அகிலத்திரட்டு அம்மானை 9661 - 9690 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முப்பொருளும் நீதானாய் உறுவெடுத்தா யானதினால்
எப்பொருளைக் கண்டு இயல்புபெறப் போறோங்காண்
வைகுண்ட மாமுனியே மனதிரங்கிக் காக்கவேணும்
மெய்குண்டர் பதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்தார்
அப்போது வானோர்க்கு ஆதிவைகுண் டருரைப்பார்
இப்போது வானோரே எனையறிந்த தெந்தவிதம்
என்றுவை குண்டர் இயல்பறியச் சொல்லிடவே
அன்று வானோர்கள் எல்லோரு மேதுசொல்வார்
கயிலயங் கிரியிலுள்ள கணக்குமுத லுள்ளதெல்லாம்
ஒயிலாகப் பிறப்பு உயர்கணக் கானதுவும்
தத்துக் கணக்கும் சஞ்ச முதற்கணக்கும்
பத்துக் கணக்கும் பலன்பெற்றோர் தங்கணக்கும்
மோட்சக் கணக்கும் முன்னுள்ள யுகக்கணக்கும்
வாச்சக் கணக்கும் வைகுண்ட நற்கணக்கும்
நரகக் கணக்கும் நடுத்தீருவைக் கணக்கும்
உரக்ககணக்கும் உற்றவானோர் கணக்கும்
தர்மயுகத்திலுள்ள தவமுனிவர் தன்கணக்கும்
பொற்றை பிரமா பூசாந்திரக் கணக்கும்
எல்லாக் கணக்கும் எடுத்துமிகத் தேவரெல்லாம்
வல்லான கயிலைவிட்டு வருவதுகாண் டேயடியார்
தியங்கி மனங்கலங்கித் தேவரோ டேகேட்டோம்
மயங்கிமிகக் கேட்டிடவே மாதேவ ரேதுரைப்பார்
நாரா யணர்க்கு நல்லவைகுண் டம்பிறந்து
சீரா யுலகமெல்லாம் சிறந்தே வொருகுடைக்குள்
ஆள வருவதினால் அவர்கைக்குள் ளிக்கணக்கு
நீள அரன்சிவனும் நெடிய மருகோனும்
இந்நாள் முதலாய் ஏழ்ப்பிக்க வேணுமென்று
சொன்னார்கா ணெங்களையும் சுருதிக் கணக்கையெல்லாம்
பொன்னுலோ கம்புகுந்து பெட்டகத்தோ டேயெடுத்து
இன்னேயின்நேரமதில் இன்பமுடனேசுமந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9631 - 9660 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கொண்டுநான் போறேன் குலக்கிழடே பாரெனவே
அன்றுவை குண்டர் அவர்நடந்தார் தெச்சணத்தில்
கெங்கைக் குலத்தாயை கிருஷ்ணர் வரவழைத்து
நங்கையே யென்னுடைய நாமமது கேட்டதுண்டால்
பால்போல் பதம்போல் பாவந்தீ ரன்பருக்குச்
சூல்புத்தி வம்பருக்குச் சூதுசெய் மங்கையரே
என்றுவை குண்டர் யாமம் கூறிக்கூறி
இன்றுதெச்ச ணம்போக எழுந்தருளி யேவருக
சகல வுலகோரும் சந்தோசங் கொண்டாடப்
புகல எளிதில்லாத பெரியநா ராயணர்க்கு
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள்
மெய்கொண்ட முப்பொருளோர் மேனியொன் றாய்த்திரண்டு
எல்லா வரமும் இவர்க்கு மிகக்கொடுத்து
நல்லோர்க்குக் காலம் நலமாகு மென்றுசொல்லி
வானலோ கம்வாழும் வானவருந் தானவரும்
தானே முன்னாகமங்கள் தப்பாதிடை முனிவர்
வகுத்திருந்த ஆகமங்கள் நிறைவேறி வந்துதென்று
முகுந்தன் கைலைமுன்ஆகமங்கள்போல்
மாமுனிவ ரெல்லோரும் மாசந்தோசங் கொண்டாடி
நாமு மெதிரேபோய் நல்லவை குண்டர்பதம்
கண்டுகொள்வோ மென்று கனமுனிவ ரெல்லோரும்
கொண்டு மலர்ப்பூக்கள் கோமான்கால்மீ தேசொரிந்து
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற துலுக்கன் உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் வருவோமென் றாகமத்தின்
வர்த்தமா னம்போலே வந்தவை குண்டரென
எல்லோரும் போற்றி எதிர்நின்று வாழ்த்திடவே
நல்லோரா யெங்களையும் நாரா யணர்மகனே
உன்கிருபை தந்து உதவிதரு வாய்மேலும்
முன்கிருபை யெல்லாம் உனக்குள்வச மாச்சுதல்லோ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9601 - 9630 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விருத்தம்

