அகிலத்திரட்டு அம்மானை 10651 - 10680 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்று நருட்களறியும்படி உபதேசித்துக் கொண்டிருந்தார்
அதை  உலகோர் அறிந்தும் கேட்டும் முன்னுள்ள ஆகமமுஞ்சரி,
இவர் சொல்கிறதுஞ் சரியென்று ஒத்துக்கொண்டு
இவர்தான் வைகுண்ட சுவாமி யென்று கேட்டறிந்து,
இவர் தலத்திலே போவோமென்று வந்தார்கள்
பின்னும் நாராயண வைகுண்ட சுவாமிதானே,
பேய் பல சீவசெந்து ஊர்வனம்
புற்பூண்டு கற்காவே ரியறிய உபதேசித்தார்
எப்படி யென்றால், வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து
காணிக்கை கைக்கூலி காவடி
ஆடுகிடாய் கோழி பன்றி இரத்தவெறி தீபதூபம்
இலைப்பட்டை இது முதலானதென்றனக்கு வேண்டாம்
அவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு நாடு குற்றங்கேட்க
நாராயணம் சிறையிருக்கும்போது, இனி ஆரேக்கார் என்று பார்க்க,
அதையறிந்து  நீங்களும்  ஒதுங்கியிருங்கோ வென்று உபதேசித்தார்,
உடனதுகளெல்லாம் அய்யாவாணை  நாங்களொன்றும்
ஏற்கமாட்டோமென்று சொல்லிப் போனார்
உடனே நாராயண வைகுண்ட  சுவாமி தானே 
ஓராண்டு ஒன்னரையாண்டு கழித்து உகஞ்சோதித்து வரும்போது,
பேய்  செய்கிற  அன்னீதம் பொறுக்காமல்
மானிடர் வைகுண்ட சுவாமியிடம் வந்து ஆவலாதி வைத்தார்
உடனே வைகுண்டராசரும் திட்டிச்சுப் பார்க்கும் போது
பேய்  செய்கிறது அன்னீதந்தான் என்றறிந்து
பேய்களுக்குள்ள முன்னாகமக் கணக்கைச் சோதித்துப் 
பேயை எரிக்கவேணு மென்று
நாராயண வைகுண்ட சுவாமி தானே மனதிலுத்தரித்தார்

பேய்களை எரித்தல்

விருத்தம்

பேய்கள்தான் பிறந்த வாறும் பெருவரம் பெற்ற நாளும்
மாய்கையால் உலகில் பேய்கள் வந்ததோர் நாளும் பார்த்து
ஞாயமாய் நடுவுங் கேட்டு நாமதை யெரிக்க வென்றே
ஆயர்முன் னெழுத்துங் கொண்டு அருள்முனி வரவே யென்றார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10621 - 10650 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சீமையைம்பத் தாறும் சொல்லொன்றுக் குள்ளாக்கி
மேன்மைச் சான்றோர்க்கு முத்திரிசெங் கோல்கொடுத்துத்
தாழ்வில்லாச் சான்றோரைத் தர்மபதி மீதில்வைத்து
ஆள்வதுவும் நிசமே ஆதியா கமப்படியே
நாரா யணர்க்கு நாள்பகையாய் வந்தவர்க்குப்
போரா தெனக்காலம் புராண முரைக்கிதுகாண்
சொல்லி யுலகோர் தொல்புவியில் கொண்டாடிப்
பல்லுயிரு மறிந்து பண்பாய் மகிழ்ந்திருந்தார்
மகிழ்ந்து சிலநாள் வைகுண்டர் பாதமதில்
மிகுந்துபல சாதிமுதல் மிகவந் துரைகேட்டார்
வந்த நருளறிய வைகுண்டர் வாய்திறந்து
சொந்தமுடன் வசனம் சொல்லிமிகக் கூறலுற்றார்

