அகிலத்திரட்டு அம்மானை 9961 - 9990 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்னைக் கெணியாமல் என்கோவி லுள்ளேதான்
சன்னைசொல்லிப் பெண்களுடன் சரசமிட் டெச்சியிட்டான்
இருபேரு மொத்து இருந்தாலும் பழுதல்லவோ
ஒருவன் பெண்ணானை ஒருநம்பூ ரிபிடித்து
எனக்கேவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில்
மனக்குழலி தன்னுடைய மார்பின் கலைபிடித்து
இழுத்து வலித்து இழிக்கேடு செய்யவென்று
பழுத்துச் சழிந்த பருநம் பூரியவன்
மேல்தலையி லிட்ட முத்திரி கழற்றாமல்
மால் மயக்கத்தாலே மனங்கலங்கி நம்பூரி
மங்கை மனங்கலங்க வாரிப் பிடித்திழுத்துக்
கொங்கைதனைப் பங்கமதாய்க் கூறழிய வேகிழித்து
வேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்று
மோதி யென்பேரில் ஒருசாபங் கூறினளே
நாரணா கந்தா நானுனக்கு ஏவல்பண்ணிக்
காரணங்க ளாச்சு கடைசிநாள் தானாச்சு
உனக்குமிந் தப்பதிதான் உறவுகே டாச்சுதையா
எனக்கு மொருபிறவி இன்றுவந்து வாச்சுதென்று
செந்தூர் தலங்கள் சிலநாள் செல்லுமுன்னே
மண்தூர்ந்து போகுமென்று மாதுமிகச் சாபமிட்டாள்
சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்விழுந்து
சீவ னதுவிடவே சிவனைக்கண் ணோக்கினளே
நம்பூரி பங்கத் தாலேயந்த நாயகியும்
உம்பர்கோ னூரில் உயிர்விட்டாள் மாமுனியே
தவறாத மங்கை தானுரைத்தச் சாபமதால்
இதறா யெனக்கங்கு இருக்கமனங் கூடாமல்
எங்கேயினிப் போவோமென்று இதைவிட் டெழுந்திருந்து
மங்கைசொன்ன நாள்முதலாய்த் தெற்குவாரியிலே போயிருந்தேன்
அல்லா மலிங்கே அழிமதிகள் ரெம்பரெம்ப
வல்லாண்மை யாக வலுஞாயங் காணுதுகாண்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9931 - 9960 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மனுக்கண் காண வரவேண்டீ ரென்பிறகே
தனுக்கான ஏகமதில் சகலத்தோ ருமறிய
வாருங்கோ என்னுடனே வானவரே தேவர்களே
பாருங்கோ தேவர்களே பாங்காக எப்போதும்
வானமதில் நின்று வாத்தியங்க ளேற்றிவர
தானவர்கள் முதலாய்ச் சங்க முதல்வரவே
ஆகாச மீதில்நின்று எல்லோரும் போற்றிவர
வாகான சூரியனும் வந்து குடைநிழற்ற