ஒருகுடை யதற்குள் ளாள ஒருவிஞ்சை யதிகம் பெற்றேன்
கருவுடை யோர்க்குங் காண கனவரம் பெற்றே னானும்
மறுகிநீர் தவிக்க வேண்டாம் வருவேனான் சான்றோ ரண்டை
குறுகலி யதனைத் தாண்டிக் கொள்வேனென் குலத்தைத் தானே

விருத்தம்

என்னையே கெணியா வண்ணம் ஏழையா யிருந்த சான்றோர்
தன்னையே பழித்தோ ரெல்லாம் சளமது துயரங் கொண்டு
அன்னீத நரகந் தன்னில் அகப்படத் தள்ளித் தள்ளிக்
கொன்றுநான் சான்றோர்க் கெல்லாம் கொடுப்பேன் மேற்பவிசு தானே

விருத்தம்

எல்லாஞ் சான்றோர் கையாலே எள்ளும் நீரும் கலிக்கிறைத்து
பொல்லாக் கலியை நரகமதில் புக்க அடித்துப் பேயோடு
கொல்ல விடைகள் கொடுப்பேனான் கூண்ட சான்றோர் கையதிலே
வல்லோர் புகழுந் தேவர்களே மனமே சடைக்க வேண்டாமே

விருத்தம்

வேண்டா மெனவே தேவருக்கு விடைகள் கொடுத்து வைகுண்டரும்
கூண்டாங் கடலின் கரைதாண்டி குதித்தே கரையி லோடிவந்து
தாண்டாய் முன்னே பெற்றதொரு தாய்க்கோர் சடல வுருக்காட்டி
ஆண்டா ராணை யொருவருக்கும் அகலா தெனவே யாணைகொண்டார்

விருத்தம்

நானோ பிறந்த சமுத்திரத்தின் நடுமேற் கடலி லன்னாபார்
ஏனோ பதியும் மேடைகளும் எண்ணிப் பாரு தேர்நிறமும் 
மானோ பொன்னோ மண்டபமோ வறடே யுனக்குச் சாட்சியிது
யானோ காட்டுஞ் சொரூபமெல்லாம் யாதா யிருநீ மறவாதே

விருத்தம்

பதமே பதமே பாற்கடலின் பாலை யகமே கொள்ளுவென
இதமாய் இதமாய்ச் சொல்லிடவே இசையா வண்ணம் வீழ்ந்திடவே
உதயம் உதயம் வெளித்திறந்த உருவை யொருவர்க் குரையாமல்
இதையே யிதையே மறந்துஎன்னை இளப்பம் பேசிநெகிழா தென்றார்

விருத்தம்


ஆண்டா யிரத்து எட்டுமுன்னே அன்னை யெனவே நீயிருந்தாய்
கூண்டா மெட்டா மாசியிலே குணமாய் நாரா யணர்மகவாய்
சான்றோர் கெதிகள் பெற்றிடவே தர்ம குண்டம் பிறந்துவொரு
கூண்டாங் குடைக்கு ளரசாளக் கொண்டே போறேன் கண்டிருநீ

நடை

வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள்
பொய்கொண்ட பேரைப் பெலிசெய் தரசாள

