் பாண்டியடா பண்டாரக் கிழவனல்லோ
இனி, கொடுத்தவரம் பறிப்பேனடா
குடல்தோன்றி நான்சுவாமி
உம்பளமம் சம்பளமும் ஒருகாசும் நமக்குவேண்டாம்
உத்தரவுபெற்றபடி யுள்ளதெல்லாம் போதுமடா
கைலாசவரம்பெறவே காத்திருக்கிறேன் சுவாமி
பூலோக ஆசாபாசப் பங்குவேண்டாமமகனே
அண்டரண்ம் படைத்தசுவாமி அரிவிரி படிக்கிறாரே
ஒன்றிரண்டும் தெரியாது நீ சொல்லித்தர மாட்டாயோ?
அவரவர்க்கு உள்ளதுண்டு அநியாயம் செய்யாதே
என்னுடைய பத்திரங்கள் என்னுடைய பள்ளியெல்லாம்
கொடுத்துவரச் சொன்னார் குருபரமாமுனியும்
என்கணகக்ன் பேரறிவான் ஊரறிவான் தலமறிவான்
பரமண்டலம் வூமண்டலம் பகுத்தெழுதிவாமகனே

விளக்கவுரை :


அருள் நூல் 1111 - 1140 of 2738 அடிகள்

arul-nool

நாமெல்லாபதிகளுக்கும் இருந்துவிளையாடும் சுவாமி
என்பேரைச்சொன்னால் எல்லாரும் அறிந்திடுவார்மகனே
நான்,
உள்ளபடி சொன்னதுண்டால் உலகம்கைக் கொள்ளாது
நான்,
சொன்னதைச் சொல்லாமலவன் சுயமதியாய்ச் சொன்னான்
அவனைச் செவிட்டிலே
தான்போட்டுக் கொடுத்த கணக்கைப்பறிப்பேன்மகனே
கள்ளக்கணக்கர்தான்பெருத்துக் கனமோசமாகிப் போச்சே
நாம் உள்ளபடிகேட்கையிலே அவனுத்தாரம்சொல்வேனோ
பல்லக்கு நான்தருவேன் பதறாதே நீமகனே
இப்படிநான் சொல்லச்சொன்னக்கணக்கருக்கொரு நகவண்டி
போடாயே
நீபோடாவிட்டால்நான்போடுவேனடா மகனே
கைலாசவாசல் திறக்கையிலே காட்டித்தாறேனிந்த அதிசயத்தை
இதைப்
பொய்யென்று சொன்னவரோடே போருக்கு நான் வருவேன்
பல்லாக்குந் தண்டிகையும் பரிமணமும் சந்தனமும்
உள்ளபடி உள்ளதெல்லாம் உங்களுக்கு நான்தருவேன்
வெள்ளானைக் கடலுக்குள்ளே விளையாடக் கண்டேனடா
தென்கடலும் வடகடலும் ஒருவழியாத்தோன்றுமடா
பாரளந்த மாயவர்க்கு பலவிதமும் உபாயமுண்டு
ஓரடியா நாமளந்து ஓடிவந்தேன் மகனே
மாவலியைச் சிறையில் வைத்த மாயனல்லோமகனே
இடையன்சாமி யென்றாலும் உங்களுக்குச் சட்டமுண்டு
முன்னோலை யெழுதுமட்டும் முழித்திருப்பேன் மகனே
ஏட்டுக்கடங்காது எழுத்ததாணிக்குஞ் சேராது
இதைமெய்யென்று சொன்னவரை முத்தியணைபேன்மகனே
உதித்தநாள் கொடியேற்றி இருபத்தினநாள் இறக்கிவிடு
இது, கலியுகத்து ஆசாபாசம் கண்டேனடா மகனே

விளக்கவுரை :