திருவாசகம் - 4

1008 ஆம் ஆண்டு மாசியில் கடற்கரையாண்டி
நாராயணம் பண்டாரம் தெச்சணம் பள்ளிகொண்டு
காணிக்கை கைக்கூலி காவடி முதல் என்றனக்கு
அவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு,
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகத்தோன்றி,
உற்ற துலுக்கன் உடன் வந்துடனோடி,
மற்றொரு பத்தாமாண்டில் வைகுண்டம் வருவோ மென்ற
ஆகமத்தின்படி வந்து வைகுண்டம் பிறந்து கொண்டிருக்கும்
நச்சேத்திரத்தில் குதிச்சிக் கொள்ளுந்தன்னே,
மாளுவது மாண்டு கொள்ளுந் தன்னே,
முழிக்கப்பட்டது முழிச்சி கொள்ளுந்தன்னே,
முழிக்கப்பட்டது கண்டு கொள்ளுந்தன்னே,
ஒரு நெல் எடுத்துடைக்க நாடு கேட்டுக் கொள்ளுந்தன்னே,
இரு நெல் எடுத்துடைக்க நாடு தாங்காது தன்னே,
வானமும் பூமியும் கிடுகிடென்றாடிடுந் தன்னே,
வானத்திலிருக்கிற வெள்ளிகளெல்லாம் ஆலங்காய்போல்
உதிர்ந்திடுந்தன்னே, மலைகள் இளகிடும் தன்னே,
பதி எழும்பிடும் தன்னே, முழிக்கப்பட்டது கண்டுகொள்ளுந்தன்னே.

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10591 - 10620 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஒருதலமாய் வந்து ஒன்றாய்க் குவிகிறதும்
கருதினமாய்ப் பார்த்து அவர்கள் மிகவுரைப்பார்
முன்னாள் மொழிந்த முறையாக மம்போலே
இந்நாள் சமைந்திருக்கு தென்று மகிழ்ந்துரைப்பார்
வைகுண்ட ராசர் வருவார்தான் பூமியிலே
மெய்கொண்ட ராசர் மேதினியில் வந்தவுடன்
சாதிபதி னெண்ணும் தலமொன்றி லேகுவிந்து
கோதிக் குளிக்கும் ஒருகிணற்றி லல்லாது
கர்மவியா திசெவிடு கண்குரு டூமையெல்லாம்
தர்மத்தால் தீர்த்தார் சகலவுயி ரானதுக்கும்
செல்வ முண்டாகும் சீமானார் வந்தவுடன்
அல்லல் மிகத்தீரும் அவரை யறிந்தவர்க்கு
எளியோர் வலியோர் எல்லா மொருப்போலே
பழியான பேச்சுப் பாரினில் கேட்கவிடார்
தேசமெல்லாம் பரக்கும் சீமானார் வந்தசெய்தி
தோசமெல்லா மகலும் சுத்தமாய்க் கண்டவர்க்கு
சார்ந்தவர்க்கு சாந்தனுமாய்த் தர்மங்கொடுத் தருள்வார்
சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகுமெனச்
சொல்லியிருந் தாகமத்தின் துல்யச் சுருதிப்படி
நல்லவை குண்டர் நாட்டில்வந்தா ரென்றுசொல்லி
சாதிபதி னெண்ணும் சடல வரவுமற்று
ஆதிவை குண்டர் அடிவீழ்ந் தேத்தியவர்
எல்லா மொருதலத்தில் இரண்டு மனுப்போலே
அல்லோரும் வந்தோர் ஆவிநீ ருண்டிருந்தார்