செந்தூர் விட்டு வைகுண்டர் தெச்சணம் எழுந்தருளல்


நன்றான வைகுண்டர் நல்லசெந்தூர் தானும்விட்டு
வண்டாடுஞ் சோலை வாய்த்த வனங்கள்விட்டு
சோலைத் தெருக்கள்விட்டுச் செந்தூர் தலங்கள்விட்டு
ஆலைத் தெருக்கள்விட்டு அந்தூர் பதிகள்விட்டு
மண்டப மேடைவிட்டு மடங்கள் மிகக்கடந்து
தண்டமிழ்சேர் செந்தூர் தலத்தைவிட்டுப் போவதற்கு
நிற்கின்ற போது நிலையுள்ள மாமுனிவர்
நக்கன் மருகனுட நல்லடி யில்வீழ்ந்து
செந்தூர் தலத்தைவிட்டுத் தெச்சணா பூமியிலே
இந்த வேளைதனிலே எழுந்தருள வேண்டியதேன்
இங்கே பகைத்ததென்ன என்னுடைய நாயகமே
சங்க மகிழ்வேந்தே தானுரைக்க வேணுமென்றார்
அப்போது நாரா யணர்மகிழ்ந் தேதுரைப்பார்
இப்போது கேட்டதற்கு இயல்புரைக்கக் கேளுமினி
கேள்விகே ளாநீசன் கெடுவ தறியாமல்
நாள்வழியாய்ச்  சான்றோரை நியாயமில் லாதடித்தான்
சொன்னேன்புத்தி நீசனுக்குத் திருவனந்த மேயிருந்து
என்னையும் பாராமல் இளப்பமிட்டான் சான்றோரை
ஆனதால் நீசனுக்கு யானதிகக் கோபமிட்டு
நானவ் வூரும்விட்டு நாடிவந்தேன் செந்தூரு
இங்கே யிருந்தேன் யான்சிறிது காலமெல்லாம்
வெங்கப் பயல்சிலர்கள் வேசையுட னாசையினால்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9901 - 9930 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விருத்தம்

பண்டைமுறை யின்றுவெனக் குண்டமெனக்
கண்டுவரும் பலவாங் கிரி குண்டமே
பசுவாமனே சிசுபாலனே பலமானனே
தலமானனே பசுவா கிய நிசமே

விருத்தம்


தொண்டர்தனக் கென்றுவரு குண்டவை
குண்டமனாய்த் தெச்ச ணாபதி பூபனே
துளபமணி களபமேனி யழகொழுகு கிருபைமிகு
துவாரகா பதிக் கரசேயென தொழுது

விருத்தம்

சண்டன்வலி துண்டப்பட கொண்டக்கணை
விண்டத்தொடு துச்சா வில்லு வீரா
சாமியுன் றாளோ எங்கள் தலையின்மீது
தலையின்வழி தானே நடவாயே

விருத்தம்

துண்டப்பட வண்டச்சரம் கண்டப்படி
பொண்டத்தொடு துச்சா வில்லு தீரா
சுத்தாவுனக்கேற்றார்தமை வித்தானதில்
வித்தாய்துவாரகாபதிக்கரசேயெனத் தொழுதார்

நடை


தேவர் தொழுது திக்கெங்கும் போற்றிவரத்
தாவமுள்ள வானோர் சங்கீதம் பாடிவர
வேத மறையோர்கள் வேதக்கலை யோதிவர
நாதமொடு சங்கு நகரா முழங்கிவர
மத்தள மேலோர் மடமடென் றேற்றிவரத்
தித்தி தித்தியெனத் தேவரெல்லாம் பாடிவரச்
சாத்திர வேத சாதிமுறை யோதிவர
நால்றிசையும் போற்றி நாற்சாதி யும்வரவே
அரம்பையர்க ளாடி ஆலத்தி யேந்திவர
வரம்பகலா மாமுனிவர் வரிசைமிகக் கூறிவர
நாதாந்த வேதம் நவில்வோர் நெருங்கிவர
மாதவர்க ளெல்லாம் மலர்மாரி தூவிவர
கண்டங் ககமகிழ்ந்து கண்ணான நாரணரும்
கொண்டாடித் தேவரொடு கூறுவா ரன்போரே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9871 - 9900 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அரிஹரி அரஹரா சிவசிவா
என்றுசிலர் ஆடியே பாடி வரவே

விருத்தம்

தொண்டரவர் கண்டுவை குண்டரடி கண்டு
தொழ சூழவளைந் தேழியல் படர்தே
சூரர்பதி நாராயணர் வீரர்பத
மோதிவரச் சூராதி சூர ரெனவே

விருத்தம்

செண்டையொடு தண்டைமணி டண்டடம
டண்டமெனத் தேவர்சே வித்து வரவே
சிவநமசி வாயமெனும் ஓம்நம சிவாய
மென்னும் சேவித்திரு புறமும் வரவே