அருள் நூல் 1081 - 1110 of 2738 அடிகள்

arul-nool

உங்களைப் புகழ்ந்தெடுத்தேன் என்மகனே!
வானவெள்ளி உதிக்குமுன்னே வந்தேனடா மகனே!
இனிபூமி வெடித்துப் புத்திசொல்ல நான்வருவேன்.
தேவதேவர் கூட்டத்தில் திருசங்குதான் முழங்கும்.
வேகம்வந்தால் தீராது சொன்னேன் நான்என்மகனே
சடைவுவந்தால்; உங்களுக்கு சங்கடங்கள் தீர்ப்பது யார்?
பஞ்சாசாப பொருளைப் பகர்ந்தெழுத மாட்டால்
இந்தவிதிப்படிநான் சொன்னேன் என்மகனே
ஆற்றங்கரைப் பள்ளியிலே அங்கிருந்தேன் மகனே
ஊத்தங்கரைப் பள்ளியிலே ஒதுங்கியிருந்தேன்மகனே
குதிரைபரியாகவேதான் குடிகெடுக்க நான்வருவேன்
பதியெழும்பிக்கலியழிக்க மறைபொருளாய் நான்வருவேன்
செடிக்குக் கொடுத்தவனை செவிதிருக்கி குற்றங்கேட்பேன்
பக்தியில்லா
தேவப்பிராமணரைப் பயம்காட்ட நாம் வருவோம்
உள்ளபடி சொல்வதற்காய் உகந்துவந்தேன் என்மகனே
நல்லபாம்பு விசம்போல நடத்துவேனடாமகனே
அந்தவல்லரக்கன் கோட்டையிலே வடிகொடுத்ததேன்மகனே
என்சொல்கேட்காவிட்டால் சிரித்தறுப்பேன் மகனே
ஆரார்க்கும் புத்திசொல்லி அழிக்கவந்தேன் கலியுகத்தை
என்புத்திக் கேட்டாயானால் உனக்கிறைபகுதிதவிர்த்து வைப்பேன்
ஆளும்கோட்டை வாசலிலே அதிசயம் உண்டாகும் மகனே
அது, கைகண்ட புலச்சமடா காட்டித்தா றேன்மகனே
திருச்சம்பதிக் கடலுக்குள்ளே திருமாலும் அங்கிருந்தேன்
அந்தபதி உட்படவே ஆகபதி யிருவத்தினாலாம்
ஆளும்பதி தென்கடலில் அதிகர் வரயம்பதி என்மகனே
தென்கடலில் வழிகாட்டித் திரும்பிமுகம் பார்;க்கையிலே
சந்திரனும்சூரியனும் சண்டைபோட்டே மறைவார்
தெற்குவடக்குமாகத் திருப்பததியும் தோன்றுமடாமகனே
அந்தபதி அல்லாதே அதிபதி யங்கேஉண்டு என்மகனே

விளக்கவுரை :


அருள் நூல் 1051 - 1080 of 2738 அடிகள்


arul-nool

பூலோகப்பங்கதுதான் பொருத்தமில்லை உங்களுக்கு,
பூலோகப்பங்கதுதான் பகுதியுண்டு என்மகனே
சாற்றரிய தன்விசயன் தங்கிக்கிடங்கு மென்றுசொல்லி
பூத்துஅவர் சொரிந்து பூமியில்வந்தார் என்மகனே!
வேர்த்து அவர்சடைத்துப் பாசுபதம் வாங்கிப்
பகைத்தீர்ப்பேன் என்மகனே!
பள்ளியறை தான்திறந்து பதியேறும் நாளையிலே
உள்ளபடி சொல்லுதற்கு உகந்துவாறே னென்மகனே!
கவிந்திருந்து மாமுனியும் இந்த அதிசயத்தைக்கண்டிருந்து
நிமிர்ந்து அவர் காரணங்கள் செப்புவார் என்மகனே
உள்ளபடி நாமிந்த உபதேசம் சொன்னாலும்
நல்லதென்று சொல்லியவர் நன்மைகொள்ளாரென்மகனே!
உன்னருள்தானென்றுசொல்லி உந்திடாதேமகனே!
உனக்கேச்சும் பேச்சுமல்லாத யிணக்கமில்லை என்மகனே!
மாய்ச்சல்வாரும் தானுனக்கு மகிழ்ந்திருப்பாய் நீமகனே!
காய்ச்சல்வந்தால் உன்னைக்காணாது கற்பித்தேன் நான்மகனே
பயந்திருந்தநீ பணிவிடைகள் செய்வாயானால்,
உயர்ந்த குடிவாய் உயிர்பிழைப்பாய் நீமகனே!
இதைப்
பகர்த்தெழுதிவந்து பள்ளிகூடங்கள் தோறுங்கொடுத்து
அதில் குறைவுவந்தாலும் தெளிந்துவா என்மகனே.
நாமெழுதச் சொன்ன கணக்கரோடேதும் பறையாதே
தர்மம் பெருகுமடா தான்தளிர்ப்பாய் நீமகனே!
இறைபகுதிதான்குறைந்து இருந்தாள்வோம் நாம்மகனே!
துவரயம்பதியதுதான் துலங்குவரும் நாளையிலே
இலங்குமடா என்பதிதான் எழுதினேன் என்மகனே!
நாதாக்கள்கூட்டம்நாட்டில் நடுநடுங்கும்
போருக்கு வந்தவனை போகவிடேன் நான்மகனே!
ஒழுங்காய் நடந்துவர உத்தரவு தந்தேனடா.
பூமணப்பதிதனிலே,