அல்லாமல் முன்னாள் ஆகமத் தின்படியே
எல்லாமுன் வியாசர் எழுதின சொற்படியே
தெய்வச்சான் றோர்களுக்குச் சேர்ந்த வியாழமது
மெய்வகையாய் வந்து மிகத்தோன்றி யேயிருக்க
இன்ன மிவர்வழியில் இயல்பாய் மணமுகித்து
மன்னர் வைகுண்டர் மகராச ராகியவர்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10561 - 10590 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முக்கிய மாக ஓடிவந்தா ரம்மானை
ஆகாயங் காணாது அறைக்குள் ளடைத்திருந்த
வாகா ஸ்திரீமாரும் வந்தார்கா ணன்போரே
கிழவன் முடவன் கெற்ப ஸ்திரீமாரும்
இளவயசு கொண்ட ஏந்துபச லைமுதலாய்
ஒக்கவே வந்தார்காண் உடையவனார் தன்னிடத்தில்
வந்த நருட்கெல்லாம் வாய்த்தவலு வியாதிமுதல்
சிந்தையுடன் தன்னால் தீர்த்தாரே தர்மமதாய்
ஐம்பது வயதாய் அரைதளர்ந்தப் பெண்ணாட்கும்
சம்பத்துக் கேற்ற சந்ததிகள் தான்கொடுத்தார்
உடல்தன மில்லாது உருவழிந்த பெண்ணாட்கும்
சடலமுருக் கொடுத்துச் சந்ததி யுங்கொடுத்தார்
பிறவிக் குருடூமை பேச்சறா நாக்குழறல்
திறவி யொளிபோல் திறமும் மொழிகொடுத்தார்
தர்மமில்லாப் பாவிகட்குத் தாண்மை மிகக்கொடுத்தார்
கர்ம வியாதிகளால் கால்கள்மொட்டிக் கைகள்மொட்டி
அந்தமொட்டி யெல்லாம் அறத்தா லதைத்தீர்த்துச்
சந்தமுடன் கைகால் தானாக்கித் தான்கொடுத்தார்
உடலை யுருக்கும் உற்ற சயஇருமல்
குடலைப் புரட்டும் குன்மவாய் வுமுதலாய்த்
தீர்த்துக் கெடுத்தார் தேசத்தோர் கண்டுமிகப்
பார்த்துப்பார்த் துமகிழ்ந்துப் பச்சமுற்று வந்தனர்காண்
கர்த்தாதி கர்த்தன் கடவுளா ரென்றுசொல்லி
என்தேசத் தோரும் இங்குவந்தா ரன்போரே
பதிணென் சாதிகளும் பண்பா யொருதலத்தில்
விதிவந்து தென்று மேவிக்குலா வியிருந்தார்
மேவிக் குலாவி மிகவே யொருதலத்தில்
ஆவிநீ ருண்டு அகமகிழ்ந்தா ரம்மானை
நொம்பலங்க ளெல்லாம் நிசமாகத் தீருவதும்
அன்பா யுலகில் ஆனதே சத்தோரும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10531 - 10560 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாமிருப் பதுவோ நாலு திரையதனுள்
ஆமவரே கண்டு அறிந்தா லதுவீதம்
இச்சொரூபத் துள்ளே இதுவிதிக்க வொண்ணாது
வச்சுகந்து பார்ப்பீரால் வழிதெரியு மிந்தேட்டில்
என்னமோ வென்று எண்ணம்வைத்துக் கேட்பீரால்
அன்னமுத லற்று ஆக்கினைக்குள் ளாவீர்
நல்லவர்கள் நல்லாவார் நானுரைக்கே னம்மானை
செல்லத் திருகேட்கச் செப்புகிறார் நாரணரும்

