அகிலத்திரட்டு அம்மானை 8251 - 8280 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தாங்கள் கிரிபோலே தங்கமலை யிங்குமுண்டு
பாடப் படிக்கப் பாவாண ரிங்குமுண்டு
ஆடக் கைகாட்ட அரம்பையர்க் ளிங்குமுண்டு
பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு
மாலேக்க நல்ல மாதுகன்னி மார்களுண்டு
கண்டு களித்திருக்கக் கனக நிதிகளுண்டு
உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு
பல்லாக்கு முண்டு பதிபோகி மாருமுண்டு
குல்லாக்க ளுண்டு குளிக்கத்தாம்பி ராழியுண்டு
சதுரங்க மேடையுண்டு சண்முக விலாசமுண்டு
பதிரங்க மானப் பாலாழி யுண்டுமையா
மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம்
போத வருங்காண் பொற்சவடி யாபரணம்
வருசமொன் றானதிலே மாலைவட மாயிரந்தான்
கருவலங்க ளின்னதென்று காணாத் தொகையதுதான்
காவடி கோடி காணிக்கை முக்கோடி
பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி
இப்படியே யென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள்
எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான்
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண் டசையாமல்
நாட்டமுட னுள்ளத்(து) அடக்கிமறுத் தேதுரைப்பார்
நல்லதுவே மருகன் நலமா யிருப்பதுதான்
பொல்லாது செய்யாமல் புரிந்தாள் வதேபோதும்
என்றுரைத்து அய்யா ஈசரோ டேதுரைப்பார்
பண்டுவிட்ட வாசகச்சொல் பற்றிச்சோ பூமியிலே
வல்லாண்மைக் காரருக்கு மதமிப்ப டியிருக்கும்
இல்லாதெளி மைகட்கு இருக்குமது மேல்தயவு
என்று இருபேரும் இயம்பி மனதடக்கி
நன்றெனவே கந்தனொடு நல்வார்த்தை யும்பேசி
அந்த முடனே எல்லோருந் தானடந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8221 - 8250 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பேறானோர் காண்பார் பெரியதர் மப்புவியை
என்றுசில வாத்தியங்கள் இசைந்திசைந் தூதிவர
கன்றுதிரை மேய்த்தோரும் கயிலையங் கிரிகடந்தார்
கடந்து திருச்செந்தூர் கடல்காண வேணுமென்று
நடந்தாதி நாதன் நல்லீசர் சத்தியோடு
கூடிக் குணமாய்க் கொலுவார பாரமுடன்
தேடித் திருவைச் சிணமாய் வழிநடந்தார்
நடக்க மறையோர் நாற்றிசையும் போற்றிநிற்க
கடற்கரையை நோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்
வழிநடந்து மாயவரும் வல்லபர மேசுரரும்
களிகூர்ந்து மாதுமையும் கந்தன்செந் தூர்கடலின்
அருகேயொரு காதம் அவர்வரக்கண் டாறுமுகன்
கருவி குழறி கடற்கரையோன் தான்கலங்கி
ஆறு முகனும் அங்குள்ள தேவர்களும்
வீறுமயில் வாகனனும் வெற்றிரத மேறாமல்
என்னவித மாமோ என்று மனம்பதறி
மன்ன னறுமுகனும் மனமயங்கித் தான்பதறி
வந்துமா மன்தனையும் மாதா பிதாவையும்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
இம்மூ வரையும் யானெப்போ காண்பேனென்று
எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன்
காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது
பார்த்திருந்த கண்ணின் பாவந் தொலைந்ததின்று
என்று வேல்முருகன் ஈசுரரை யுந்தழுவி
கன்றுதிரை மேய்த்த கண்ணரை யுந்தழுவி
மாதாவை யுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடிச்
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடிச்
வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங் காசனத்தில்
பாருங்கோ அய்யாஎன் பதியி னலங்காரம்
நீங்க ளிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8191 - 8220 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தேசபர சோதனைக்கு தெச்சணத் திலேயனுப்பி
வாசமுட னிங்கே வருவோ மெனவுரைத்தார்
அப்போது ஈசர் முதலானசங்கத் தோரர்களெல்லாம்
இப்போது நாங்கள் ஏகுவோ மும்மோடே
என்றுரைக்கச் சங்கம் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுமறி யாகாதே உற்றவுப தேசமதைத்
தேவன் திருமுதலாய்த் தெய்வகன்னி மார்முதலாய்
மூவர் முதலாய் உள்ளறியா விஞ்சையது
உவரியில் நடக்கிறது உங்களுக்கு தெரியாதே
நடந்தா லறிவார் நடக்குமுன் னேயொருவர்
அடக்க மறியாத அருவிஞ்சை யீதல்லவோ
அந்தவகை யானதினால் எல்லோரு மென்கூட
வந்தால் சரியல்லவே வரவேண்டாமென்றால் நோவீர்களே
என்றுரைக்க நாதன் எல்லோரு மேதுரைப்பார்
ஒன்றுமறி யாதிடினும் உம்முடனே வாறொமென்றார்
உடனே திருமால் உற்றலட்சு மிநினைவால்
நடைமேல் நடையெனவே நல்லசெந்தூர் தானோக்கி
உன்னி சிவமும் உற்றசத்தி நல்மாதும்
வன்னத் தேவர்முதலாய் மாமுனிவர் கின்னரரும்
சங்கமு மெங்குளோரும் சகலகலை வாணர்களும்
மங்களக் காரர்களும் மாதுசத்தி யைச்சூழ்ந்து
மரைவீசும் மாதர்களும் மாதுசக்தியைசூழ்ந்து
திரைதிரையாய்க் கன்னியர்கள் சேவித்து ஏத்திவர
ஏழு வாச்சியமும் இமலோக ரேற்றிவர
தொழுவார் சிலபேர் தொம்தொ மெனஆடிவர
நாராயணர் வைகுண்டராய் நல்வாரியில் பிறந்து
காரணமாய் தெச்சணத்தில் கலிசோதனைப் பார்த்து
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்மபதி சத்திமக்க ளையாள
வாறாரைய்யா நாதன் வைகுண்ட மும்மூர்த்தி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8161 - 8190 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