விருத்தம்

அண்டமுர செண்டுமணி டுண்டும டுண்டு
மென ஆகாய மீதில் வரவே
அனவரத கோலாக லாதிநாரா யணா
வென அமரரிசை கூறி வரவே

விருத்தம்

மத்தள முடுக்குபல வாத்திய
மடடென வானமதில் நின்ற திரவே
மலர்மாரி சலமாரி தினமாரி தூவியே
வானவர்க ளிசை கூறவே

விருத்தம்

தத்தளங் கிடகிட தொம்மெனத் தொம்
மெனச் சங்கீதக் காரர் வரவே
சகலகலைக் கியானவேத சாதிமுறை யோதி
மிகு சாஸ்திரக் காரர் வரவே

விருத்தம்


தித்தங்கிண தித்தங்கிண தித்தங்கிண
தித்தியெனச்சில தேவர் கூறி வரவே
சிவசிவ சிவசிவ சிவவென்று
சிலதேவர் சேவித் தியல்கூறி வரவே

விருத்தம்

நித்தங்கிண சித்தங்கிண உத்தங்கிண
தித்தியென நேரியர் சீரியல் கூறவே
நீலங்கிரி வாலங்குரு நீயென்குரு தாயென்குரு
நீதென் குருவெனப் போற்றினார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9841 - 9870 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நீருரைத்த சட்டமதில் நிலைதவறோம் நாங்கடியார்
காரும்நீ ரென்று கந்தன் அடிதொழுதான்
அப்போது வைகுண்ட ராசர்மிக வுரைப்பார்
இப்போது சொன்னதெல்லாம் எனக்குநிச மாகவென்றால்
உன்கோ புரத்தில் உயர்ந்தவட மேல்மூலையில்
பின்கோ புரங்காணப் பிளந்துபோ டென்றுரைத்தார்
அல்லாம லுன்னையென்று அவனியுண் டாக்கிவைத்த
செல்லாச் சிலையைத் திருப்பிவிடு தெற்குமுகம்
உலகோ ரறிய ஒருவாயி லுமடைத்துக்
கலகமாய்க் கண்மூடிக் கவிழ்ந்திருப்பா யோவென்றார்
அல்லா தெனைமறந்து அழிச்சாட்ட மாய்நடந்தால்
பொல்லா தவனே பெருவிலங்கு சிக்குமென்றார்
அப்போது கந்தன் ஆவி மிகக்கலங்கி
இப்போது சொன்னதெல்லாம் யானினி செய்வனென்று
ஆதி யுரைத்ததுபோல் அடியார்நடப்போ மென்றார்
சோதி வைகுண்டம் சொல்வா ரவரோடு
நிலையழி யாதிருங்கோ நீதியாய் நின்றிடுங்கோ
உலகறிய நானும் ஒருநெல் லுடைக்குமுன்னே
பலசோ தனையும் பார்த்துநடுத் தீர்ப்புசெய்வேன்
கலகமதுதானகற்றி கடலில்விஞ்சை பெற்றபடி
விடியும் பொழுது வேசம் பலதணிவேன்
பிடியு மனுவுடனே பெரியயுக மாளவைப்பேன்
வருவோ மொருநெல் மாறி யெடுக்குமுன்னே
கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ
என்று வைகுண்டம் இத்தனையுங் கந்தனுக்கும்
மன்றுக்கு மென்றும் மறவாதுங் கோவெனவே
அதைவிட் டவர்நடக்க ஆகாயங் கொண்டனரே
இதைவிட் டவர்நடந்து ஏகாய மாகிவர