அய்யா மக்களுக்கு அருளல்

சீமையைம்பத் தாறு தேச நருட்களையும்
நேர்மை யொழுங்காய் நிமைப்பொழுதில் வந்திடவே
செல்லவை குண்டச் சீமானு மப்பொழுது
வல்ல தவமும் மனதுளரா தேமுடித்து
உலக நருட்கள் ஒக்கவொரு மிக்கவரத்
தலமளந்த நாதன் தானினைத்தா ரம்மானை
வடக்குக் கிழக்கு வடமேற்கு நேர்மேற்கு
நடக்கும் படியே நல்லதிக்கு நாற்றிசையும்
அடங்கல் குடியிருக்கும் ஆட்களெல் லாம்வரவே
சாணார் முதலாய்ச் சாதிபதி னெட்டையுமே
நாணாம லோடிவர நாரா யணர்நினைத்தார்
நினைத்த வுடனே நிமிசம் பொறுக்காமல்
தினந்தோறும் வந்து சேரும் நருட்களது
எண்ணக் கூடாது எவராலு மன்போரே
திண்ணமுள்ள சாதி செப்பொண்ணா தன்போரே
சாணா ரிடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்லதுலுப் பட்டர்முதல்
சூத்திரன் பிரமா தொல்வணி கன்பறையன்
ஊத்திர நீசன் உழவ னுடன்குறவன்
கம்மாள னீழன் கருமற வன்பரவன்
வெம்மா நசுறாணி வேகவண்ட ரிடையர்
சக்கிலிய னோடு சாதிபதி னெட்டுகளும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10501 - 10530 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சீராக தெச்சணத்தில் சிறந்ததவஞ் செய்யலுற்றார்
ஆறு வருசத் துள்ளே யவர்நினைத்து
வாறு வகையெல்லாம் வந்து வழிப்படவே
நின்றார் தவசு நெடியநா ராயணரும்
குன்றாக் கடலில் கொண்ட வழிப்படியே
கடலில் மிகவே கண்டதெல்லாம் விள்ளாமல்
உடலுள் சூட்சம் ஒருவருக்குங் காணாமல்
அகமதுவே பூசித்து அதிகத் தவமிருந்தார்
தவப்புதுமை சொல்லித் தானுரைக்கக் கூடாது
ஈசர் முன்னாளில் இருந்தா ரொருதவசு
வாசக் குழலுமையை மதலை யுருவாக்க
வேட்டுவனுக் கீந்த விஞ்சைதனை நெஞ்சில்வைத்துக்
கூட்டுக் கிளியைக் குழந்தையுரு வாக்கவென்று
அத்தவந்தான் போதாது அய்யா இவர்தவத்தே
கற்றைக் குழலுமையாள் கரியமுற் காலமதில்
சூர னெனவந்தத் தோசப்பொல் லாதவனை
வீரத் தனமாய் வெட்டிச் சரமறுக்க
ஆறு முகமாய் அரியதொரு ஆண்பிள்ளைதான்
பேறுடனே நமக்குப் பிறக்கவே ணுமெனவே
சரவணப் பொய்கையிலே சாம்புவ னைநினைந்து
அரகரா அவள்தான் அன்றுநின் றதவமும்
இவர்தவத்துக் கொவ்வாது ஈசரரிலும் பெரிதாய்
அவர்தவமு மொவ்வாது அய்யா இவர்தவத்தே
சீதை தவசியதும் செப்பவொண்ணா தித்தவத்தே
நாத அரிச்சுனனும் நாட்டத் தவத்ததிலும்
எத்தனையோ கோடி இவர்தா னிருக்கும்தவம்
வித்தரிக்க வென்றால் வெகுமணிகள் சென்றிடுங்காண்
சொல்ல எளிதல்லவே சொன்னா லுலகிலுள்ளப்
பொல்லாத் பேரும் பொருந்தியிதைக் கேட்டாக்கால்
பாவந் தொலைந்திடுமே பாவிகட்கு மோர்நினைப்பாய்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10471 - 10500 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அலைகடற் கரை நாரா யணரெனப் புவியில் வந்தார்

விருத்தம்

வந்தந்த நாட்டி லுள்ள வன்குற்ற மதனைக் கேட்க
நந்திகோன் விபூதி சாற்றி நாடிய தவங்க ளேற்றி
முந்தநாள் மூவர்க் கெல்லாம் முதன்மையாய்ச் சாதித் தேற்றி
சந்ததஞ் சாகா விஞ்சைத் தலைவனாய்ச் சமைய வென்றே

விருத்தம்

நீதிய ரோமம் வீசி நினைவொன்றைக் கருணை வாசி
சாதிக ளுரைக ளாற்றிச் சடத்துற வாசை யற்று
வாதியாங் கார மற்று மலசல மதங்க ளற்று
ஆதியைக் கருணை நாட்டி அவர்தவம் புரிந்தா ரையா

விருத்தம்

ஆசையாம் பாச மற்று அனுதாரக் குளாங்க ளற்று
மாசதாம் வினைக ளற்று வாக்கலங் கார மற்று
நீசமாம் கலியை யற்று நீணிலத் தாசை யற்று
ஓசையாம் வெளியைத் தாண்டி ஒருவனைக்கண் டுகந்தாரையா

விருத்தம்

கண்ட வர்ப்பா லேற்று கண்சுழி முனையில் நாட்டிப்
பண்டவர் செகலில் பெற்ற படிமுறை தவறா நாட்டிக்
கொண்டவர் லோகந் தன்னைக் குமியவோர் தலத்தி லாக்கி
இரண்டது மறிய வென்றே இவர்தவம் செய்ய லுற்றார்

விருத்தம்

மனுதவ தாரங் கொண்டு வந்தவர் பிறக்க லுற்றார்
தனுமனு வோர்க ளெல்லாம் தழைத்துநீ டூழி வாழ்ந்து
மனுதர்மப் புவியைக் கண்டு மாள்வரா வாழ்வு வாழ்ந்து
துணிவுடன் மனதி லேற்றி சூரியத்தவசு நின்றார்