செப்புகிறோ மென்று தெண்டனிட்டுச் சொல்லலுற்றார்

வேதவியாசர் முன்னாகமம் கூறல்

விருத்தம்

குறோணி முதலாய்க் கூறுகெட்ட நீசன்வரை
தரணியுக மாறுஞ் சாற்றியே-சத்தியுடன்
தர்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து
தர்மயுகம் ஆளுவதும் தான்சாற்றினார்

நடை

குறோணியொடு நீசன் கோள்பிறவி ஏழ்பிறந்து
தரணியுக மாறோடு தன்னால ழிந்ததுவும்
சொல்லி விரித்துச் சுத்த வியாகரரும்
நல்லியல்பு கொண்ட நாரணரோ டேதுரைப்பார்
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற நசுறாணி உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் ஆனவை குண்டராசர்
உற்றொருவர் வந்து உலகாள வேணுமென்றும்
முன்னே பரந்தான் மொழிந் ததின்படியே
தர்ம புவியாள சுவாமிநீ ராகவென்றும்
துர்மக் கடன்கழித்தோர் சுகமாக வாழ்வரென்றும்
ஆகமத்தைப் பார்த்து ஆதிவி யாசுரரும்
நாகத்தணை கிடந்தோன் நாட்டம தாயுரைத்தார்

விருத்தம்


உரைத்திட வியாசர் தானும் உண்மையாய் மொழிந்த தெல்லாம்
கரைத்திடாக் கயிலை மீது கல்லிலே எழுதி வையும்
நரைத்திடா முனிவன் சொல்லும் நாள்வழி தோறு முற்ற
உரைத்திட முனிக்கு மேலும் உதவிகள் செய்ய வென்றார்