விளக்கவுரை :



அருள் நூல் 1021 - 1050 of 2738 அடிகள்


arul-nool

முட்டப்பதி தீர்த்தம் முழுத்தீர்த்தம், ஆகவில்லை
கிட்டவரும் நாளையிலே கிட்டும் அதிகபதி யென்மகனே!
வட்ட வட்ட சாலையிலே வழுகாமல் நீயிருக்க
நாம், இட்டபடி சட்டமெல்லாம் கூடிவரும் என்மகனே!
நாம் எழுந்தருளும் வேளையிலே அங்கங்கே உள்ளசனம்
எல்லோருந்தான்வருவார் என்மக்களே நீங்களுந்தான்.
அத்திபுரந்தனிலே ஐபேருந் தானிருந்தார்.
புத்தியுள்ள குருநாட்டில் பிறந்து வந்தேன் யென்மகனே!
பட்சிமிருகங்களும் பலஜீவ சந்துக்களும்,
பாதத்தில் வந்துவிழுந்து பணிவிடை செய் யும்மகனே!
தர்மம் பெரிதப்பா தான்சொன்னேன் என்மகனே!
தண்ணீர் பந்தல்வைத்துத் தலங்கள்சுற்றி சேவித்துவந்த,
மக்களுக்குப் பசியாற்றி விட்டுவிடு என்மகனே!
உகந்தகுடியென்று உன்னிடத்தில் சொன்னேன்நான்.
பயந்துதர்ம மிட்டந்த பரம்பொருளை தேடிடுங்கோ!
கொடுத்தது கூடாது கூடும்படி நீகொடுத்து,
அதிலிருந்து தசையாறி குளிர்ச்சியுள்ள ஓரிடந்தான்,
தழைப்பீர்கள் நீங்கமக்கள் தான்சொன்னேன் என்மகனே!
முன்முகப்பில் நிற்பாயென்று நான்பார்த்தேன் என்மகனே!
பின்முகப்பிலாக்வி விட்டான் பிற்கிளையை நான்பார்ப்பேன்.
பக்திமறவாமல் பதறாமல் நீயிருந்தால்,
புத்தி சொல்ல நான் வருவேன் புலம்புவேன் என்மகனே!
கர்த்தாவை நோக்கிக் கடுந்தவங்கள் நாம் செய்தால்
புத்திவரும் திருப்திவரும் புலம்புவேன் என்மகனே.
சீசன்மார் கண்டு சிரித்து மகிழ்ந்திருந்து
போதமில்லையென்று பேசிடுநீ என்மகனே!
ஆடரவில்பள்ளிகொள்ளும் மாலவனும் தேவியுமாய்,
பேதகமில்லையென்று பொறுமை சொன்னா ரென்மகனே!
சங்கத்தார் எல்லோரும் திருச்சபைக் கூட்டத்திலே,
என்பங்கைத்தாவென்று பகர்ந்துவா நீமகனே!

விளக்கவுரை :



அருள் நூல் 991 - 1020 of 2738 அடிகள்

arul-nool

ஒன்றுமூணு நாலுஏழு ஆடும்படி சொல்வேன்
மண்ணளந்த மாயனுட விவரமநாடுஅறியவும்
பித்தலாட்டப்பயல்களெல்லாம் பெருமை குலைந்து போகுதே
அல்லாவென்று நபியைத்தேடி அலைந்தபேர்கள் சடுதியில்
மூணுநாளை ஆட்டுக்குள்ளேமுன்னும்பின்னும் அடைக்குமே
காவல்காத்த மக்களெல்லாம் கைலயங்கிரி காணுங்கள்
விரைவாகு முடியும்சூடி வெள்ளியங்கிரி ஆளுவோம்.