விருத்தம்

முற்பிதிர் வழிக ளெல்லாம் முதன்மைபோ லாக வென்றும்
கற்பினைப் படியே தோன்றிக் கலியுக மதிலே வந்த
அற்புத மடவா ரோடும் ஐவர்தம் குலங்க ளோடும்
செப்பியச் சாதி யெல்லாம் செயல்பெறத் தவசி யானார்

விருத்தம்

இத்தவ மதிலீ தெல்லாம் இயல்புடன் வசமே யாகக்
குற்றமே செய்வோ னீசக் கொடுகலி வழிகள் சாகக்
கர்த்தனார் கர்த்த னாகக் கலியுகத் தீர்வை யாக
உற்றவை குண்ட சுவாமி ஒருகுடைக் கரசும் பெற்றார்

நடை

நாரா யணரே நல்லவை குண்டமெனச்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10441 - 10470 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மிச்சமுள்ள தேவர் முழங்கிக் குரவையிடத்
தேவர் திசையெட்டும் செயசெய எனநெருங்க
மூவ ரதிசயமாய் மோடுவழி தாள்திறந்து
ஆரபா ரத்துடனே அவர்கள்வந்து பார்த்துநிற்க
வீரநா ராயணரும் வித்தாரத் தெச்சணத்தில்
பள்ளிகொண்டா ரென்று நாமம் பரந்திடவே
துள்ளியே சொரூபம் சுற்றினா ரம்மானை
வைகுண்ட மென்று மனுவோ ரறிந்திடவே
மெய்கொண்ட நாதன் மேவிநின்றார் தெச்சணத்தில்
யாம மிகக்கூறி அதிகத்திசை எட்டிலுள்ள
ஓமப் பசாசுகளை ஒதுங்கவுப தேசித்தார்
மேல்நடப்பை யெல்லாம் வித்தார நாரணரும்
தூல்நடப் பாகத் துறந்துதுறந் தேபடித்தார்
கண்டவர்க ளெல்லாம் கருத்தோ டறியாமல்
வண்டப் புலப்பமென வாக்குரைத் தேபோனார்
பத்துமா தம்வரையும் பார்நடப் புள்ளதையும்
முற்று மொருகுடைக்குள் உலகாள்வ தும்படித்தார்
எல்லா நடப்பும் இவர்படித்த தின்பிறகு
வல்லாண்மை யான வைகுண்டப் பெம்மானும்
உகஞ்சோ திக்க உற்றார்கா ணம்மானை
தவமே தவமெனவே தானிருந்து வையகத்தில்
பொறுதி சதமாய்ப் புண்ணியனார் தானிருந்து
உறுதியுட னையா உகஞ்சோ திக்கலுற்றார்
நாரா யணரும் நல்லவை குண்டமெனப்
பேரா னதுநிறைந்து புண்ணியனார் தெச்சணத்தில்
மனுநிறமாய் வந்து மனுவைச்சோ தித்தெடுக்கத்
தனுவை யடக்கித் தவசிருக்கா ரம்மானை

அய்யா வைகுண்டர் திருத்தவம்

விருத்தம்

உலகினில் மனுவாய்த் தோன்றி ஓர்இரு பதுநாலுக் கப்பால்
தலைமுறை வினைகள் போக்கிச் சடலத்துள் ளூற லோட்டி
மலைசெந்தூ ரலையி னுள்ளே மகரத்துள் ளிருந்து பெற்று