திருமால் கைலை விட்டு திருச்செந்தூர் ஏகல்


நடை

என்று சொல்லிவேத வியாசர் இசைந்ததெல்லாம்
அன்றுகயி லயங்கிரியில் கறைக்கண்டர் நாட்டிவைத்தார்
மாமுனியை யுமனுப்பி மாயத் திருமாலும்
தாமுனிந் தீசுரரைத் தழுவியுறத் தானணைத்துக்
கேதாரம் விட்டுக் கிரிகோவில் வந்திருந்து
கோதார மாயன் கூறுவார் சங்கமதில்
செந்தூர்க் கடலில் சென்றுபள்ளி கொண்டிருந்து
விந்து வழிசெய்து வித்தகனை ஈன்றெடுத்துத்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8131 - 8160 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சார முடனே தரணிதனி லோதிவைத்தோம்
அகப்பே ரெனவே அவனிசொல்வ தில்லையினி
உகப்பாரந் தீர்க்க உரைப்பீர்கா ணீசுரரே
லட்சுமியை முன்னம் இருத்தினோஞ்செந் தூர்க்கடலில்
பச்சணியுங் காளிதனைப் பாரச் சிறையில்வைத்தோம்
என்மகவாய்ப் பெறவே இராச்சியத்தி லோர்சடலம்
தன்மகவா யங்கே தான்பிறந்து நல்லவயசு
இருபத்து நாலு என்றாச்சே மாநிலத்தில்
கருவுற்ற முத்தோசம் கழிவதும் நாளின்றாச்சே
விட்டதிரு வாசகந்தான் மேதினியோர் கொள்ளாமல்
கட்டங் கொடிதாய்க் காணுதே தொல்புவியில்
புத்திவரு மென்றிருந்தோம் பிழையாத நீசனுக்கு
சற்று மனதில் தங்குமோ நல்வசனம்
பார்த்திருந்தால் போராது பார்மீதில் மக்களுந்தான்
காத்திருந்து வாடுகிறார் கௌவையுற்று நல்மனுக்கள்
மனுவிடுக்கந் தீர்த்து வாய்த்தசொல் லொன்றதுக்குள்
தோணியேவை குண்டர் சுத்தயுக மாளுதற்கு
நாளுண்டோ போவதற்கு நல்வேதச் சொல்லுமுண்டோ
கோளுண்டோ வெற்றியுண்டோ கூறும்நீர் வேதவுரை
அப்போது ஈசர் அகமகிழ்ந்து கொண்டாடி
முப்போது வுள்ள முறைகேட்க வேணுமென்றால்
ஆதி வியாகரரை அழைப்பித்துக் கேளுமென்றார்
சோதி யுரைக்க திருமா லகமகிழ்ந்து
அழைத்தார் வியாகரரை அதுகேட்டு மாமுனியும்
பிழைத்தார்கள் போலே பொடுபொடென ஓடிவந்து
தெண்டனிட்டு மூவரையும் சுவாமிவிண் ணப்பமென்றார்
கண்டிருந்(த) அய்யா கரியமுனி யைப்பார்த்து
முன்பிறந்த துமகிலம் முடிந்ததுவுஞ் கொல்லிமிகப்
பின்பிறக்கப் போவதுவும் பிசகாமல் சொல்லுமென்றார்
அப்போ வியாசர் ஆதி யருளாலே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8101 - 8130 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கருத்தினுள் ளகமே கொண்டு கவனித்தோ ரவர்க்கே தக்கும்
உருத்தில்லாக் கேட்போ ரெல்லாம் ஓருரை வெளியே காணார்
சிரித்துரைக் கேட்போ ரெல்லாம் சிவபொருள் வெளியே காண்பார்

விருத்தம்

உலகில் மனுக்கள் தமிழாலே உவமை யுரைத்து விட்டாப்போல்
கலக முடனே யென்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை
அலகைத் துளைத்து நரகதிலே ஆணி யறைந்து அவனிதனில்
குலையக் குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே

விருத்தம்


எந்தன் மொழியு மென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரியத் திறமா யெழுதி வைத்தேன்
எந்தன் பெருமான் திருமொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும்
சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியுங் காண்பாரே

விருத்தம்

காண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரண மில்லாமல்
காண்பா ரென்றுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி
காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராய்க் கவ்வையற்றுக்
காண்பா ரென்றுங் கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே

விருத்தம்

இந்த மொழியைத் தூஷணித்த இடும்பர் படும்பா டதுகேளு
கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணு முருகிக் காலுழன்று
குந்தக் குடலும் புறம்பூற கொப்புள் சிலந்தி யுண்டாகி
எந்த இடமும் அலைந்தழிவார் என்னாணை இது தப்பாதே

விருத்தம்


தப்பா தெனவே சாபமிட்டேன் சத்திபேரி லுண்மை யதாய்
எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன்
ஒப்பா ரொருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாத னெழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே

விருத்தம்

என்றே யிந்தத் திருவாசகம் இயம்பச் சரசு பதிமாது
கன்றே மேய்த்தோ னெழுதிமிகக் கலியுக மதிலே விட்டிடவே
நன்றோர் மறையோ னிடமேகி நாட்டி லறியச் செய்யெனவே
அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே

நடை


நாடறிய எம்பெருமாள் நல்லதிரு வாசமிட்டு
லாட மதிலிருந்து வாவுவா ரீசரொடு
வாரமில்லை நமக்கு வஞ்சகங்க ளில்லாமல்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8071 - 8100 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சொல்லுகிற வெயிலாள் மடக்கொடியாள்
வயிற்றிலே நாடுமொரு மதலை பிறந்து
பத்து வருசமாச்சுது. நாங்களும் மகா அருணா சலத்திலே
நாங்களும் வாலிபப் பிள்ளையா   யிருக்கிறோம்.
அந்த வாலிபப் பிள்ளை என்ன சொல்கிறா ரென்றால்
வீர புரந்தர தர்மராசா வழியிலே விகிநாராயணர்
இங்கே வந்து மூன்று மாதத்துக்குத் தவசுபண்ணி  
இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார்.
வந்தவுடனே அந்நியோன் னியக் கலகமாகும். 
அந்தக் கலகத்திலே ஒருவருக்கொருவர்
சத்தியமாய்ப் போவார்கள்.போன பேர்கள் போக
இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். 
அவர்களுக்கு வேண்டிய  பாக்கியத்தைக் கொடுப்போம்.

விருத்தம்

பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழு வோர்க்கு
நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்து வாழ்வார்   
தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே

விருத்தம்

தினமொரு நேர மெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்
துணிவுடன் கேட்டோ ருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே

விருத்தம்

வாசித்தோர் கேட்டோ ருற்றோர் மனதினி லுணர்ந்து கற்றோர்
ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார்

விருத்தம்


திருமொழி வாசகந் தன்னைத் தேசத்தில் வருமுன் னாக
வருவது திடனா மென்று வழுத்தினோம் தொளாயிருத்து 98ல்
ஒருதிருக் கூட்ட மாக ஓராயிரத் தெட்டா மாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே

விருத்தம்

வருத்தினோ மம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கிக்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8041 - 8070 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மிகுத்துக் கட்டுவார்களென்றும்,  இன்னுஞ்சிறிது
நாளையிலே கேள்விகேளாமலிருக்கிற பேர்களும்
துர்ச்சனராயிருக்  கிறபேர்களும்
வர்த்தகனாயிருக்கிற பேர்களும் தம்மில் ஒருவருக்கொருவர் 
சண்டைபோட்டு மாண்டுபோவார்களென்றும்
போனபேர்கள் போக  இருக்கிற பேர்கள்
புண்ணிய புருஷரைத் தெரிசனம் பண்ணிக் கொண்டு
சர்வபாக்கியத்திலே அடைவார்களென்றும்
மூன்று லோகத்துக்கு ஒரு வால்வெள்ளி யுண்டாக்கி
நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம்.
அதினால் மானிடரெல்லாம் உயிரிழந்து உட்கொள்ளைப்
பிறக்கொள்ளை யடிப்பார்களென்று நமக்கு நன்றாய்த் தெரியும்.
நாமதற்குமேல் பூலோகக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே
பண்டார வேசமாய் வருகிறோம்.
நாம் வருகிறபோது மண்ணெல்லாம் கிடுகிடென்றாடும்,
மலையும் வானமும் முழங்கித் திடுக்கிடும்,
அப்போது அதிலே அநேக துர்ச்சனர்களெல்லாம்
மாண்டு போவார்கள். போனபேர்கள் போக
இருக்கிறபேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள்.
மந்திர தந்திர வைத்தியங்களெல்லாம் மறைந்து போய்விடும்.
வாதை பேய்களெல்லாம் வட கயிலாசத்திலே போய்ச்
சட்டுத்தீர்ந்து போவார்கள். ஏழு சமுத்திரத்திலே
மூன்று சமுத்திரம் நீருள்வாங்கிப் போய்விடும்.
ஒரு சேர்வை விபூதி ஆறு சக்கரத்திற்கு விற்கவும்,
ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும்,
ஒரு கழஞ்சிச் சலமெடுக்கவும், இரண்டு நாழிகை வழிக்கு
ஒரு தண்ணீர் பந்தலும், மூன்று நாழிகை வழிக்கு
ஒரு தர்மசாலை மடமும் நன்றாய் முடியும்.
தர்மங்கொடுக்கிற பேர்களுண்டு
தர்மம் வாங்கிறபேர்களில்லை யென்று

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 8011 - 8040 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உயிர்நிலையில்லாதவர் அழிந்து போவார்கள். அதில்மேல் பதினெட்டுத்
துர்க்கையம்மாள் பிறந்து அந்தக் கலியுகப் பஞ்சமிர்த  
ராச்சியத்திலே வருகிறார்கள். வந்தவுடனே மூன்று
நாள் இருள்மூடி ஆனைத்   துதிக்கைபோல் மழைபெய்யும்.
அதிலே சில துர்ச்சனர்களெல்லாம் மாண்டு   போவார்கள்.
அதின்மேல் பக்தியாயிருக்கிற பேர்களுக்கும்
பிள்ளை யில்லாமலிருக்கிற பேர்களுக்கும்
கண்ணில்லாமலிருக்கிற பேர்களுக்கும்  
தனமில்லாமலிருக்கிற பேர்களுக்கும்
பராபர மூர்த்தியும் சாம்பசிவ மூர்த்தியும் ஸ்ரீராமச்சேயரும்
தீட்சையாகித் திருமனதிரங்கிப் பக்திகாரணங்களைச்
சோதித்துப் பகிர்ந்து அவரவர் கேட்ட வரங்களைக் கொடுப்பார்கள்.
இன்னுஞ்சிறிது நாளையிலே சிலபேர்கள் தெய்வீகமாய்ப் போவார்கள்.
முன்னுக்கு மழைதட்டும்
உலகிற்பல பல வஸ்துவும் பலிக்குமென  வகுத்தார்.
சிலநீசர் மிகக்  கறுப்பை நினைவில்லாத்தொட்டு
மிகப் பாசமடைந்து  அலைந்து அழிந்து போவார்கள். 
வாலி சுக்ரீபனும் பண்டாரமாகிப் போவார்கள்.
வாச்சி கொழு கலப்பையெல்லாம்  நாசமாகிப் போய்விடும்.
முன்னாலே துலுக்கர்  தம்மை நாசம் பண்ணுகிறதற்காகவே 
துர்க்கையம்மாளைப் பிறவி செய்தனுப்புகிறோம்.
பிராமணர் நன்றாய் சுகத்துடன் வாழ்வார்கள்.
புவியில் முகத்துலிங்க மில்லாத பேர்க்குப் பிரமதேவரை யனுப்புகிறோம்.
பிரமதேவர் புவிமீதில் வந்து பக்தி  காரணங்களைச் சோதித்துப்
பொல்லாத பேரைத் தெரிந்து பிடித்துப் புதுக்கிராம  தேசத்தில் வாழுந் 
தேவதைக்குப் பூசைப்பண்ணிப் போடுவாரெனப் புகட்டினார்.
காவேரியாற்றுக்குள்ளே மூன்று பொதி மங்கிலியம்
கவிழ்ந்து அடையவேணுமென்றும் காசினியில் ஒரு
ஏழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை 
அடர்ந்து பிடிப்பார் களென்றும், அறுத்த மங்கிலியத்தை