சாட்டு நீட்டோலை முற்றிற்று

பத்திரம்

அய்யா சீசருக்குச் சொன்னது


தர்மசீசர் தன்கையிலேதான் கொடுத்து வாமகனே!
நாம், காப்பிட்டகையைகச் கடுகச்சொல்லும் பேர்களுக்கு
நாம், கூப்பிட்டுக்கேட்டு குற்றம் தெளிவிப்பேன்மகனே!
நாமாடி வந்த ஆட்டமெல்லாம்
அறைக்குள் பூந் தொளித்துயினி
ஆட்டமில்லாக்கூட்டம் இனக்கூட்டம் தேரோட்டம்.
அந்தந்த தலங்களிலே ஆடுமந்த பேர்களையும்
ஆடாமலேயிருந்து அறிவுசொல்லி வாமகனே!
இது, பரலோக வார்த்தையெல்லாம் பூலோக வார்த்தையில்லை,
இதை,
மெய்யென்று சொன்னவர்க்கு மேலோகம் தோணப்படும்.
அம்மையுமை பார்வதியும் அறிவுசொன்னாள் என்மகனே
பள்ளியறை தனிலேவந்து பகர்த்தெழுதிதான்கொடுத்து
இது உள்ளபடி யென்றுசொல்லி உகந்துவா என்மகனே
நாம், கூப்பிட்டுக்கொண்டு சமுத்திரத்துக்குள்ளிருந்து
நாம், கூப்பிட்டுக்கேட்டு குற்றம் தெளிவிப்பேன் மகனே!
கடைசியில் ஒருபதிதான் கடலுக்குள்ளிருக்குதப்பா.
அது துவர யம்பதிதான் துலங்கும்பததியதுதான்.
சட்டங்களும் கூட்டங்களும் தானமா னங்களும்,
அதை,
பெற்றவருக்குக் கிட்டிக்கொள்ளும் பேதகமில்லை மகனே!
பக்தியுள்ள மக்களுக்கும் புத்தியுள்ள மக்களுக்கும்
பயங்கள் தெளித்துவைப்பேன் பதறாதே என்மகனே!

விளக்கவுரை :

அருள் நூல் 961 - 990 of 2738 அடிகள்

arul-nool

கவ்வயிழுத்தானையோ சிவனே அய்யா
காரம்பசுவதனைக் கங்கைகரையில் கொல்லக்
கண்ட கலியாச்சே சிவனே அய்யா
துரியோதனனும் பஞ்சவரும் சேர்ந்து
ஒருவயிற்றில் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா
பதினெண்சாதியும் ஏழைச்சான்றோரை
வசைபறந்து போகலாச்சே சிவனே அய்யா
சான்றோர் வயலிலிருக்க நீசன் வயலில்
தண்ணீர் பாயக்கண்டேன் சிவனே அய்யா
எதிர்வாய்க்கால் தண்ணீர் குறுக்கே விழுந்துபாய
என்னத்தைக் கொண்டடைப்பேன் சிவனே அய்யா
மக்களுக்காக இருந்தேன் சிறையதிலே
வைகுண்டம் தேடுதே சிவனே அய்யா
நாளும் குறுகலாச்சே நருளும் பெருகலாச்சே
நாமும் சடையலாச்சே சிவனே அய்யா
பத்திரமா காளியுடன் கன்னிமார் ஏழுபேரும்
பரல்யேழும் கேட்கிறாரே சிவனே அய்யா
கலியுகம் முடிந்துபோச்சு சக்கராயுதத்துக்கு
இரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா
கூடும் சடமும் கூட்டோடே கொஞ்சம்
கைலாசபுரமிருக்க சிவனே அய்யா
வீடும் பதியும் விளையாடும் விண்ணோர்
கண்டு மனம்மகிழ சிவனே அய்யா
ஆளும்படிதான் அய்யா வாங்கே
ஆனநஞ்சிப் பொய்கையிடை சிவனே அய்யா
சூதுபடியாய் விளையாடிச் சொல்லி முடித்தோம்
துரோபதைக் குன்றிமக்கள் ஏழுபேர்க்கும்
கொடியசாபம் நீங்கிவிடும் காசிக்கலயங்களும்
கல்லறையும் பொன்பணமும் குத்துபிடித்தவனைக்
குரங்கோட்டம் பார்த்துவிடுவேன்

விளக்கவுரை :