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10411 - 10440 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மாமுனி எழுதி அவனியறியும்படி அயச்சான்.
ஆயிது வல்லாமல் அய்யா நாராயண அய்யா
தர்மம் நித்திச்சுத் தவசிருக்கிற படியினாலே,
இன்றுமுதல் அவர் நிச்சித்திருக்கிற நாள்வரையும்
பூசை புனக்காரம் சேவித்தல் அர்ச்சனை
ஆராடு நீராடு தீபரணை சாந்தி
காளாஞ்சி கைவிளக்குக் காவடி காணிக்கை
தெருமுகூர்த்தம் கோபுரமுகூர்த்தம் திருநாள் முகூர்த்தம்
தேரோட்ட முகூர்த்தம் திருக்கொடி முகூர்த்தம்
கொடிமர முகூர்த்தம் குருமுகூர்த்தம் குரவை
குளாங்கூட்டம் கொலுவாரபாரம் ஆயுதம் அம்பு
அச்சுநடை ஆனைநடை அலங்காரம் மஞ்சணைக்
குளிநீராடல் இதுமுதலுள்ள நன்மை சுபசோபனம்
வரையும் அவர்க்கானதல்லவே, ஆனதினால் நீங்கள்
இதுவெல்லாம் இதுநாளைக்ககம் வீணில்  செலவிடாமலும்
விறுதாவில் நரகில் விழாமலுமிருக்கக்
கடவுளிது நாராயண வைகுண்டசாமி
திருவாக்குபதேசக் கருணையினால் மாமுனி எழுதி
அயச்ச வாசகம் என்று எவரும் அறியவும்

விருத்தம்

என்றிந்த விவர மெல்லாம் எழுதியே உலகில் விட்டு
நன்றிந்த ஆழ்ச்சை வெள்ளி நற்கதி ருதிக்கும் வேளை
பண்டிந்த மூலந் தன்னில் பஞ்சமி நேரந் தன்னே
குண்டத்தின் அரசு கோமான குவலய மதிலே வந்தார்

நடை


நாதன் குருநாதன் நாரா யணநாதன்
மாதவனுந் தெச்சணத்தில் மாமருந்து மாவடியில்
மணவைப் பதிமுகத்தில் மாதுகன்னிப் பார்வையிலும்
இணையானப் பஞ்சவரில் ஏற்ற அரிச்சுனனும்
மணமான நாதன் மகாபரனைத் தானாடி
வணங்குந் தவத்தால் வந்ததா மரைப்பதியில்
தெச்சணா மூலை தென்வாரி யற்றமதில்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10381 - 10410 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வாதை கோதை பயங்களையும் பிறவி
நாசமும் பொய்வினை சஞ்சாரமும்,
பீடை கோடை வாடை  தீர்க்கவும்,
பிள்ளையில்லாத பேர்க்குப் பிள்ளை கொடுக்கவும், 
கண்ணில்லாதபேர்க்குக் கண் கொடுக்கவும்,
தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும்,
சாம்பசதாசிவ சாமி  மூவரும்
சற்குணமாகியே தன்னாலொரு வேசமாகிச் சமைந்து,
சாதி உயர்கொண்ட சத்திமாதர் வழியிலே
சகலகுண நாராயண தீரசம்பன்னர் சாதி
வைகுண்டமாய்ப்  பிறந்திருக்கிறார்,
இனி நன்றாய்த் தெரியுமே.
ஆனதினால் பூமியிலே அடிபிடி அநியாயம்
இறை தெண்டம் கைக்கூலி அவகடம் பொய்ப்புரட்டு
அவர் செவியில் கேட்க வொண்ணாதென்றும்,
மகாகோடி தர்ம பாக்கியசாலியாய்ப் பூமியிலே
அதிகப் பாசமாய் விரித்து அவரருகிற் சூழ
அலங்கார தர்மமணியாய் நிறுத்தி அந்தரவீடு
லாடந்திறந்து அதன்வழி அரனடனம் திருநடனம்
ஆடல்பாடல் அங்ஙனே கண்ணோக்கி சகலதும்
பார்த்தாராய்ந்து இருப்பதால் அவரவர் நினைவிலிருக்கிற
தெல்லாம் அவருக்குத் தெரியாம லிருக்கிறதல்லவே
அதுகண்டு பதறி ஆரானாலும் அவரிட்டிருக்கிற
சட்டம்போல் நடந்து கொள்வாராகவும்.
அங்ஙனே நடக்கிலென்னு வருகில் அவர்
நிச்சித்திருக்கிற தேதியில் நடக்கும் படியேவரும்
அன்பாகிய மனுக்களுக்கு அனுகூலம்
1008 ஆமாண்டு மாசியில் தெச்சணம்
பள்ளிகொண்ட அய்யா நாராயண அய்யா வைகுண்டமாய்
தர்மம் நித்திச்சு எழுதின அறிவென்று

விளக்கவுரை :   
Powered by Blogger.