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 7981 - 8010 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விருத்தம்

ஒருதிரு விபூதி யுண்டை ஒருயிரு மிச்ச மாகும்
ஓருதிடத் தேங்காய்ப் போலும் ஒருமனத் திரணை போட்டுக்
கருதிட வெற்றிலை பாக்கும் கனிந்திடு வோர்க்கு மூவர்
வருகிட ஞாய மெய்யின் வழியிது வாகுந் தானே

விருத்தம்


மனுமொழி யிதுவா மென்று மதத்துடன் பேசு வோர்க்கு
இனிதல்ல வீண்தா னென்று இயம்பிய பகைஞர் தம்மை
குனிதவள் துர்க்கை சென்று கொன்றவள் நரகம் பூத்தி
கனிதுடன் துர்க்கை வாரி கடல் தீர்த்த மாடுவாளே

வேறு


திருவாசம் - 1

எறும்புகடை யானைமுதல் எண்பத்துநான் குயிர்கள்
எழுகடல் பதினாலு புவிகளும் இரதிமதி சூரியர்கள்
பருதி பாலாழியும் இயல்வானம் வாயு முதலாய்
தெறும்பு மாமலை மாமரச் சோலையும் சேடனுந்
தலைமோடனு மறியவே தென்கீழத் தேவரு
மிங்குள்ள மூவரும் தேசதெய் வேந்திர னறியவே
வாச முனிவோர்களும் வேதசன் னாசியும்
மறையாறு சாஸ்திர மறியவே மண்டல மளந்தகை
கொண்டெழுதும் வாசகம் மண்டலர்க ளெவரு மறியவே சொல்கிறேன்
வறும்பகல் தொளாயிரத்து தொண்ணூற் றெட்டாண்டினில்
வளர்ஸ்ரீ சாம்பசிவ மூர்த்தியும் மகாபரசுராமரும் ஸ்ரீராமசேயரும்
பதியேறும் மூர்த்தியும் வண்மை பார்த்திந்தக்கலி யுகத்தில்
படூரநீ சக்கலியால் வரும்வாறு வண்மையைப் பகர்ந்து
திருவாசக மெழுதிப் பலநூல் அறிந்தவர் எவர் அவர்களும்
பக்தியுட னெக்காலமும் பணிந்துதிரு வாசகத்தை முத்தியணைந்
தோர்க்குமிகுபல னுண்டாம் பகரக்கேளு நத்தியுடன்
பூலோகக் கலியுகா தேசத்தில் நடக்கு முறைதானுங் கேளீர்

வேறு


நல்ல வீரபுரந்தரத் தர்மராசா வங்கிசத்திலே
நாடும் ஒரு மதலை பிறந்து வந்தவுடன் நல்ல அருணாசலத்திலே
வாலிபப் பிள்ளையாயிருக்கிறார். அந்தப்   பூலோகக் கலியுகத்திலே
ஆசாரமாயிருக்கிற பேர்களும் அழுக்கான புத்திமதியா 
இருக்கிற பேர்களும் அவரவர் ஆங்காரமாகியே அலைந்து

விளக்கவுரை :   
Powered by Blogger.