வானோர்கள் வைகுண்டரைப் போற்றுதல்


விருத்தம்


அண்டரொடு தெண்டனிட் டெண்டிசைகள்
நின்றுவரும் ஆதவனைச் சூழ் கணம்போல்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9811 - 9840 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நன்மை யினிக்காணும் நாரணன்கண் ணல்லாது
தின்மையென்ற சொல்லு ஆகாது கண்டாயே
ஆனதா லுன்றனக்கு யானினிமேல் சொல்லும்புத்தி
வானஞ்சூழ் வையகங்கள் வாழுகின்ற மண்டபங்கள்
எத்தனையோ அத்தனையில் இருக்கின்ற தேவரெல்லாம்
அத்தனை பேரும் அறியும் படிசொல்லுவேன்
காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
பூசையே ராதிருங்கோ பெலிதீப மேராதுங்கோ
ஆசைவை யாதிருங்கோ அவகடஞ் செய்யாதுங்கோ
ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ
மாய நினைவு மனதில் நினையாதுங்கோ
வைகுண்டா வென்று மனதில் நினைத்திருங்கோ
பொய்கொண்ட தேரோட்டம் புனக்கார மேராதுங்கோ
தாதி கைகாட்டல் சப்பிரங்க ளேறாதுங்கோ
மோதிப்பே சாதிருங்கோ மோகம்பாராட் டாதுங்கோ
ஆலத்தி கைவிளக்கு ஆராட்டுப் பாராதுங்கோ
சாலத்தீ பாராதுங்கோ சகலபூ ஏராதுங்கோ
கொழுந்து மஞ்சணைமாலை குப்பையொடு சந்தனமும்
விழுந்து நமஸ்காரமுதல் வேண்டாமென்று சொல்லிடுங்கோ
கூவென் றுரையாதுங்கோ கொக்கரித்துப் பேசாதுங்கோ
ஓவென்றுரை யாதுங்கோ ஓமமுறை யேராதுங்கோ
தீபரணை காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோ
ஆபரணம் பூணாதுங்கோ அன்னீதஞ் செய்யாதுங்கோ
எல்லாம் வெறுத்திருங்கோ இத்தனைபோ லுள்ளதெல்லாம்
அல்லாமல் மீறி யாரொருவர் செய்ததுண்டால்
வல்லாத்த கோபம் வரும்வை குண்டருக்கே
நல்லோரே யாகவென்றால் நியாயமதி மேநில்லும்
என்று வைகுண்டம் இயம்பக்கந் தனுரைப்பான்
மன்று தனையளந்த வைகுண்ட நாரணரே.

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9781 - 9810 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆதி சர்வேஸ்வரனாகிய அவனியைம்பத்தாறு
சீமையும் அடக்கி அரசாளவும் ஆதிசர்வ காலமும்
அழியாத் திருவுளமாயிருந்து அரசாள்வாரெனவும்
ஆதிராமச் சந்திர சூரிய நாராயணர்க்கு ஆதியாகமத்தின்
படியாகவே ஆதிவைகுண்டம் பிறந்தாரெனவே,
அண்டர்களும் முனிவர்களும் தேவர்களும்
அதிக சகல மாமுனிவர்களும் எல்லோருங் கூடியிருந்தாராய்ந்து
தொண்டர்தமக் கென்றுவளர் கொன்றையணி கயிலையில்
மண்டலம் புகழச் சிவனாருடைய கிருபையினாலே
இன்றவர் கைலையங்கிரியில் எழுதினார்.