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9571 - 9600 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அரசேதெச்ச ணாபுவியில் வரவேணு முமக்கபயம்
அந்தக்கலி திந்தெய்யென் றறவே வரவேணும்
அத்திடக்கலி செத்திடக்கலி அறவே வரவேணும்
அய்யக்கலி தீயாவியே அறவே வரவேணும்
அவகடக்கலி சவகேடாக அழிக்க வரவேணும்
ஐம்பத்தாறு சீமையொரு
குடைக்குள் அரசாள்வாயுமக்கபயம்
அத்தாவுமக் கபயம்சிவ முத்தா வுமக்கபயம்
ஆதிநா ராயணர்க்குப் பால னானகுணதீரா
ஆதியுமக் கபயம்சிவ சோதி யுமக்கபயம்
அரனேசிவ னார்க்குமருக னான குணபாலா
அலைவாய்க் கரைமடமாம்பதி ஆள்வா யுமக்கபயம்
அய்யாவை குண்டாஅலை கண்டா யுமக்கபயம்
தாணுமா லயனாய்ப்பேரு தழைக்க சிவமுளைக்க
தானாயொரு குடைக்குள்தர்மத் தரணி யாளவந்தாய்
சாணாக்குரு வேதக்குரு தானானா யுமக்கபயம்
தாண்டும்பதி கூண்டப்பதி தானானா யுமக்கபயம்
தவமேதெச்ச ணாபூமியில் தானே வருவாயே

விருத்தம்

தெச்சண மீதே வந்து தெய்வமா யிருந்து கொண்டு
மிச்சமாய் புதுமை காட்டி மேதினி யெவருங் காண
உச்சமே சான்றோர்க் கீந்து உதவியுஞ் செய்வா யென்று
பச்சமாய்த் தேவ ரெல்லாம் வைந்தரின் பதத்தில் வீழ்ந்தார்

விருத்தம்

வீழ்ந்திடக் கண்டு வைந்தர் விடையுள்ள தேவர் தம்மைச்
சோர்ந்திட மொழிகள் சொல்லி தேவரே பதற வேண்டாம்
ஓர்ந்திட எனக்கு முன்னே உள்ளது தானே யென்று
கூர்ந்திட வுரைத்தீ ரெல்லாம் குணமுடன் மகிழ்ந்து சொல்வார்

விருத்தம்

தெய்வ மாதர்கள் தாம்பெற்ற தேவரே சான்றோர்க் கெல்லாம்
மெய்வரம் பதுபோல் ஞாயம் விளம்பிடப் பேறு பெற்றேன்
பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றுற வரங்கள் பெற்றேன்
அய்வரைக் காத்துத் தர்ம அரசுக்கும் பேறு பெற்றேன்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9541 - 9570 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இன்னங்கலி நீசக்குலம் கொல்ல வரம்பெற்றாய்
ஏழைக்குடி சாதிகட்கு மீள விடைகொடுத்தாய்
எழுந்துதெட்ச ணாபுவியில் இரங்கி வரவேணும்
மாளக்கலி தாழநரகம் வீழ வரம்பெற்றாய்
வாய்த்தகுல சான்றோரவர்க் கேற்ற வரம்பெற்றாய்
வரவேணுந் தெட்சணாபுரி மலைபோ லுயர்ந்துபோகு
தேசக்கலி தீதுவநி யாயம் பொறுக்கரிதே
சிவனேவைந்த ராசேதெச்ச ணாபு வியில்போவோம்
கேட்பாரில்லை யெனவேபேய்கள் கீழும் மேலுஞ்சாடுது
கிருஷ்ணாமகா விஷ்ணுவேவுன் கிருபை யிரங்கவேணும்
தாண்மைக்குலச் சான்றோருன்னைத் தவத்தால் தேடிவருந்துன்
தாயுமவர் தகப்பன்சுவாமி தானே யல்லாலுண்டோ
சர்வபரா சுவாமிசிவ சுவாமி யுமக்கபயம்
சாணார்படுந் துயரங்கண்டு சுவாமி யெழுந்தருள்வாய்
ஆற்றிலலைக்கோரை யைப்போல் அலைவதுந் தெரியாதோ
அரியேசிவகெதியேயென அபயமிடுகுதய்யா
அணைப்பாருன்றன் துணையேயல்லால் அவர்க்கே ஏதுமுண்டோ
பலநாளவர் படும்பாட்டெல்லாம் பார்த்தே யிருந்தாயோ
பயமோ அவரிடம் போகினுஞ் செயமோ சொல்லுமையா
பாலரவ ருமக்கேயல்லா பாரா திருப்பாயோ
ஆருமற்றார் போலேயவர் அலைவ துந்தெரியாதோ
அரனேசிவ மருகாவுனக் கபயம் உனக்கபயம்
அவரால்நாங்கள் படும்பாடெல்லாம் அறியல் லையோசுவாமி
ஆதிமுறை யாகமத்தை அழித்துச் சொல்லுறோமோ
அதுதான்பொய்யோ மெய்யோவென் றாகமந் தனைப்பாரும்
அண்டரண்டந் தொழவேவரும் ஆதி யுமக்கபயம்
அரகராசிவ அரனேசிவ அரசே யுமக்கபயம்
ஆதிசிவ னாதிதவ மோதி யுமக்கபயம்
ஐயுங்கிலி சவ்வுங்கிண அரனே யுமக்கபயம்
அம்மாஆதி அய்யாசிவ மெய்யா உமக்கபயம்