அருள் நூல் 931 - 960 of 2738 அடிகள்

arul-nool

வடிவும்தான் வெளியாச்சே சிவனே அய்யா
சந்திரன் வலதுகண் சூரியன் இடதுகண்
தானாகும் நாளாச்சே சிவனே அய்யா
சூத்திரம் இடம்வலம் கற்றவாறோமென்று
சொல்லுவதெப்படிகாண் சிவனே அய்யா
எவரெவர் இருந்துமணியம் பண்ணவேணு மானாலும்
எந்தன் முக்கால் அடிக்குள்தானே சிவனே அய்யா
எப்போது கூவுமென்றுஇருக்குதே யெந்தன் நெஞ்சு
இன்னும் விடியல்லையோ சிவனே அய்யா
நொடிக்குள் முடிந்துவிடும் விஞ்சைகள் இங்கிருந்த
நோகுதே திருமேனி சிவனேஅய்யா
வட்டக்கிலுகிலுப்பைத்தட்டி முடிந்துவிட்டால்
வையகமழிந்திடுமே சிவனே அய்யா
கைதட்டும் பொழுதோ கண்தட்டுநேரமா
கலியனிருப்பதெல்லாம் சிவனே அய்யா
காடுநாடாகு மென்று நாராயணன் சொன்னசொல்
காலமும் சரியாச்சே சிவனே அய்யா
நாராயணர் எங்கும் தாராளமானாரென்று
நகரெங்கும் பேராச்சே சிவனே அய்யா
கலியோ விளைந்துபோச்சு சிவனே அய்யா
கிரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா
மெத்தவும் யெந்தன் மக்கள் உற்றபித்தளைவிற்று
வீட்டையும் விற்கலாச்சே சிவனே அய்யா
மூணுநேரம் துவைத்து ஒருநேரம் அன்னமுண்ண
முனிமார்கள் பெற்றமக்கள் சிவனே அய்யா
கடம்பாக்கொடியைத் தின்று கடலிலே தண்ணீருண்ண
காண்பாரோ நீசரெல்லாம் சிவனே அய்யா
அண்ணர் க்களந்தபாலை இடித்தகரைகாவல்காரன்
அவிழ்த்துப் பார்க்கலாச்சே சிவனே அய்யா
கனமுடன்முத்தமிடக் கொடுத்தகன்னத்தை நீசன்

விளக்கவுரை :

அருள் நூல் 901 - 930 of 2738 அடிகள்

arul-nool

கழந்தோடிப் போக்கண்டேன் சிவனே அய்யா
ஒருமாதத்துக்குள் பிள்ளைதரித்துப் பிறந்து
உருமாலும் கட்டக்கண்டேன் சிவனே அய்யா
இரண்டுதலை மூன்று கண்ணுமாகப் பிள்ளை
தரித்துப் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா
கோழிக்குஞ்சுகளெல்லாம் கூட்டை விட்டெழும்புமுன்
கொம்பு முளைக்கண்டேன் சிவனே அய்யா
சடைநாய், முழுத்தேங்காயை, கவ்விக் கொண்டுபோய்
தகர்த்துமே தின்னக்கண்டேன் சிவனே அய்யா
நரியன்மார், கூடி யிரையெடுக்கப் போக
நண்டு விரட்டக்கண்டேன் சிவனே அய்யா
வீட்டெலி, கூடியே பூனைதனைபிடித்து
விருந்து அருந்தக்கண்டேன் சிவனே அய்யா
இப்படி நான்கண்ட சொர்ப்பண வித்தேசங்கள்
இந்த கலியழிக்க சிவனே அய்யா
ஆனாலும் இன்னுங்கொஞ்சம் சான்றோர்படும்துயரம்
ஆறுமோ தேறுமோ சிவனே அய்யா
அம்மை பிறந்ததும் உண்மைதான் எல்லார்க்கும்
அனுகூலக்காலம் ஆச்சே சிவனே அய்யா
வினையற்ற சண்டாளன் வகைகேடு செய்ததாலே
மேலெல்லாம் கூசுதையோ சிவனே அய்யா
தோசியெந்தன் மைந்தர்களை யேசினபடியாலே
தோலெழும் கூசுதையோ சிவனே அய்யா
கலியுகத்தில் நானும் வலியவர்களைப்போல
காசுக்கும் அலைந்ததுண்டோ சிவனே அய்யா
முக்காலும் காணிக்கைகள் வேண்டி மடப்பள்ளிகள்
முடிக்கவும் சொன்னதுண்டோ சிவனே அய்யா
உள்ளவனுக்கென்றென்றும் இல்லாதவனுக் கென்றென்று
ஓரங்கள் சொன்னதுண்டோ சிவனே அய்யா
வானமும் தலையாச்சே பூமிதான் காலாச்சே

விளக்கவுரை :

Powered by Blogger.