வைகுண்டர் முருகனுக்கு அருளல்

நடை

அன்றந்தத் தேவர்முனி எல்லோருந் தாங்கூடி
சென்றந்தக் கயிலை செகத்தூணி லேதரித்து
வைகுண்டர் பாதமதை வாழ்த்திக் குவித்துவர
மெய்கொண்ட நாதன் வேலவன்செந் தூரணுகி
நடக்க அறுமுகனும் நடுங்கி மிகப்பதறி
வடக்குமுக மாய்விழுந்து வைகுண்ட ரைப்போற்றி
அப்போது வேலவனை ஆதிவைகுண் டர்பார்த்துச்
செப்புகிறார் குண்ட சிவநாத கண்மணியும்
நாடுகேட் கப்போறேன் நாரணன் நான்தானும்
கேடு வருமுனக்குக் கேள்விகே ளாதிருந்தால்
இத்தனை நாளும் என்னைக் கெணியாமல்
புத்தியறி யாதவர்போல் புலம்பினீ ரித்தனைநாள்
இனிவைகுண் டம்பிறந்து ஏகமொரு குடைக்குள்
மனுவொரு சொல்லாள மகாதர்ம மேநினைத்து
மாய்கை யறுத்து மாற்றான் கருவறுத்துத்
தோயக் குழிமூடி தொல்புவியைத் தானாள
நல்லோர்க ளெடுக்க நான்போறேன் கண்டாயே
கல்லார் தமக்குக் கசப்பினிமேல் கண்டாயே
தர்மவை குண்டம் தான்பிறந்தேன் இப்போது
தர்மச் சிறப்புத் தானினிமேல் கண்டாயே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9751 - 9780 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஈசுரர் தாமே கலியனையும் பிறவிசெய்து
இருநூற்று முப்பது நூறாயிரம் வருஷமாகக்
கட்டங்கொடுமை செய்து அவனியரசாண்டு
கன்னிமக்களாகிய சான்றோர் படுகிற மறுக்கம் பொறுக்காமலே,
வியாகரிடை முனிவர் வகுத்த ஆகமத்தின் படியே
மகாபர நாராயணர் தாமே வைகுண்டமாய்ப் பிறந்து
ஒரு குடைக்குள் 1008 ஆம் ஆண்டு மாசியிலே
அஞ்சி மூவஞ்சி தேதியிலே அவனிமனுவிலே
ஆதிச்சாதியிலே மனுநிறமாக வந்திருந்து
சாதி பதினெண்ணையும் ஒருதலத்தில்
வருத்தியே தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும்
சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்க்கவும்
சந்ததியில்லாத பேர்க்குச் சந்ததி கொடுக்கவும்
தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும்
சாதைவாதை பேய்களைச் சரிவிலே எரித்துக் கரியச்
செய்யவும் தரணியேழு கணக்கையும் கேட்டு மிக
சத்தியாய் அன்பு மனிதருக்காகவே தரணியில்
நாலுதரம் சளங்கள் படவும்
சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்தி
பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்;
சண்டையாய்க் கலியனைத் தன்னாலே போக்கவும்
தர்மமாகத் தரணியோர் குடைக்குள்ளாளவும்
தங்கநவரத்தினத் திருமுடி சூடியே
சகலமாபதி மேடைகள் பாவிக்கவும்
தவசு கிருபை பெறவும்,
தங்கமணி சக்கராயுதக் கொடி ஒற்றைக்கொடி கட்டவும்
சகலரும் புகழவரும் தர்மராசாவாகவும்
சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டவும்
அஷ்டதிக்குப் பதினாலு லோகமுமறிய அசையா
மணியொன்று கட்டியே அரசு பாவிக்கவும்,