விளக்கவுரை :  
 

அகிலத்திரட்டு அம்மானை 9511 - 9540 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நன்றுநன் றென்று நன்முனிவர் சம்மதித்தார்
உடனேதான் வைகுண்டர் உள்ள மிகமகிழ்ந்து
கடலை மிகத்தாண்டி கரையிலே செல்லுமுன்னே
தேவாதி தேவரெல்லாம் திருமுறைய மிட்டனரே
ஆவலா தியாக அபயமிட்டார் தேவரெல்லாம்
வைகுண்டருக் கேபயம் முறையமிட்டார் மாதேவர்
கைகண்ட ராசருக்குக் காதிலுற அபயமிட்டார்
நாரணருக் கேயபயம் நாதனுக் கேயபயம்
நாரணருக் கேயபயம் சுவாமி யுமக்கபயம்

வேறு

நாராயணாதீரா நல்லநாகந்தனில்த்துயில்வாய்
நாடுங்கலி கேடுவரும் நாதா உமக்கபயம்
சீராய்ப்புவி யாளவரு வாயே உமக்கபயம்
சிவசிவனேசர சரணம்மகா சிவனே உமக்கபயம்
பாராயேழை முகமேபரா பரமே உமக்கபயம்
பாலர்தெய்வச் சான்றோர்படுந் துயரந் தனைமாற்றும்
நாராயண தீராநல்ல நாகந் தனில்துயில்வாய்
நலமோவுனக் கிதுநாள்வரை நாங்கள் படும்பாடு
கடல்மேல்துயில் கண்ணாகனி கண்டே கன்றையெறிந்தாய்க்
களமேபெலி கொளவேகூளி களிக்க லங்கையழித்தாய்க்
குடைபோல் குன்றை யெடுத்தாய்
முப்புர கோட்டை தனையெரித்தாய்க்
கோனினிடை மாதரிணைக் கோனா கவேவளர்ந்தாய்க்
காடேகாலி மேய்த்தாய்ப்புனல் களியன் தனைவதைத்தாய்க்
கஞ்சன்தனை வதைத்தாய்பெலக் காரர்பெலம் வதைத்தாய்
மாடேமேய்த்துத் திரிந்தாய்வலு மாபலியைச் சிறைவைத்தாய்க்
கோசலாபுவி யாண்டாய்வலுக் குகனை மிகக்கண்டாய்க்
குறோணிதனை வதைத்தாய்வலு குண்டோமசா லியைக்கொன்றாய்க்
கொல்லதில்லை மல்லன்கொடுஞ் சூரன் தனைவதைத்தாய்
ஈடாய்வலு இரணியன்குடல் ஆறாயோடக் கொன்றாய்
இரக்கமற்ற துரியோதனன் அரக்கர் குலமறுத்தாய்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9481 - 9510 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கடல்திரைவாய்ப் பதிகள் கண்டுசென்று தானிருநீ
தண்ணீர் மண்ணீந்து தானிருபோ என்மகனே
கண்ணி லுருக்காணும் கைக்குளொரு கிள்ளைவரும்
பகைவன் மடிவன் பைங்கிள்ளை யங்காகும்
உகவன் வருவன் ஒருவ னறிவான்காண்
பகவான் சுழற்றும் பாருலக மும்பழுக்கும்
அகங்காணும் பாந்தள் அஞ்சாட்சரங் காணும்
மூசிர சீர்சிரசு முகாசிரசு முன்காணும்
பார்சிரசு கண்டு வாறேனென் பாலகனே
தகையாதே முன்னடநீ சந்தமுனி தன்கூட
பகையாதே என்மகனே பஞ்சவரைக் காத்துக்கொள்ளு
அஞ்சுபூக் கொண்டு ஆசாரஞ் செய்தோர்க்கு
வஞ்சக மில்லாத வாழ்வுகொடு என்மகனே
மகனே நீவாற வழியின் பவிசுகண்டு
தவமுடித்து நீயும் தாண்டியிரு என்மகனே
என்றுவை குண்டருடன் இசைந்தமுனி ரண்டுவிட்டு
கொண்டயச்சுக் காத்திருங்கோ குண்டருட பக்கமதில்
சாட்சியாய்ப் பார்த்திருங்கோ தரணி வளப்பமெல்லாம்
காட்சி கொடுத்திடுங்கோ கண்ணரியோன் முன்னிருந்து