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9721 - 9750 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கடலை ஓடையாக்கிக் காயாம்பு வண்ணர் ஓடமேறியே
கறைக்கண்டர் ஓணிதள்ளவே கன்னியிலே தூண்டலுமிட்டு
அக்குண்டோமசாலியையும் வதைத்து மறுயுகம் தோன்றியே
தில்லைமலாலன் மல்லோசி வாகனென்ற இருபேருடைய
அநியாயம் பொறுக்காமலே அவனிருவரையும் சங்காரம் செய்து
அடுத்த யுகம் தோன்றியே, சூரன் சிங்கமுகா சூரன் செய்த அநியாயம்
பொறுக்காமலே ஆதித்திருநெடுமால் ஆறுமுகக் கடவுளென
நாமமுங் கூறியே அவனையும் சங்காரஞ் செய்து
அவ்வுகத்திலே பிறந்த அசுரன் இரணியனையும் வதைத்து
அந்த யுகமும் அழித்து அடுத்த யுகம் தோன்றியே,
அரக்கன் இராவணசங்காரமுஞ் செய்து
சீதாப்பிராட்டியினுடைய சிறையையு மீட்டித்
தென்னிலங்காபுரி அரக்கரையும் கொன்று
அக்கிளையொழிய அக்குலமும் அறுத்து
அடுத்தயுகம் தோன்றியே; பஞ்சவர்க்கு பகாரியாகியே
பகைத்தத் துரியோதனனையும் வதைத்துப் பஞ்சவர்க்குக்
குருநாடு பட்டமுஞ் சூட்டியே அரசாள வைத்து
கலிவருவானெனக் காற்று வீசினதைக் காதிலே கேட்டுக்
கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கிப்
பச்சை மாலை சுமந்திருந்த பயமாயக் கூட்டைப்
பர்வதாமலை யுச்சியிலே கிடத்தி, கங்கையுங் கண்டு
கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய
கற்பையுஞ் சோதித்துக் கயிலையங்கிரி சென்று
ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து
இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து
ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி
ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத்
தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திர காளியிடத்தில்
பாலரையுங் கொடுத்து ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி
பள்ளிகொண்டிருந்ததும்; தேவாதிகளுடைய வாக்கினாலே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9691 - 9720 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வாரு மெனஅயச்சார் மகாபரனும் மாலோனும்
சேரும் வைகுண்டம் சிணம்பிறந்தா ரென்றுசொல்லி
ஆனதினா லிப்போ யாங்கள்கொடு போறோமென்றார்
நானதுகள் கேட்டு நன்றா யறிந்தோமென்றார்
அப்போது வைகுண்ட ராசர் மிகவுரைப்பார்
இப்போது வானவரே எல்லோரு மென்கூட
வாருங்கோ வென்று வைகுண்டர் சொல்லலுற்றார்
சீருங் கோபால சிவனே செயலெனவே
வானவர்கள் தேவர்முதல் மறைமுனிகள் சாஸ்திரிகள்
தானவர்க ளுங்கூட சங்கீதம் பாடிவரச்
சந்திர சூரியர்கள் தம்மானக் குடைபிடிக்கச்
சுந்தரஞ்சேர் வைகுண்டம் தோன்றிவந் தாரெனவே
வேத மறையோரும் விசய முனிவர்களும்
நாதாந்த வேதமதை நன்றாய்த் தெளிந்தெடுத்துக்
கோமான் வளரும் கோவேங் கிரிதனிலே
நாமாது வாழும் நல்லதிரு மண்டபத்தில்
தங்க நிறத்தூணில் சதுர்மறையோர் தாங்கூடி
எங்கு மகிழ எழுதினா ரம்மானை 

திருவாசகம் - 2


ஏகமொரு பரமானதும் இம்மென்றொரு வாயுவில்
சத்தி வளைந்ததும் சத்தியிலே சிவம் தோன்றியும்
சிவத்தில் சத்தி தோன்றியும் சத்தியில் நாதம் தோன்றியும்
நாதத்தில் விஷ்ணு தோன்றியும் ருத்திரர் மயேசுரர்
உலகம் தோன்றியும் உலகில் அண்டபிண்டம் தோன்றியும்
பிண்டத்தில் குறோணி அசுரன் தோன்றியும்
குறோணி வானலோகம் விழுங்கவும்
கோபத்தால் விஷ்ணு சென்று குறோணியைத் துண்டாறாய்
வெட்டி உலகில் தள்ளவும், துண்டமென்றில்
குண்டோமசாலி பிறக்கவும் சுகசோபன
மண்டபமலைய விளித்ததும் திருமருகரது கேட்கவும்
தேவாதிகளை நாங்கிலாக்கி வரையானதைத் தூண்டிலாக்கிக்

விளக்கவுரை :   
Powered by Blogger.