கோபங்காட் டாதேயுங்கோ குணமுனிவ ரேகேளும்
சாபங் கொடாதேயுங்கோ சாஸ்திர முனிவர்களே
நாரா யணர்பெலங்கள் நன்றா யறிவீர்களே
சீரான பொறுதி செய்வதுநீர் கண்டிருங்கோ
வைகுண்ட மாமுனிதான் வாழுந் தலத்தருகே
மெய்குண்டமாய் மேற்கு மேன்மூலை யோர்தனுக்கு
வடகீழ் மூலை மாமுனியே ஓர்தனுக்கு
இடமிதுவே சொன்னேன் யார்க்குந்தெரி யாதிருங்கோ
இந்தப் படிகாத்து இருங்கோ தருணம்வரை
சிந்த முனிவர்களே செல்லு மிவர்கூட
என்று முனிகளுக்கு இயம்பச் சிவநாதன்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9451 - 9480 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சோதிமணியே சுவாமி யெனத்தொழுதார்
உடனே மகன்தனையும் உவந்துமுகத் தோடணைத்துக்
கடலின் சிறப்பைக் கண்டாயோ என்னுசொல்லி
மகனே வுனைவிட்டு மறுவூரு வாழ்வேனோ
நகமுஞ் சதையும்போல் நான்வருவே னுன்கூட
எத்தனை கோடி இயல்தர்மஞ் செய்துவுன்னைப்
பெற்றெடுத்தே னுன்கூட பிறகே வருவேனப்பா
நீயொருவ னெனக்கு நிலையென்று காணுமுன்னே
தாயில்லாப் பிள்ளையைப்போல் தட்டழிந்தே னென்மகனே
மகனே வுனைக்கண்டு மனச்சடவெல் லாந்தீர்ந்தேன்
சுகமேபோய் வாவெனவே சொல்லி யனுப்புவேனோ
உன்கூட நானும் ஓடி வருவேனப்பா
என்கூட வுன்தாயும் ஏகி வருவாள்காண்
என்று தாய்தகப்பன் இவர்கள் வழிகொள்ளவே
கண்டு வைகுண்டர் கனமாய் மனமகிழ்ந்து
நீங்கள் வருவதுதான் எனக்குவெகு சந்தோசம்
தாங்கி வருவேன் தமியேனுங்கள் பாதமதை
அப்போது நாரா யணர்மகனே யாவிமிக
இப்போ தென்மகனே இயம்புகிற புத்தியைக்கேள்
சீமை யதுகாணச் செல்லோங்கா ணுன்கூட
வாமை மகனே வருவோமுன் கண்காண
மகனே நீநடக்க வைகுண்டம்வை குண்டமென
உகமீ ரேழுங்காண உரைத்துவிடு யாமமது
முன்னடந்து யாமம் மொழிந்துநட என்மகனே
பின்னடந்து நானும் யாமம் பிசகாமல்
நடத்திவைப் பேன்மகனே நல்லமணி மரகதமே
அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல்
காட்டுவிப்பேன் மகனே கண்ணேநீ முன்னடநீ
தாட்டிமையா யுன்வாக்கால் தானுரைத்த யாமமெல்லாம்
நடத்திவைக்க வாறேன் நன்மகனே வுன்பிறகே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9421 - 9450 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

காக்காமகா தர்ம கற்பையுங் காக்கவே
கர்த்தனரி கிருஷ்ணர் புத்திர ராய்வரும்
தாக்கத் திறம்வளர் வைகுண்ட ராசரே
தர்மமதி லுறையும் பொறுமைக் குலதீரா
பள்ளியுணராய்சிவமருகா
தம்பில மானகு றோணிகுண் டோமனைத்
தத்தியாத் தில்லைமல் லாலனைச் சூரனை
வம்பு இரணிய ராவண சூரனை
மகோதர னானது ரியோதனப் பாவியைக்
கொம்பிலுங் கெம்பிலும் அம்பினாற் கொன்றதோர்
கோபால கிருஷ்ண குழந்தைவை குண்டரே
நம்பின அன்பருக் குபகார சாலியே
நாரணா சீமைக் கரிவரி யானவா
பள்ளியுணராய்சிவமருகாநீ

விருத்தம்


பள்ளிதா னுணர்த்தத் தேவர் பரிவுடன் கேட்டு வைந்தர்
தெள்ளிவை குண்ட ராசர் சிந்தையி லன்பு கூர்ந்து
நள்ளிய தேவ ரார்க்கும் நயமுடன் தயவ மீந்து
துள்ளியே தகப்பன் பாதம் தொழுதவர் வணங்கிச் சொல்வார்

நடை

தேவர் துயரமெல்லாம் தீர்ப்போங்கா ணென்றுசொல்லி
மேவலர்கள் போற்றும் விசயவை குண்டராசர்
தகப்ப னுடபதத்தில் சரண மிகப்பணிந்து
உகப்பரனார் நோக்கி உரைக்கிறா ரன்போரே
என்னைஎடுத்து விஞ்சையீந்து தந்தவரே
என்னையீடேற்றி யிரச்சிக்கும்பெம்மானே
மன்னே பிதாவே மாதாவே யென்தாயே
எல்லா விவரமதும் எடுத்துரைத்தீ ரென்றனக்கு
நல்லோரே நானினித்தான் நடக்க விடைதாரும்
பண்டுள்ள ஆகமம்போல் பால்வண்ணர் பெற்றிடும்வை
வைகுண்டர் தெச்சணமே கொள்வார்தான் பள்ளியென
ஆதியா கமப்படியே அனுப்பிவையு மம்புவியில்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9391 - 9420 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

திகதக தரிகிட செகமுக மருள்புரித் திக்கிர விக்கிரனோ
நீதனோ கீதனோ வீதனோ மாதனோ நீதவெங் கோகுலனோ
நெகிடுகலி யகடற விகடுகுடல் கருவற நெக்கிர விக்கிரனோ

விருத்தம்

இப்படி சரசுமாது இயல்புதா லாட்டக் கண்டு
செப்படி முனிமா ரெல்லாம் சிவவைந்தர் பதத்திற சென்று
முப்படி முறைபோல் தேவர் முக்கந்தன் பள்ளி கொள்ள
அப்படித் தேவ ரெல்லாம் அவரிசை கூற லுற்றார்

பள்ளி உணர்த்தல்


பள்ளியுணராய்-சிவமருகா நீ பள்ளியுணராய் சிவமருகா
பள்ளியு ணராய்நீ தெள்ளிமை யாகவே
பாற்கடல் மீதினில் தாக்குட னுதித்தவா
வெள்ளி யுதித்திடப் பள்ளி யுணர்த்தவும்
வேதநா ராயணர் சீதகோ பாலர்க்குக்
கொள்ளி யெனவந்த வைகுண்டக் கோவனே
கோவேங் கிரிவள ரீசர் மருகோனே
வள்ளி மணவாளா வளர்செந்தூர் வாரியில்
வந்து பிறந்துநல் தெச்சணம் புகுந்தவா
பள்ளியுணராய் சிவன்மருகாநீ
வேக முடனொரு சந்தத்து ளாடியே
மேதினி யோர்க்குப காரங்கள் செய்யவே
ஆகாத்த பேர்களை அக்கினியில் தள்ளவும்
ஆகின்ற பேர்க்குப காரங்கள் செய்யவும்
தாகத்துக் கானதோர் தண்ணீர் கொடுத்துநீர்
சஞ்சல நோய்பிணி யஞ்சற்குத் தீர்க்கவும்
ஏகத்துட னாளும் நாரண வேந்தர்க்கு
எம்பி யெனவரும் தம்பிரா னானவா
பள்ளியுணராய்சிவமருகாநீ
மூர்க்கன் கலியுக ராசனைத் தட்டியே
முடுமுடுக்கஞ் செய்த மூர்க்கரை வெட்டியே
ஆர்க்கமு டன்புவி யைம்பத்தாறு சீமையும்
அடக்கியொரு சொல்லுக் குடைக்குள்ளே யாளவும்

விளக்கவுரை :   
Powered by Blogger.